Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சமநிலை மாறிலிகள் (Kp and Kc)
   Posted On :  27.12.2023 08:32 am

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

சமநிலை மாறிலிகள் (Kp and Kc)

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

சமநிலை மாறிலிகள் (Kp and Kc): 

பின்வரும் மீளும் வினையினை நாம் கருதுவோம்.

xA + yB lC + mD


இங்கு A மற்றும் B ஆகியன வினைபடு பொருள்கள் C மற்றும் D ஆகியன வினைவிளை பொருள்கள் மேலும் x, y, l மற்றும் m ஆகியன முறையே A, B, C மற்றும் D ஆகியனவற்றின் வேதி வினைக்கூறு விகித குணகங்களைக் குறிப்பிடுகின்றன.

நிறைதாக்க விதியினைப் பயன்படுத்த, முன்னோக்கிய வினையின் வினைவேகம்,

rf α [A]x [B]y (or) rf = kf [A]x [B]y

இதைப் போலவே, பின்னோக்கிய வினையின் வினைவேகம்,

rb α [C]l [D]m

(or)

rb = kb [C]l  [D]m

இங்கு kf மற்றும் kb ஆகியன விகித மாறிலிகள் சமநிலையில்

முன்னோக்கிய வினையின் வேகம் (rf) = பின்னோக்கிய வினையின் வேகம் (rb)

kf [A]x [B]y = kb [C]1 [D]m

அல்லது

kf / kb = [C]1 [D] m / [A] x [B] y = Kc


இங்கு Kc என்பது மோலார் செறிவின் அடிப்படையிலான சமநிலை மாறிலி ஆகும்

கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ளவாறு வினைவிளைப் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும், வினைப்படு பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். இம்மாறிலி சமநிலை மாறிலி எனப்படுகிறது. இது தோராயமாக மட்டுமே உண்மை என வேதி வினைவேகவியல் பாடப்பகுதியை பின்னர் கற்கும்போது நாம் அறிந்து கொள்வோம்.

மேற்கண்டுள்ள வினையின், வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகியன வாயு நிலைமையில் காணப்பட்டால், சமநிலை மாறிலியை பகுதி அழுத்தங்களின் அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு எழுத இயலும்.

Kp = Plc × Pmd / PxA × PyB


இங்கு PA,PB,PC, மற்றும் PD என்பன முறையே வாயுநிலையில் உள்ள A,B,C மற்றும் D ஆகியனவற்றின் பகுதி அழுத்தங்களாகும்

11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Equilibrium constants (Kp and Kc) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : சமநிலை மாறிலிகள் (Kp and Kc) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை