Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சமநிலையின் இயக்குத் தன்மை
   Posted On :  27.12.2023 07:46 am

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

சமநிலையின் இயக்குத் தன்மை

சமநிலையை அடையும் போது மீளும் தன்மையுடைய வேதிவினைகள் நிகழாமல் நின்று விடுவதில்லை.

சமநிலையின் இயக்குத் தன்மை:

ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கிடையே மக்கள் சென்று வரும் ஒரு நிலையைக் கருதுவோம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும், இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்திற்க வரும் மக்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதாக கொள்க. இந்நிலையில், மக்கள் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திற்கு செல்லும் வேகமும், இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்திற்கு வரும் வேகமும் சமம் ஆகும். எனவே, ஒவ்வொரு தளத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும். அதாவது இரண்டு தளங்களிலும் உள்ள மக்களின் எண்ணிக்கையில் ஒரு இயங்குச் சமநிலை காணப்படுகிறது. இந்த ஒப்புமையினை, நாம் சமநிலையின் இயங்குத் தன்மையினை புரிந்து கொள்ள பயன்படுத்தலாம்

சமநிலையை அடையும் போது மீளும் தன்மையுடைய வேதிவினைகள் நிகழாமல் நின்று விடுவதில்லை. சமநிலையில் முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கிய வினை ஆகிய இரண்டும் சமமான வேகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் பேரளவு மாற்றங்கள் (macroscopic changes) ஏதும் உணரப்படுவதில்லை. எனவே வேதிச் சமநிலை இயங்குச் சமநிலை என அழைக்கப்படுகிறது

எடுத்துக்காட்டாக,

H2 (g) + I2 (g) 2HI (g)


11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Dynamic nature of equilibrium in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : சமநிலையின் இயக்குத் தன்மை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை