Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வெக்டரின் வகைகள்
   Posted On :  29.09.2022 08:30 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

வெக்டரின் வகைகள்

1. சம வெக்டர்கள் 2. ஓரலகு வெக்டர் 3. செங்குத்து ஓரலகு வெக்டர்கள்

வெக்டரின் வகைகள்

 

(1) சம வெக்டர்கள்:  மற்றும் என்ற இரண்டு வெக்டர்கள் ஒரே எண்மதிப்பையும், ஒரே திசையிலும் செயல்பட்டு ஒரே இயற்பியல் அளவினைக் குறிப்பிட்டால், அவ்வெக்டர்கள் சமவெக்டர்கள் என்று அழைக்கப்படும். (படம் 2.12)


(அ) ஒரு கோட்டு வெக்டர்கள்: ஒரே கோட்டின் வழியே செயல்படும் வெக்டர்கள் ஒரு கோட்டு வெக்டர்கள் என்று அழைக்கப்படுகிறது. அவ்வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் 0° அல்லது 180° ஆகும். ஒரு கோட்டு வெக்டர்கள் இரண்டு வகைப்படும். 

(i) இணைவெக்டர்கள்: மற்றும் என்ற இரண்டு வெக்டர்கள், ஒரே திசையிலும் இணைகோடுகள் வழியாகவும் செயல்பட்டால் அவற்றை இணை வெக்டர்கள் என்று அழைக்கலாம். இணைகோடுகள் வழியே செயல்படுவதால் அவற்றுக்கு இடையே உள்ள கோணம் 0° ஆகும். (படம் 2.13)


(ii) எதிர் - இணை வெக்டர்கள்:  மற்றும்  என்ற இரண்டு வெக்டர்கள், எதிரெதிர் திசையில் ஒரே கோட்டில் அல்லது இணைகோடுகள் வழியாக செயல்பட்டால் அவற்றை எதிர் - இணை வெக்டர்கள் என்று அழைக்கலாம். (படம் 2.14)



(2) ஓரலகு வெக்டர்: ஒரு வெக்டரை அதன் எண்மதிப்பால் வகுக்கக்கிடைப்பது ஓரலகு வெக்டர் ஆகும். வெக்டரின் ஓரலகு வெக்டர் Aˆ எனக் குறிப்பிடப்படும் (A கேப் அல்லது A ஹேட் (hat) எனப் படிக்கவும்) இதன் எண்மதிப்பு ஒன்று அல்லது ஓரலகு ஆகும்.


எனவே, ஓரலகு வெக்டர், வெக்டரின் திசையினை மட்டுமே காட்டும். 


(3) செங்குத்து ஓரலகு வெக்டர்கள்: மூன்று ஓரலகு வெக்டர்கள் iˆ,  jˆ மற்றும் kˆ ஆகியவற்றைக் கருதுக. இந்த மூன்று ஓரலகு வெக்டர்களும் x, y மற்றும் z அச்சின் நேர்குறி திசையினைக் காட்டுகின்றன. இவற்றில், எந்த இரண்டு ஓரலகு வெக்டர்களுக்கு இடையே உள்ள கோணம் 90° ஆகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படும் ஓரலகு வெக்டர்களுக்கு செங்குத்து ஓரலகு வெக்டர்கள் என்றும் பெயர். இங்கு iˆ,  jˆ மற்றும் kˆ என்பவை செங்குத்து ஓரலகு வெக்டர்களைக் குறிக்கிறது. இது படம் 2.15ல் காட்டப்பட்டுள்ளது.


11th Physics : UNIT 2 : Kinematics : Different types of Vectors in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : வெக்டரின் வகைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்