முறிவு செயல்முறை
டையோடில் சிறுபான்மை ஊர்தியால் ஏற்படும் பின்னோக்கு
மின்னோட்டம் அல்லது பின்னோக்குத் தெவிட்டிய மின்னோட்டம் மிகக்குறைவு ஆகும். p-n சந்திக்கு
அளிக்கப்படும் பின்னோக்கு மின்னழுத்தத்தை குறிப்பிட்ட ஒரு அளவிற்குமேல் அதிகரித்தால்,
சந்தியானது முறிவடையும், இம் மின்னழுத்தம் முறிவு மின்னழுத்தம் எனப்படும். இது இயக்கமில்லாப்
பகுதியின் அகலத்தைப் பொருத்து, அல்லது மாசூட்டல் அளவைப் பொருத்து அமையும்.
இயல்பான p-n சந்தி இம்மின்னழுத்தத்தின் மூலம்
பாதிப்புக்குள்ளாகும். செனார் டையோடு போன்று சிறப்புமுறையில் வடிவமைக்கப்பட்ட டையோடுகள்
முறிவுப்பகுதியில் செயல்பட்டு மின்னழுத்தம் கட்டுப்படுத்தும் சுற்றுகளில் பயன்படுகிறது.
பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரிப்பதால் முறிவு ஏற்படுவதற்குக் காரணமான இரண்டு இயக்க
முறைகள் உள்ளன.
1. செனார்
முறிவு
மிக அதிக அளவு மாசூட்டப்பட்ட p - n சந்திகளில்
<10°m க்கு குறைவான அளவுகளில் மெல்லிய இயக்கமில்லாப் பகுதி இருக்கும். சந்திகளின்
குறுக்கே முறிவு எல்லைவரை பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரிக்கும் போது, 3 x 107
V m-1 அளவுக்கு வலிமையான மின்புலம் மெல்லிய இயக்கமில்லாப் பகுதியின் குறுக்கே
உருவாக்கப்படுகிறது. இந்த மின்புலம் படிக தளத்தில் உள்ள சகப்பிணைப்பை முறித்து அதன்
மூலம் எலக்ட்ரான் - துளை ஜோடியை உருவாக்கும் அளவு போதுமான வலிமை கொண்டது ஆகும். இந்த
விளைவு செனார் முறிவு எனப்படும். இந்நிலையில் மேற்கொண்டு மிகச் சிறிய அளவில் பின்னோக்கு
மின்னழுத்தத்தை அதிகரித்தாலும் கூட அது மிக அதிக அளவு மின்னூட்ட ஊர்திகளை உருவாக்கும்.
எனவே, சந்தியானது முறிவுப்பகுதியில் மிகக்குறைந்த மின்தடையைக் கொண்டிருக்கும்.
இவ்வாறு, அணிக்கோவை தளத்தில் உள்ள பிணைப்புகளை
முறித்து அதன்மூலம் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இச்செயல்முறை அக புல உமிழ்வு அல்லது
புல அயனியாக்கம் என்று பெயர். இச்செயல்முறைக்குத் தேவைப்படும் மின்புலம் 10Vm-' என்ற
அளவில் அமையும்.
2. சரிவு
முறிவு
சரிவு முறிவானது குறைந்த அளவு மாசூட்டப்பட்டு
அகலமான இயக்கமில்லாப் பகுதிகளைக் கொண்ட சந்திகளில் நடைபெறுகிறது. இங்கு, மின்புலமானது
முறிவினை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானதாக அமையாது. ஆனால், இந்த வெப்பத்தினால் உருவாக்கப்பட்ட
சிறுபான்மை ஊர்திகள் இந்த மின்புலத்தினால் முடுக்கப்பட்டு போதுமான அளவு இயக்க ஆற்றலைப்
பெறுகின்றன. இவை இயக்கமில்லாப் பகுதியில் செல்லும் போது குறைகடத்தி அணுக்களுடன் மோதி
சகப்பிணைப்பை முறித்து எலக்ட்ரான் - துளை ஜோடிகளை உருவாக்குகின்றன.
புதியதாக உருவாக்கப்பட்ட மின்னூட்ட ஊர்திகளும்
மின்புலத்தினால், முடுக்கப்பட்டு மோதல்களினால் மேலும் மின்னூட்ட ஊர்திகளை உருவாக்குகின்றன.
இந்த ஒட்டுமொத்த செயல்முறை பெருமளவு மின்னூட்ட ஊர்திகளைச் சந்தியின் குறுக்கே ஏற்படுத்தி
பின்னோக்கு மின்தடையைக் குறைக்கும். இதனால் டையோடு மின்னோட்டம் திடீரென உயரும்.
குறிப்பு
(i) 4V க்கு குறைவான பின்னோக்கு மின்னழுத்தத்தில் செனார் முறிவு அதிகமாக இருக்கும்.
(ii) 6 Vக்கு அதிமானபின்னோக்கு மின்னழுத்தத்தில் சரிவு முறிவு
அதிகமாக இருக்கும்
(iii) 4 மற்றும் 6V க்கு இடைப்பட்ட மின்னழுத்தத்தில் இரண்டு விளைவுகளுமே
இருக்கும்.