Posted On : 04.01.2024 09:26 am
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
ஹேலோ அரீன்களில் காணப்படும் C-X பிணைப்பின் தன்மை
ஹேலஜன் அணுவானது தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள p-ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது. இது பென்சீன் வளையத்தில் உள்ள π-ஆர்பிட்டால்களுடன் இடையீடு செய்வதால் π-ஆர்பிட்டால்களின் நீட்டிக்கப்பட்ட உடனிசைவு நிகழ்கிறது.
ஹேலோ அரீன்களில் காணப்படும் C-X பிணைப்பின் தன்மை
ஹேலோ அரீன்களின் கார்பன் அணுவானது sp2 இனக்கலப்பு நிலையில் காணப்படுகிறது. இந்த sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் குட்டையானவை. மேலும் பிணைப்பு எலக்ட்ரான் இரட்டையினை இறுக்கமாக பிணைத்து வைத்துள்ளன.
ஹேலஜன் அணுவானது தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள p-ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது. இது பென்சீன் வளையத்தில் உள்ள π-ஆர்பிட்டால்களுடன் இடையீடு செய்வதால் π-ஆர்பிட்டால்களின் நீட்டிக்கப்பட்ட உடனிசைவு நிகழ்கிறது. இந்த எலக்ட்ரான்களின் உள்ளடங்காத் தன்மையானது C-X பிணைப்பிற்கு இரட்டைப் பிணைப்பு பண்பினைத் தருகிறது. ஹேலோ பென்சீனின் உடனிசைவு அமைப்புகள் பின்வருமாறு.
C-X பிணைப்பின் இந்த இரட்டை பிணைப்பு தன்மையினால், பிணைப்பு நீளம் குறைவாகவும் ஹேலோ ஆல்கேன்களைக் காட்டிலும் அதிக வலிமையுடையதாகவும் உள்ளது.
எடுத்துக்காட்டு
11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Nature of C- X bond in haloarenes in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : ஹேலோ அரீன்களில் காணப்படும் C-X பிணைப்பின் தன்மை - : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.