Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | டிரான்சிஸ்டர் மின்சுற்று வடிவமைப்புகள்

இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) - டிரான்சிஸ்டர் மின்சுற்று வடிவமைப்புகள் | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics

   Posted On :  28.09.2023 03:52 am

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்

டிரான்சிஸ்டர் மின்சுற்று வடிவமைப்புகள்

டிரான்சிஸ்டர் செயல்படும் போது, அதன் முனைகளில் ஏதேனும் ஒரு முனை, உள்ளீடு மற்றும் வெளியீடு மின்சுற்றுகளுக்குப் பொதுவாக பயன்படுத்துவதைப் பொருத்து, மூன்று வகைப்பட்ட மின்சுற்று அமைப்புகள் உள்ளன.

டிரான்சிஸ்டர் மின்சுற்று வடிவமைப்புகள்

டிரான்சிஸ்டர் செயல்படும் போது, அதன் முனைகளில் ஏதேனும் ஒரு முனை, உள்ளீடு மற்றும் வெளியீடு மின்சுற்றுகளுக்குப் பொதுவாக பயன்படுத்துவதைப் பொருத்து, மூன்று வகைப்பட்ட மின்சுற்று அமைப்புகள் உள்ளன.


பொது அடிவாய் (CB) வடிவமைப்பு:

இங்கு உள்ளீடு மற்றும் வெளியீடு மின்சுற்றுகளில் பொதுவாக அடிவாய் அமையும். படம் 9.26 (அ) மற்றும் 9.26 (ஆ) இல் இதற்கான குறியீடு மற்றும் மின்சுற்றுகள் காட்டப்பட்டுள்ளன. உமிழ்ப்பான் மின்னோட்டம் உள்ளீடு IE மின்னோட்டமாகவும், ஏற்பான் மின்னோட்டம் IC ஆனது வெளியீடு மின்னோட்டமாகவும் அமையும். உள்ளீடு சைகையானது உமிழ்ப்பான் - அடிவாய் முனைகளுக்கு இடையே அளிக்கப்பட்டு வெளியீடானது ஏற்பான் - அடிவாய் முனைகளுக்கிடையே பெறப்படும்.


படம் 9.26 பொது அடிவாய் நிலை அமைப்பில் NPN டிரான்சிஸ்டர் (அ) மின்சுற்று குறியீட்டுப்படம் (ஆ) மின்சுற்று குறியீடு


பொது உமிழ்ப்பான் மின்சுற்று வடிவமைப்பு

இந்த வடிவமைப்பில், உமிழ்ப்பான் ஆனது உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுமின்சுற்றுகளுக்கும் பொதுவானதாக அமையும். இது படம் 9.27இல் காட்டப்பட்டுள்ளது. அடிவாய்மின்னோட்டம் IB உள்ளீடு மின்னோட்டமாகவும், ஏற்பான் மின்னோட்டம் IC ஆனது வெளியீடு மின்னோட்டமாகவும் அமையும். உள்ளீடு சைகையானது ஏற்பான் மற்றும் அடிவாய் முனைகளுக்கிடையே அளிக்கப்படுகிறது. ஏற்பான் மற்றும் உமிழ்ப்பான் முனைகளுக்கிடையே வெளியீடு அளவிடப்படுகிறது.


படம் 9.27 பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பில் NPN டிரான்சிஸ்டர் (அ) மின்சுற்று குறியீட்டுப்படம் (ஆ) மின்சுற்று குறியீட்டு


பொது ஏற்பான் மின்சுற்று வடிவமைப்பு

இங்கு உள்ளீடு மற்றும் வெளியீடு மின்சுற்றுகளுக்குப் பொதுவானதாக ஏற்பான் அமைவதை படம் 9.28 இல் காணலாம். அடிவாய் மின்னோட்டம் IB. உள்ளீடு மின்னோட்டமாகவும், ஏற்பான் மின்னோட்டம் Iவெளியீடு மின்னோட்டமாகவும் அமையும்.

உள்ளீடு சைகையானது அடிவாய் மற்றும் உமிழ்ப்பான் முனைகளுக்கிடையே அளிக்கப்படுகிறது. உமிழ்ப்பான் மற்றும் ஏற்பான் முனைகளுக்கிடையே வெளியீடு அளவிடப்படுகிறது.

குறிப்பு

பொது ஏற்பான் வடிவமைப்பில், வெளியீடு உமிழ்ப்பானிலிருந்து பெறப்படுவதால் இச்சுற்று உமிழ்ப்பான் பின்தொடர்ச்சுற்று எனவும் அழைக்கப்படுகிறது.


படம் 9.28 பொத ஏற்பான் நிலை அமைப்பில் NPN டிரான்சிஸ்டர் (அ) மின்சுற்று குறியீட்டுப்படம் (ஆ ) மின் சுற்று குறியீடு

Tags : Bipolar Junction Transistor [BJT] இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT).
12th Physics : UNIT 10a : Semiconductor Electronics : Transistor circuit configurations of BJT Bipolar Junction Transistor [BJT] in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல் : டிரான்சிஸ்டர் மின்சுற்று வடிவமைப்புகள் - இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்