Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கார்பன் டெட்ரா குளோரைடு - டெட்ரா ஹேலோ ஆல்கேன்

தயாரித்தல், இயற் மற்றும் வேதிப் பண்புகள் - கார்பன் டெட்ரா குளோரைடு - டெட்ரா ஹேலோ ஆல்கேன் | 11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes

   Posted On :  04.01.2024 11:32 pm

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

கார்பன் டெட்ரா குளோரைடு - டெட்ரா ஹேலோ ஆல்கேன்

டெட்ரா ஹேலோ ஆல்கேன்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு சிறந்த உதாரணமாகும்.

டெட்ரா ஹேலோ ஆல்கேன்

டெட்ரா ஹேலோ ஆல்கேன்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு சிறந்த உதாரணமாகும்.

கார்பன் டெட்ரா குளோரைடு : CCl4 

தயாரித்தல்:

1. மீத்தேனின் குளோரினேற்றம்

மீத்தேனை சூரிய ஒளியின் முன்னிலையில் அதிக அளவு குளோரினுடன் வினைப்படுத்தும்போது கார்பன்டெட்ரா குளோரைடு பெருமளவில் கிடைக்கிறது.


2. குளோரின் உடன் கார்பன்டைசல்பைடின் வினை

நீரற்ற AlCl3 வினையூக்கி முன்னிலையில் கார்பன்டைசல்பைடானது குளோரின் வாயுவுடன் வினைப்பட்டு கார்பன் டெட்ரா குளோரைடைத் தருகிறது.


இயற்பண்புகள்

(i) கார்பன் டெட்ரா குளோரைடானது தனித்த மணமுடைய நிறமற்ற திரவம்.

(ii) இது நீரில் கரைவதில்லை மேலும் கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன.

வேதிப்பண்புகள்

(1) நீராற்பகுத்தல்:

கார்பன் டெட்ராகுளோரைடானது சூடான நீர் அல்லது நீராவியுடன் வினைபுரிந்து நச்சுத்தன்மையுடைய பாஸ்ஜீன் எனும் வாயுவைத் தருகின்றது.


(ii) ஒடுக்கம்

நீர்த்த HCl ல் உள்ள இரும்புத்துகளால் கார்பன் டெட்ரா குளோரைடு ஒடுக்கமடைந்து குளோரோஃபார்மைத் தருகிறது.

Tags : Preparation, Physical and Chemical properties தயாரித்தல், இயற் மற்றும் வேதிப் பண்புகள்.
11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Carbon tetrachloride - Tetra haloalkane Preparation, Physical and Chemical properties in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : கார்பன் டெட்ரா குளோரைடு - டெட்ரா ஹேலோ ஆல்கேன் - தயாரித்தல், இயற் மற்றும் வேதிப் பண்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்