தயாரித்தல், பயன்கள் - மெத்திலீன் குளோரைடு (டைகுளோரோ மீத்தேன்) | 11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes
மெத்திலீன் குளோரைடு (டைகுளோரோ மீத்தேன்)
தயாரித்தல்
மெத்திலீன் குளோரைடை பின்வரும் முறைகளில் தயாரிக்கலாம்.
1) குளோரோஃபார்மின் ஒடுக்க வினை
a) Zn/HCl ஐப் பயன்படுத்தி ஒடுக்கம் செய்தல்
Zn+HCl உடன் குளோரோஃபார்மை ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் போது மெத்திலீன் குளோரைடு உருவாகிறது.
b) H2/Ni ஐப் பயன்படுத்தி ஒடுக்கம் செய்தல்
H2/Ni உடன் குளோரோஃபார்மை ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் போது மெத்திலீன் குளோரைடு உருவாகிறது.
மீத்தேனின் குளோரினேற்றத்தால் மெத்திலீன் குளோரைடு உருவாகிறது.
மெத்திலீன் குளோரைடின் பயன்கள்
மெத்திலீன் குளோரைடானது
i) காற்றுத் திவலை உந்தி செலுத்தும் ஆற்றல் மூலம்
ii) பெயிண்டுகளை நீக்கும் கரைப்பான்
iii) மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கரைப்பான்
iv) உலோகம் நீக்கும் கரைப்பான் ஆகியனவற்றில் பயன்படுகிறது.