Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுதல்

இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) - டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுதல் | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics

   Posted On :  28.09.2023 04:11 am

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்

டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுதல்

செயல்படும் நிலையில் உள்ள டிரான்சிஸ்டரானது வலுக்குறைந்த சைகைகளைப் பெருக்கும் திறன் கொண்டது. பெருக்கம் என்பது, சைகையின் வலிமையை அதிகரிக்கும் செயல்முறையாகும் (வீச்சினை அதிகரித்தல்)

டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுதல்

செயல்படும் நிலையில் உள்ள டிரான்சிஸ்டரானது வலுக்குறைந்த சைகைகளைப் பெருக்கும் திறன் கொண்டது. பெருக்கம் என்பது, சைகையின் வலிமையை அதிகரிக்கும் செயல்முறையாகும் (வீச்சினை அதிகரித்தல்) மிக அதிக அளவு பெருக்கம் தேவையெனில், டிரான்சிஸ்டர்கள் பிணைப்பு மின்பொருள்களான மின்தடை, மின்தேக்கி மற்றும் மின் மாற்றிகள் மூலம் வரிசையாக இணைக்கப்படுகின்றன. இவை பல்நிலை பெருக்கி எனப்படும்.

ஒரு நிலை பெருக்கி மின் சைகைகளைப் பெருக்குவது படம் 9.36(அ ) இல் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நிலை என்பது ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் இணைப்பு பொருள்களைக் குறிக்கிறது. NPN டிரான்சிஸ்ட்ரானது பொது உமிழ்ப்பான் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.


படம் 9.36 (அ) டிரான்சிஸ்டர் ஒரு பெருக்கியாக செயல்படுதல் (ஆ ) 180° கட்ட வேறுபாட்டுடன் உள்ள உள்ளீடு மற்றும் வெளியீடு அலை வடிவங்கள்

வெளியிடப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை அளவிடுவதற்காக ஏற்பான் சுற்றில் RC என்ற மின்தடையானது தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மின்தேக்கி C1 ஆனது ac மின்னழுத்தத்தை மட்டுமே தம் வழியே அனுமதிக்கும். உமிழ்ப்பான் புற வழி மின்தேக்கி CE ஆனது பெருக்கப்பட்ட ac சைகைக்குக் குறைந்த மின்மறுப்புப் பாதையை அளிக்கிறது. பிணைப்பு மின்தேக்கி CC ஆனது பெருக்கியின் ஒரு நிலையை அடுத்த நிலையுடன் இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பல்நிலை பெருக்கியை உருவாக்க, V5 என்ற சீரிசையாக மாறும் உள்ளீடு சைகையானது அடிவாய் - உமிழ்ப்பான் சந்திக்குக் குறுக்கே அளிக்கப்படுகிறது. வெளியீடானது ஏற்பான்-உமிழ்ப்பானுக்குக் குறுக்கே பெறப்படுகிறது.

ஏற்பான் மின்னோட்டம்,

வெளியீட்டுச் சுற்றுக்குக் கிர்ஃகாப்பின் மின்னழுத்த விதியைப் பயன்படுத்த, ஏற்பான் உமிழ்ப்பான் மின்னழுத்தம் பின்வருமாறு தரப்படுகிறது.

VCE =VCC IC RC


பெருக்கியின் செயல்பாடு


• உள்ளீடு சைகையின் நேர் அரை அலையின் போது

உமிழ்ப்பான் அடிவாய்க்குக் குறுக்கே முன்னோக்கு மின்னழுத்தம் உள்ளீடு சைகையினால் அதிகரிக்கப்படும். இதன் விளைவாக அடிவாய் மின்னோட்டம் (IB) அதிகரிக்கும். இதனால் ஏற்பான் மின்னோட்டம் (IC) யானது, மடங்கு அதிகரிக்கும். இது RC யின் குறுக்கே மின்னழுத்த இறக்கத்தை (ICRC) அதிகரித்து ஏற்பான் உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாட்டை (VCE) குறைக்கும். எனவே, நேர்மறை உள்ளீடு சைகை , வெளியீட்டில் பெருக்கப்பட்ட எதிர்மறை சைகையாக உருவாகிறது. இதனால் வெளியீட்டு சைகை 180° திருப்பப்படுகிறது. இது படம் 9.36 (ஆ) இல் காட்டப்பட்டுள்ளது.


• உள்ளீடுசைகையின் எதிர் அரை அலையின்போது,

உமிழ்ப்பான் - அடிவாய் குறுக்கே உள்ள முன்னோக்கு மின்னழுத்தத்தை உள்ளீடு சைகை (VS) குறைக்கிறது. இதன் விளைவாக அடிவாய் மின்னோட்டம் (IB) குறைந்து ஏற்பான் மின்னோட்டம் (IB) அதிகரிக்கிறது. ஏற்பான் மின்னோட்டத்தில் ஏற்படும் உயர்வு RCயின் குறுக்கே மின்னழுத்த இறக்கம் குறைந்து, ஏற்பான் - உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாடு (VCE) அதிகரிக்கும். எனவே, எதிர்மறை உள்ளீடு சைகை வெளியீட்டில் பெருக்கப்பட்ட நேர்மறை சைகையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உள்ளீடு சைகையின் எதிர் அரைச்சுற்றின் போதும் 180° கட்ட வேறுபாடு உருவாக்கப்படுகிறது. இது படம் 9.36 (ஆ) இல் காட்டப்பட்டுள்ளது.

Tags : Bipolar Junction Transistor [BJT] இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT).
12th Physics : UNIT 10a : Semiconductor Electronics : Transistor as an amplifier Bipolar Junction Transistor [BJT] in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல் : டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுதல் - இரு முனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்