எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers
பயிற்சி 2.2
பின்வருவனவற்றை வகுக்க:
1) 5632÷6
2) 7460÷7
3) 4964÷8
4) 8616÷6
5) 8645÷7
6) 5742÷9
7) என்னுடைய பள்ளியில், 1 முதல் 8 வகுப்பு வரை 1112 மாணவர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை சமமாக இருக்குமெனில் ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
தீர்வு:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 1112
மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை = 8
1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 1112 ÷ 8
1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 139
தீர்வு:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 1115
மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை = 8
1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 1115 ÷ 8
1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 139
மீதமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 3
8) ஒரு மலையின் உயரம் 7821 மீ, ராஜ் அதன் உயரத்தை அடைவதற்கு 9 நாட்கள் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் சமதூரத்தைக் கடந்தார் எனில், எத்தனை மீட்டர் தினமும் கடந்தார்?
தீர்வு:
மலையின் உயரம் = 7821மீ
நாட்களின் எண்ணிக்கை = 9
ராஜ் 1 நாளில் கடந்த தூரம் = 7821 ÷ 9
1 நாளில் கடந்த தூரம் = 869 மீ
9) 7 பைகளில் 1785 கி.கி கோதுமை சரிசமமாக நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பையின் எடை எவ்வளவு?
தீர்வு:
மொத்த கோதுமையின் எடை = 1785 கி.கி
பைகளின் எண்ணிக்கை = 7
1 பையில் உள்ள கோதுமையின் எடை = 1785 ÷ 7
1 பையில் உள்ள கோதுமையின் எடை = 255 கி.கி