Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | DDT (p,p, - டைகுளோரோடைபினைல் ட்ரை-குளோரோ ஈத்தேன்)

அமைப்பு, பயன்கள் - DDT (p,p, - டைகுளோரோடைபினைல் ட்ரை-குளோரோ ஈத்தேன்) | 11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes

   Posted On :  04.01.2024 11:26 pm

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

DDT (p,p, - டைகுளோரோடைபினைல் ட்ரை-குளோரோ ஈத்தேன்)

1873ல் முதல் குளோரினேற்றம் செய்யப்பட்ட கரிம பூச்சுக் கொல்லியான DDT தயாரிக்கப்பட்டது.

DDT (p,p, - டைகுளோரோடைபினைல் ட்ரை-குளோரோ ஈத்தேன்)

1873ல் முதல் குளோரினேற்றம் செய்யப்பட்ட கரிம பூச்சுக் கொல்லியான DDT தயாரிக்கப்பட்டது. 1939ல் பால் முல்லர் எனும் வேதியிலாளர் DDTன் பூச்சிக் கொல்லும் தன்மையினைக் கண்டறிந்தார். இக் கண்டுபிடிப்பிற்காக 1948ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடற்கூறியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அடர் H2SO4 முன்னிலையில், குளோரோ பென்சீனை குளோராலுடன் (ட்ரைகுளோரோ அசிட்டால்டிஹைடு) வெப்பப்படுத்தி DDT தயாரிக்கப்படுகிறது.


தன்மதிப்பீடு

8) DDT பூச்சிக் கொல்லியின் IUPAC பெயர் என்ன? பெரும்பாலான நாடுகளில் இவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஏன்?

தீர்வு:

● DDT யின் IUPAC பெயர் : 2, 2 - பிஸ் (p- குளோரோ பினைல்) -1,1,1 - ட்ரை குளோரோ ஈத்தேன்

● DDT அதிக நிலைப்புத்தன்மை மற்றும் உயிரியால் மக்கா தன்மை உடையவை

● DDT நச்சுத்தன்மை கொண்டவை. இதனால் உணவு சங்கிலியில் பாதிப்பு மற்றும் வளர்சிதை சீர்மையற்ற நிலையை உருவாகும்.


பயன்கள்

i) மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காரணமான சில பூச்சிகளை கட்டுப்படுத்த DDT பயன்படுகிறது.

ii) சில பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாய பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ii) கட்டுமானத் தொழிலில் பூச்சிக் கட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.

iv) இது அதிக நச்சுத் தன்மையினைப் பெற்றிருப்பதால் வீட்டில், ஈக்கள் மற்றும் கொசுக்களை கொல்வதற்கு பயன்படுகிறது.

Tags : Structure, Uses அமைப்பு, பயன்கள்.
11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : DDT (p,p’-dichloro diphenyl tri-chloro ethane) Structure, Uses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : DDT (p,p, - டைகுளோரோடைபினைல் ட்ரை-குளோரோ ஈத்தேன்) - அமைப்பு, பயன்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்