இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) - செயல்படும் புள்ளி | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics
செயல்படும் புள்ளி
செயல்படும் புள்ளி என்பது டிரான்சிஸ்டரானது
திறம்பட செயல்படும் புள்ளியாகும். dc பளுகோடு என்பது Vcc (Ic
= 0எனும்போது) மற்றும் IC (VCE = 0 எனும்போது) ஆகிய மதிப்புகளைக்
கொண்டு வரையப்பட்ட வரைகோடு ஆகும். வெளியிடு சிறப்பியல்பு வளைகோட்டுடன் மேற்பொருத்தி
வரையப்பட்ட dc பளுகோடானது, டிரான்சிஸ்டரின் செயல்படும் புள்ளியைப் பற்றி அறிய உதவுகிறது.
இது படம் 9.35 இல் காட்டப்பட்டுள்ளது.
படம் 9.35 பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பிலுள்ள
NPN டிரான்சிஸ்டரின் வெளியீட்டு சிறுப்பியல்புடன் dc பளுகோடு
படம் 9.35 இல் புள்ளிகள் P, Q, R ஆகியவை
Q- புள்ளிகள் அல்லது தொடக்க புள்ளிகள் எனப்படும். இவை டிரான்சிஸ்டரின் செயற்படும் புள்ளி
அல்லது குறிப்பு புள்ளி எனப்படுகின்றன. செயற்படும் புள்ளியானது dc பளுகோட்டின் மையத்தில்
தேர்வு செய்யப்பட்டால் (புள்ளி Q) டிரான்சிஸ்டரானது பெருக்கியாகத் திறம்பட செயலாற்றும்.
செயல்படும் புள்ளி என்பது, உருக்குலைவு இல்லாமல் கிடைக்கும் பெரும் அளவு சைகையைத் தீர்மானிக்கிறது.
டிரான்சிஸ்டரானது திறந்த சாவியாகச் செயல்படும்
போது Q-புள்ளியானது வெட்டுப்பகுதியிலும், மூடிய சாவியாகச் செயல்பட தெவிட்டிய பகுதியிலும்
தேர்வு செய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டு
9.8
படத்தில் காட்டப்பட்டுள்ள பொது உமிழ்ப்பான்
டிரான்சிஸ்டர் மின்சுற்றில் மின்னோட்டம் பெருக்கம் 120 ஆகும் எனில் dc பளுகோட்டை வரைந்து
அதில் Q புள்ளியைக் குறிக்க (VE யின் மதிப்பு புறக்கணிக்கப்படுகிறது).