Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 11:36 pm

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்

கொடுக்கப்பட்ட எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க, பல்வேறு வழிகள் உள்ளன. அவைகள். (i) சமப் பங்கிடுதல் (ii) சமக் குழுக்களாகப் பிரித்தல். (iii) மீண்டும் மீண்டும் கழித்தல் (iv) நீள் வகுத்தல் (v) குறுகிய வகுத்தல்

அலகு − 2

எண்கள்



நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்


பல்வேறு வழிகளில், கொடுக்கப்பட்ட எண்ணை வேறு ஒரு எண்ணால் வகுத்தல்.

கொடுக்கப்பட்ட எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க, பல்வேறு வழிகள் உள்ளன

அவைகள்.

(i) சமப் பங்கிடுதல்

(ii) சமக் குழுக்களாகப் பிரித்தல்

(iii) மீண்டும் மீண்டும் கழித்தல்

(iv) நீள் வகுத்தல்

(v) குறுகிய வகுத்தல்

நீங்கள் முன் வகுப்பிலேயே வகுத்தலின் வகைகளைக் கற்றுள்ளீர்கள். தற்பொழுது சம பங்கிடுதல் மற்றும் குறுகிய வகுத்தல் முறையைக் காண்போம்.


(i) சமப் பங்கிடுதல்

பிரியா தனது பிறந்த நாளைப் பெற்றோர்களான ரகு மற்றும் உஷாவுடன் கொண்டாட விரும்பினார். அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு இனிப்பப்பம் வாங்கினார். அவள் அந்த இனிப்பப்பத்தினை 18 துண்டுகளாகச் செய்து, தன்னுடைய பெற்றோர்களுடன் பங்கிட விரும்பினாள். ஒவ்வொருவரும் 6 துண்டுகள் பெற்றனர். அந்த நேரத்தில் அவளுடைய நண்பர்கள் லீலா, கலா, மாலா தங்களுடைய பரிசுகளுடன் வந்திருந்தனர். ஆகவே, அவள் அந்த இனிப்பப்பத்தை நண்பர்களுடன் பங்கிட விரும்பினாள். ஒவ்வொருவருக்கும் 3 துண்டுகள் கிடைக்கப் பெற்றன. சில நிமிடங்களுக்குப் பிறகு அவளுடைய பெற்றோர்களின் நண்பர்கள் மேரி, ரஹீம், ரவி வந்தனர். அவள் அவர்களுடனும் அந்த இனிப்பப்பத்தைப் பங்கிடத் தீர்மானித்தாள். அனைவரும் மொத்தமாக எத்தனை பங்குகள் பெறுவர்?

குறிப்பு: வகுத்தலில் சமபங்கிடானது மீதியைக் கூட கொடுக்கும்.


ஒவ்வொருவரும் 2 துண்டுகள் இனிப்பப்பத்தைப் பெறுவர். இவ்வாறாக 18 துண்டுகள் 9 நபர்களுக்கு 2 துண்டுகளாகச் சமமாகப் பங்கிடப்பட்டன.


(vi) குறுகிய வகுத்தல் முறை

670 ÷ 5

இங்கு 670 வகுபடும் எண்.

5 வகுக்கும் எண் ஆகும்.

குறிப்பு: மேலொட்டு என்றால் கொடுக்கப்பட்ட எண்ணின் வலது மேல் மூலையில் வைக்கப்படும் சிறிய எண் ஆகும். எகா 32,63


இங்கு 5ஆல் 6 1 முறை வகுக்க, மீதி 1 கிடைக்கும். ஈவு 1 நீள் வகுத்தல் கோட்டின் மேல் வைக்கவும். மீதி 1 6க்கு அருகில் மேலொட்டாக வைக்கவும்

அந்த மேலொட்டை வகுபடும் எண்ணின் வலது பக்கத்திலுள்ள அடுத்த எண்ணுடன் இணைக்கவும். தற்பொழுது, இந்தப் புதிய ஈரிலக்க எண்ணான 17 வகுக்கும் எண், எத்தனை முறை வகுக்கும் எனக் காண்போம். வகுக்கும் எண் 17 3 முறை வகுத்து மீதி 2 கொடுக்கும். ஈவு 3 வகுக்கும் கோட்டின் மேல் வைக்கவும். மீதி 2 வகுபடும் எண்ணான 7க்கு மேலொட்டாக வைக்கவும்..


தற்பொழுது வகுபடும் எண்ணின் கடைசி இலக்கம் மேலொட்டாக வைக்கப்பட்ட 2 இணைக்கவும். புதிய ஈரிலக்க எண் 20 கிடைக்கும். வகுக்கும் எண் 5, 20 4 முறை வகுக்கும். மீதி '0' ஈவு 134 ஆகும்.


670 ÷ 5 = 134


மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்

மீதியில்லாமல் வகுத்தல்


எடுத்துக்காட்டு 1

450 6 ஆல் வகுக்க.


படி 1 : வகுபடும் எண்ணில் 4 எடுத்துக்கொள்க. அது 6 ஆல் வகுபடாது. எனவே, வகுபடும் எண்ணின் வலதுபுறத்தில் உள்ள அடுத்த எண்ணுடன் இணைக்கவும். இதற்கு 0 வகுக்கும் கோட்டின் மேல் போடவும்.

படி 2: 45 6 ஆல் வகுக்க

6 ஆனது 45 7 முறை வகுக்கிறது. (அதாவது) 6 × 7 = 42

42 45 இன் கீழ்ப் போடவும்

ஈவு = 7 மீதி = 3

படி 3 : 30 எடுத்துக்கொள்க, 6 ஆல் 30 வகுக்க.

ஈவு = 5, மீதி = 0


எடுத்துக்காட்டு 2

ஒரு பழ வியாபாரி 531 ஆப்பிள்கள் வாங்குகிறார். அவற்றை 9 பெட்டிகளில் சமமாக அடுக்குகிறார். ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை ஆப்பிள்கள் வைத்திருப்பார்


மொத்த ஆப்பிள்களின் எண்ணிக்கை = 531

பெட்டிகளின் எண்ணிக்கை = 9

ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 531 ÷ 9


ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 59


மீதியுடன் வகுத்தல்:


எடுத்துக்காட்டு 3

369 7ஆல் வகுக்க.


ஈவு = 52 மீதி = 5

படி 1 : வகுபடும் எண்ணில் 3 எடுத்துக் கொள்க. 3 ஆனது 7ஆல் வகுபடாது. எனவே, அதனை வகுபடும் எண்ணின் வலதுபுறத்தில் உள்ள அடுத்த இலக்கத்துடன் இணைக்கவும். இதற்கு '0' வகுக்கும் கோட்டின் மேல் வைக்கவும். ஆகவே, 36 எடுக்க. 36 7ஆல் வகுக்க

7ஆனது 36 5 முறை வகுக்கிறது. அதாவது 

7 × 5 = 35.

ஈவு = 5, மீதி = 1

படி 2 : 19 எடுத்துக் கொள்க. 19 ஆனது 7ஆல் வகுபடும். 7 ஆனது 19 2 முறை வகுக்கிறது. அதாவது 7×2=14.

ஈவு = 2, மீதி = 5.

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Division: (up to 4 digit number by single digit number) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்