Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
   Posted On :  28.12.2023 07:27 am

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

26. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

விடை :

சமநிலையை அடைந்த பின்னர் மீள் வினைகள் நிகழாமல் நின்று விடுவதில்லை.

சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் இரண்டும் ஒரே சமயத்தில் சமமான வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

மேலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் உணரப்படுவதில்லை.

எனவே வேதிச்சமநிலை இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது.


27. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு வினையில், சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது. Qன் மதிப்பும் மாறிலியாக இருக்குமா? விவரி.

விடை :

● Q ன் மதிப்பு மாறாமல் இருக்காது

வினை தொடர்ந்து நிகழும்போது, வினைபடுபொருள்கள் மற்றும் வினை விளைபொருள்களின் செறிவு மற்றும் Q ன் மதிப்பும் சமநிலை அடையும் வரை மாறிக் கொண்டே இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் Q-ன் மதிப்பு KC க்கு சமமாகிறது.

சமநிலை அடைந்த பின்னர் Q-ன் மதிப்பில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை.


28. Kp மற்றும் Kc க்கு இடையேயான தொடர்பு யாது? Kpமதிப்பானது Kcக்கு சமமாக உள்ளவாறு ஒரு எடுத்துக்காட்டினை தருக.

விடை :

Kp = KC (RT)Δng

Δng = (np – nr)g

np = nr எனில் Δng = 0, எனவே Kp = KC

.கா. H2(g) + I2(g)   2HI(g)

Δng = 2-2 = 0, எனவே Kp = KC


29. வாயுக்களின் ஒருபடித்தான சமநிலை வினையில் வினைவிளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் KC ஆனது Kpயை விட அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா?

விடை :

● np > nr எனில் Δng = +ve எனவே KC ஆனது Kp யை விட குறைவாக இருக்கும்.

.கா. PCl5(g) = PCl3(g) + Cl2(g)

Δng = 2 – 1 = 1

Kp = KC (RT)1

Kp > KC


30. வினைகுணகத்தின் (Q) எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?

விடை :

● Q > KC எனில் வினை பின்னோக்கு திசையில் நிகழ்கிறது.

அதாவது வினைபடு பொருள் உருவாகிறது


31. A2(g) + B2(g) 2AB(g); ΔH –எதிர்குறி என்ற வினையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை வினை பொருட்களின் மூலக்கூறுகளை குறித்துக் காட்டுகின்றன. (A - நீலம், B - சிவப்பு

மூடிய அமைப்பு


i) Kp மற்றும் KC சமநிலை மாறிலியினை கணக்கிடுக.

ii) காட்சி (x), (y) ஆகியவற்றால் குறிக்கப்படும் வினைக்கலவையில் வினையானது எந்த திசையில் நடைப்பெறும்

iii) சமநிலையில் உள்ள கலவையில் அழுத்தத்தை அதிகரித்தால் என்ன விளைவு நிகழும்.

விடை :


எனவே முன்னோக்கு வினை நடைபெறும்.

 iii) சமநிலையில் np = nr = 2; Δng = 2 – 2 = 0

எனவே அழுத்தத்தை அதிகரிப்பது சமநிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை


32. லீ - சாட்லியர் தத்துவம் வரையறு.

விடை :

சமநிலையில் உள்ள அமைப்பின் மீது ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும்போது, சமநிலையானது அப்பாதிப்பினால் ஏற்படும் விளைவினை ஈடு செய்யும் திசையில் தானே நகர்ந்து அவ்விளைவினை சரி செய்து கொள்ளும்.


33. கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக

a) H2 (g) + I2 (g) 2 HI

b) CaCO3 (s) CaO (s) + CO2 (g) 

c) S(s) + 3F2 (g) SF6 (g)

மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.

விடை :

a) Δng = 2 – 2 = 0; எனவே கனஅளவை அதிகரிப்பதாலோ அல்லது குறைப்பதாலோ சமநிலையில் எவ்வித மாற்றமுமில்லை.

b) Δng = 1 – 0 = 1; Δng = +ve எனவே கனஅளவை அதிகரிப்பதால் வினை முன்னோக்கி நகர்ந்து அதிக அளவு விளைபொருளை உருவாக்கும்.

c) Δng = 1 – 3 = - 2; Δng = -ve எனவே கன அளவை குறைப்பதால் வினை முன்னோக்கி நகர்ந்து அதிக அளவு விளைபொருளை உருவாக்கும்.


34. நிறைதாக்க விதியினை வரையறு.

விடை :

எந்த ஒரு நேரத்திலும், கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், ஒரு வேதிவினையின் வேகம் என்பது அந்நேரத்தில் உள்ள வினைபடு பொருள்களின் மோலார் செறிவுகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

வினைவேகம் α [வினைபடுபொருள்]x


35. சமநிலை வினையின் திசையினை எவ்வாறு கணிப்பாய் என்பதை விவரி.

விடை :

Qன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு நாம் வினையின் திசையினைத் தீர்மானிக்க இயலும்.



36. 3H2(g) + N2 (g) 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி Kp மற்றும் Kc க்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

விடை :

'a' மோல் நைட்ரஜன் மற்றும் ‘b' மோல் ஹைட்ரஜன் ஆகியன 'V' கனஅளவுள்ள ஒரு கலனில் எடுத்துக் கொள்ளப்பட்டு அம்மோனியா உருவாக்கப்படும் வினையைக் கருதுக. 'x' மோல் நைட்ரஜன் '3x' மோல் ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து 2x மோல் அம்மோனியா உருவாகிறது என்க.

N2(g) + 3H2(g) 2NH3(g)



37. சமநிலை மாறிலி மதிப்பு

Kc = [NH3]4 [O2]5 / [NO]4 [H2O]6

கொண்ட ஒரு சமநிலை வினைக்கான, தகுந்த சமன்செய்யப்பட்ட வேதி சமன்பாட்டை தருக

விடை :

4NO + 6H2O 4NH3 + 5O2


38. சமநிலையில் உள்ள ஒரு வினையில், மாறாத கனஅளவில் மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?

விடை :

மாறாத கன அளவில், சமநிலையில் உள்ள ஒரு அமைப்பில் ஒரு மந்த வாயு சேர்க்கப்படும் போது, கலனில் உள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அதாவது வாயுக்களின் மொத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

ஆனால் வினைபடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களின் பகுதி அழுத்தங்கள் அதிகரிப்பதில்லை.

எனவே சமநிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.


39. Kp மற்றும் KC  க்கு இடையேயான தொடர்பினை வருவி.

விடை :

Kp மற்றும் KC ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு: வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகிய அனைத்தும் நல்லியல்பு வாயு நிலைமையில் உள்ள பின்வரும் பொதுவான வினை ஒன்றை நாம் கருதுவோம்

xA + yB lC + mD

சமநிலை மாறிலி KC ன் மதிப்பு

KC = [C]l [D]m / [A]x [B]y ....... (1)

மற்றும் Kp ன் மதிப்பு

Kp = PCl × PDm / PAx  × PDm....... (2)


நல்லியல்பு வாயுச் சமன்பாட்டின் படி 

PV = nRT or P = n/v RT எனவே, பகுதி அழுத்தம் P = மோலார் செறிவு × (RT) மேற்கண்டுள்ளதன் அடிப்படையில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளைப் பொருள்களின் பகுதி அழுத்தங்களை பின்வருமாறு எழுத இயலும்.

PxA = [A]x [RT] x

Py B = [B]y [RT] y

Pl C = [C]l [RT]l

PmD = [D]m [RT] m

சமன்பாடு (2) ல் பிரதியிட


சமன்பாடு ( 1 ) மற்றும் ( 4 ) ஒப்பிடும்போது

kp = Kc (RT)(Δng) ....... (5)

இங்கு

Δng என்பது வாயு நிலைமையில் உள்ள வினைவிளைப்பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும், வினைபடுபொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடாகும்.

எனவே, பின்வரும் தொடர்புகளை நாம் பெறலாம்.

Δn= 0 எனும்போது, Kp = KC (RT)° = KC

உதாரணம்: H2(g) + I2(g) 2HI(g)

Δng ஆனது நேர்குறி மதிப்பை பெறும் போது

Kp = KC (RT)+ve

Kp > KC

PCl5(g) PCl3(g) + Cl2(g) 

Δng ஆனது எதிர்குறி மதிப்பை பெறும் போது

Kp = KC (RT)-ve

Kp < KC

எடுத்துக்காட்டு: 2SO2(g) +O 2(g) 2SO3(g)


40. ஒரு லிட்டர் கனஅளவுடைய ஒரு மூடியகலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலியின் மதிப்பினைகணக்கிடுக.

விடை :

கனஅளவு 1லி


= 0.9 மோல் லி-1


41. SrCO3 (s) SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு Kp = 2.2 × 10-4. வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.

விடை :

SrCO3(s) SrO(s) + CO2(g)

Kp = 2.2 × 10-4 ; Δng  = 1 – 0 = 1 ; Kc = ?

T = 1002K; R = 0.0821 lit atm K-1 mol-1

Kp = Kc (RT)Δng

Kp = Kc (RT)        

KC = Kp /RT

= 2.2 × 10-4 / 0.0821 × 1002 

= 0.0267 × 10-4

= 2.67 × 10-6 mol lit-1


42. HI சிதைவடைதலை அறிந்து கொள்ள, ஒரு மாணவன் காற்று நீக்கப்பட்ட 3L குடுவையில் 0.3 மோல் HI வாயுவினை நிரப்புகிறான், 500°C ல் வினையினை நிகழ்த்துகிறான். சமநிலையில் HIன் செறிவு 0.05M என அவன் அறிந்துகொள்கிறான். இவ்வினைக்கு Kp மற்றும் KC மதிப்புகளை கணக்கிடுக.

விடை :

V = 3L

HIன் ஆரம்ப மோல்கள் = 0.3

HI ன் ஆரம்ப செறிவு = 0.3/3 = 0.1M

சமநிலையில் HIன் செறிவு = 0.05 M 

வினைப்பட்ட HIன் செறிவு = 0.1 - 0.05

= 0.05 M


Kc = 0.25

Δng = 2 - 2 = 0

Kp = KC  = 0.25


43. 500ml குடுவையில் 1 மோல் CH4 , 1மோல் CS2 ,  2 மோல் H2S மற்றும் 2 மோல் H2 கலக்கப்படுகிறது. இவ்வினையின் சமநிலை மாறிலி KC = 4×10-2 mol2 lit-2. இவ்வினையானது சமநிலையை அடைய எந்த திசையில் நகரும்?

விடை :

CH4(g) + 2H2S(g) CS2(g) + 4H2(g)

KC = 4 × 10-2 mol2 lit-2 V = 500ml = ½ L


Q = 16

Q = 16 ; KC = 4 × 10-2

Q > KC எனவே வினை பின்னோக்கு திசையை நோக்கி நகரும்.


44. H2S(g) H2(g) + ½ S2 (g) என்ற வினையில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் KC = 4 × 10-2 எனில்.

i) 2H2S (g) 2H2 (g) + S2 (g) 

ii) 3H2S (g) 3H2 (g) + 3/2 S2 (g)

ஆகிய கொடுக்கப்பட்டுள்ள வினைகளுக்கு Kc மதிப்புகளைக் கணக்கிடுக.

விடை :

H2S(g) H2(g) + ½ S2(g)     

i) 2H2S(g) 2H2(g) +  S2(g)    

ii) 3H2S (g) 3H2(g) + 3/2 S2 (g)

KC

K1C = (KC)2

K11C = (KC)3

KC = 4 × 10-2

எனவே K1C = (KC)2 = (4 × 10-2)2 = 16 × 10-4

K11C = (KC)3 = (4 × 10-2)3 = 64 × 10-6


45. 1 L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில் கணக்கிடுக.

விடை :

mN2 = 28g; mH2 = 6g ; mNH3 = 17g; V = 1L


சமநிலையில் N2 ன் எடை = சமநிலையில் மோல் எண்ணிக்கை × மோலார் நிறை 

= 0.5 × 28 = 14g

சமநிலையில் H2 ன் எடை = சமநிலையில் மோல் எண்ணிக்கை × மோலார் நிறை 

= 1.5 × 2 = 3g


46. XY2 சிதைவடைதலின், சமநிலை இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது

2XY2 (g) 2XY (g) + Y2 (g)

பிரிகை வீதம் x ஒன்றை விட மிகச்சிறிதாக இருந்தால் 2Kp = PX3 என நிருபி. இங்கு P ஆனது மொத்த அழுத்தம் மற்றும் Kp என்பது, XY2 ன் சிதைவடைதல் மாறிலி ஆகும்.

விடை :



47. மொத்த அழுத்தம் 1.00 bar மற்றும் 800Kல் 1 மோல் A2(g) மற்றும்  மோல்B2 (g)யினை கொண்டு ஒரு மூடிய கலன் நிரப்பப்படுகிறது. சமநிலையில், கலவையிலுள்ள பகுதிப் பொருள்களின் அளவினை கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: வினையின் Kp மதிப்பு 1)

A2 (g) + B2 (g) 2AB(g) 

விடை :

[A2] = 1 – x = 1 – 0.33 = 0.67

[B2] = 1 – x = 1 – 0.33 = 0.67

[AB] = 2x = 2 × 0.33 = 0.66


48. வான்ட் ஹாஃப் சமன்பாட்டினை வருவி.

விடை :

சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப் பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை இச்சமன்பாடு தருகிறது. திட்டக்கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கும் சமநிலைமாறிலிக்கும் இடையேயான தொடர்பு.

ΔG° = -RT ln K........... (1)

ΔG° = ΔH° - T Δ S° ........ (2)

என நாம் அறிவோம்.

(2) (1) ல் பிரதியிட

-RT ln K = ΔH° - T Δ S° மாற்றியமைக்க

ln K = -ΔH°/RT + ΔS°/R ....... (3)

சமன்பாடு (3) வெப்ப நிலையினைப் பொறுத்து வகையீடு செய்ய,

d(ln K) / dT = ΔH°/RT2....... (4)

சமன்பாடு (4) ஆனது வாண்ட்ஹாஃப் சமன்பாட்டின் வகையீட்டு வடிவம் எனப்படுகிறது.

சமன்பாடு (4) T1 மற்றும் T2 மற்றும் அவ்வெப்ப நிலைகள் சமநிலை மாறிலிகள் முறையே K1 மற்றும் K2 ஆகிய எல்லைகளுக்கிடையே தொகையீடு செய்க.


சமன்பாடு (5) ஆனது வாண்ட் ஹாஃப் சமன் பாட்டின் தொகையீட்டு வடிவமாகும்.


49. N2 (g) + 3H2 (g) 2NH3(g) என்ற வினையில் 298K ல் Kp ன் மதிப்பு 8.19×102 மற்றும் 498K-ல் 4.6 × 10-1 ஆகும். வினைக்கான ΔHo னை கணக்கிடுக.

விடை :

Kp1 = 8.19 × 102 ; T1 = 298 K

Kp2 = 4.6 × 10-1 ; T2 = 498 K

ΔH° = ?   R = 8.314 JK-1 mol-1

ΔH° = -46,182 J mol-1

ΔH° = - 46.182 KJ mol-1


50. 500°C வெப்பநிலையில், CaCO3 (S) CaO (s) + CO2 (g) என்ற வினையில் CO2 ன் பகுதி அழுத்தம் 1.017×10-3 atm ஆகும். இவ்வினையில் 600°Cல், Kp க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் ΔH மதிப்பு 181KJ mol-1 மேலும் கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் இதன் மதிப்பு மாறுவதில்லை.

விடை :

PCO2 = 1.017 × 10-3 atm

Kp = ?    T1 = 500oC + 273 = 773K

T2 = 600oC + 273 = 873K

ΔH = 181 KJ mol-1

CaCO3(s) CaO(s) + CO2(g)

Kp = PCO2

Kp1 = PCO2 = 1.017 × 10-3 atm ; T1 = 773K

Kp2 = ? T2 = 873 K ; R = 8.314 JK-1 mol-1

ΔHo = 181 KJ mol-1 = 181 × 103  Jmol-1


Kp2 = 25.12 × 1.017 × 10-3  

Kp2 = 25.54 × 10-3  atm

11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Brief questions and answers: Physical and Chemical Equilibrium in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை