சமநிலை மாறிலிகள் (Kp and Kc):
பின்வரும் மீளும் வினையினை நாம் கருதுவோம்.
xA + yB ⇌ lC + mD
இங்கு A மற்றும் B ஆகியன வினைபடு பொருள்கள் C மற்றும் D ஆகியன வினைவிளை பொருள்கள் மேலும் x, y, l மற்றும் m ஆகியன முறையே A, B, C மற்றும் D ஆகியனவற்றின் வேதி வினைக்கூறு விகித குணகங்களைக் குறிப்பிடுகின்றன.
நிறைதாக்க விதியினைப் பயன்படுத்த, முன்னோக்கிய வினையின் வினைவேகம்,
rf α [A]x [B]y (or) rf = kf [A]x [B]y
இதைப் போலவே, பின்னோக்கிய வினையின் வினைவேகம்,
rb α [C]l [D]m
(or)
rb = kb [C]l [D]m
இங்கு kf மற்றும் kb ஆகியன விகித மாறிலிகள் சமநிலையில்
முன்னோக்கிய வினையின் வேகம் (rf) = பின்னோக்கிய வினையின் வேகம் (rb)
kf [A]x [B]y = kb [C]1 [D]m
அல்லது
kf / kb = [C]1 [D] m / [A] x [B] y = Kc
இங்கு Kc என்பது மோலார் செறிவின் அடிப்படையிலான சமநிலை மாறிலி ஆகும்.
கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ளவாறு வினைவிளைப் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும், வினைப்படு பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். இம்மாறிலி சமநிலை மாறிலி எனப்படுகிறது. இது தோராயமாக மட்டுமே உண்மை என வேதி வினைவேகவியல் பாடப்பகுதியை பின்னர் கற்கும்போது நாம் அறிந்து கொள்வோம்.
மேற்கண்டுள்ள வினையின், வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகியன வாயு நிலைமையில் காணப்பட்டால், சமநிலை மாறிலியை பகுதி அழுத்தங்களின் அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு எழுத இயலும்.
Kp = Plc × Pmd / PxA × PyB
இங்கு PA,PB,PC, மற்றும் PD என்பன முறையே வாயுநிலையில் உள்ள A,B,C மற்றும் D ஆகியனவற்றின் பகுதி அழுத்தங்களாகும்.