Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையினைத் தேர்வு செய்க

பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையினைத் தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes

   Posted On :  04.01.2024 11:46 pm

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

சரியான விடையினைத் தேர்வு செய்க

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : சரியான விடையினைத் தேர்வு செய்க

மதிப்பீடு 


சரியான விடையினைத் தேர்வு செய்க

1. ன் IUPAC பெயர்

) 2-புரோமோ பென்ட் - 3 - ஈன்

) 4-புரோமோ பென்ட் - 2 - ஈன் 

) 2-புரோமோ பென்ட்- 4 - ஈன் 

) 4-புரோமோ பென்ட்- 1 – ஈன்

[விடை : ) 4-புரோமோ பென்ட் - 2 – ஈன்]


2. பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது

) n-பியூட்டைல் குளோரைடு 

) ஐசோ பியூட்டைல் குளோரைடு 

) t-பியூட்டைல் குளோரைடு 

) n-புரப்பைல் குளோரைடு.

[விடை : ) n-பியூட்டைல் குளோரைடு]


3. பின்வரும் சேர்மங்களை அவற்றின் அடர்த்தியின் ஏறுவரிசையில் அமைக்க 

A) CCl4

B) CHCl3

C) CH2Cl2

D) CH3Cl

) D < C < B < A 

) C > B > A > D

) A < B < C < D

) C > A > B > D

[விடை : ) D < C < B < A ]


4. Cl அணுவின் இடஅமைவினைப் பொருத்து CH3-CH = CH-CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

) வினைல் 

) அல்லைல்

) ஈரிணைய 

) அர்அல்கைல்

[விடை : ) அல்லைல்]


5. டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்

) 3 - குளோரோ பென்டேன்

) 1-குளோரோ பென்டேன்

) 1-குளோரோ-1, 1, டை எத்தில் மீத்தேன்

) 1 -குளோரோ-1-எத்தில் புரப்பேன்.

[விடை : ) 3 - குளோரோ பென்டேன்]


6. C-X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது

) குளோரோ மீத்தேன்

) அயடோ மீத்தேன்

) புரோமோ மீத்தேன்

) புளுரோ மீத்தேன்

[விடை : ) புளுரோ மீத்தேன்]


7.


[விடை : )]


8. பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,


) (i)

) (ii) and (iii)

) (iii)

) (i) and (ii)

[விடை : ) (iii)]


9. எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது


[விடை : )]


10. பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது

) குளோரோ பென்சீன்

) பென்சைல் குளோரைடு

) பென்சால் குளோரைடு

) பென்சீன் ஹெக்ஸா குளோரைடு

[விடை : ) குளோரோ பென்சீன்]


11. C2F4Cl2 ன் பெயர் ----------

) ஃப்ரீயான் – 112

) ஃப்ரீயான் - 113

) ஃப்ரீயான் – 114

) ஃப்ரீயான் – 115 

[விடை : ) ஃப்ரீயான் – 114]


12. எத்திலீன் டை குளோரைடை எத்திலிடீன் டை குளோரைடிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுவது எது?

) Zn / மெத்தனால்

) KOH / எத்தனால்

) நீர்த்த KOH

w) ZnCl2 / அடர் HCl

[விடை : ) நீர்த்த KOH]


13. நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக.


) A → 2 B → 4 C → 1 D → 3

) A → 3 B → 2 C → 4 D → 1

) A → 1 B → 2 C → 3 D → 4

) A→ 3 B → 1 C → 4 D → 2

[விடை : ) A→ 3 B → 1 C → 4 D → 2]


14. கூற்று: மோனோ ஹேலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை o- மற்றும் p- இடங்களில் நிகழ்கிறது.

காரணம்: ஹாலஜன் அணுவானது வளைய கிளர்வு நீக்கி

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல.

) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

[விடை : ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல.]


15. பின்வரும் வினையைக் கருதுக.

CH3CH2 CH2Br + NaCN →

CH3 CH2 CH2 CN + NaBr

இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்

) எத்தனால்

) மெத்தனால்

) DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)

) நீர்.

[விடை : ) DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)]


16. டெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்-12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது

) உர்ட்ஸ் வினை

) ஸ்வார்ட்ஸ் வினை

) ஹேலோபார்ம் வினை

) காட்டர்மான் வினை

[விடை : ) ஸ்வார்ட்ஸ் வினை]


17. SN1 வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு

) அல்லைல் குளோரைடு

) எத்தில் குளோரைடு

) ஐசோ புரப்பைல் குளோரைடு

) பென்சைல் குளோரைடு

[விடை : ) பென்சைல் குளோரைடு]


18. SN1 வினையில் மெதுவாக நிகழும் படியில் உருவாகும் கார்பன் நேர் அயனியானது

) Sp3 இனக்கலப்படைந்தது

) Sp2 இனக்கலப்படைந்தது

) Sp இனக்கலப்படைந்தது

) இவை எதுவுமில்லை

[விடை : ) Sp2 இனக்கலப்படைந்தது]


19. குளோரோ பென்சீனை HNO3 ஆல் நைட்ரோ ஏற்றம் அடையச் செய்யும் போது பெருமளவில் உருவாகும் முதன்மை விளைபொருள் H2SO4

) 1-குளோரோ-4-நைட்ரோ பென்சீன் 

) 1-குளோரோ-2-நைட்ரோ பென்சீன் 

) 1-குளோரோ-3-நைட்ரோ பென்சீன் 

) 1-குளோரோ-1-நைட்ரோ பென்சீன்

[விடை : ) 1-குளோரோ-4-நைட்ரோ பென்சீன்]


20. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?


[விடை : )]


21. எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது 

) அசிட்டால்டிஹைடு

) எத்திலீன் கிளைக்கால்

) பார்மால்டிஹைடு

) கிளையாக்சால்

[விடை : ) அசிட்டால்டிஹைடு]


22. ராஷ் முறைக்கான மூலப்பொருள்

) குளோரோ பென்சீன் 

) பீனால்

) பென்சீன்

) அனிசோல்

[விடை : ) பென்சீன்]


23. குளோரோஃபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது

) நைட்ரோ டொலுவின்

) நைட்ரோ கிளிசரின்

) குளோரோ பிக்ரின்

) குளோரோ பிக்ரிக் அமிலம்

[விடை : ) குளோரோ பிக்ரின்]


24. அசிட்டோன் X, இங்கு X என்பது

) 2-புரப்பனால்

) 2-மெத்தில்-2-புரப்பனால்

) 1-புரப்பனால்

) அசிட்டோனால்

[விடை : ) 2-மெத்தில்-2-புரப்பனால்]


25. சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் டெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது

) புரப்பியோனிக் அமிலம்

) குளோரோ ஈத்தேன்

) புரோமோ ஈத்தேன்

) குளோரோ புரப்பேன்

[விடை : ) புரோமோ ஈத்தேன்]


Tags : Multiple choice questions பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள்.
11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Choose the best answer: Chemistry: Haloalkanes and Haloarenes Multiple choice questions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : சரியான விடையினைத் தேர்வு செய்க - பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்