கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.4 | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

   Posted On :  21.11.2023 06:24 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.4

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.4 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.4


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்


1. தடித்து வரையப்பட்ட கோடுகளை (இணை, வெட்டு அல்லது செங்குத்துக் கோடுகள்) என வகைப்படுத்தி எழுதுக.


விடை

i) இணை கோடுகள்

ii) இணை கோடுகள்

iii) வெட்டும் கோடுகள்


2. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள இணைகோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் காண்க.


விடை




3. படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.


(i) 1 =  

(ii) 2  =

(iii) 3  =

(iv)  1 + 2 =

(v) 2 + 3 =

(vi) 1 + 2 + 3 =

விடை

(i) 1 = CBD அல்லது DBC

(ii) 2 = DBE அல்லது EBD

(iii) 3 = ABE அல்லது EBA

(iv) 1 + 2 = CBE அல்லது EBC

(v) 2 + 3 = ABD அல்லது DBA

(vi) 1 + 2 + 3 = ABC அல்லது CBA


4. கோணமானியைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.


விடை:

i) செங்கோணம் 

(ii) குறுங்கோணம்

(iii) நேர்கோணம்

(iv) விரிகோணம்


5. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து, நிரப்புக் கோணங்கள் மற்றும் நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.


விடை:

(i) மற்றும் (iv) நிரப்புக் கோணங்கள்

(ii) மற்றும் (iii) நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணங்கள்


6. கீழே கொடுக்கப்பட்ட படங்களிலிருந்து, மிகை நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.


விடை:

(ii) மற்றும் (iv) மிகை நிரப்புக் கோணங்கள்

(i) மற்றும் (iii) மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணங்கள்


7. படத்திலிருத்து,

(i) நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக.

(ii) மிகை நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக


விடை

i) FAE; EAD

ii) FAD; DAC

BAC; CAE

FAB; BAC

FAB; FAE



மேற்சிந்தனைக் கணக்குகள்


8. பின்வரும் கோடுகளை உள்ளடக்கியப் பொருட்களைச் சிந்தித்து எழுதுக.

இணைக் கோடுகள்    (1)__________ (2)____________(3)_____________

செங்குத்துக் கோடுகள் (1)___________(2)____________(3)_____________

வெட்டும் கோடுகள்    (1)___________(2)_____________(3)_____________

விடை

இணைக் கோடுகள்: (1) மேசையின் கால்கள் (2) தொடர் வண்டி தண்டவாளம்  (3) அளவுகோலின் எதிர் விளிம்புகள் 

செங்குத்துக் கோடுகள்: (1) எழுது பலகையின் அடுத்துள்ள விளிம்புகள்  (2) சன்னல்களின் அடுத்துள்ள சட்டங்கள் (3) நூலின் அடுத்துள்ள பக்கங்கள்

வெட்டும் கோடுகள்: (1) சன்னலின் அனைத்து சட்டங்கள்  (2) ஏணியின் குறுக்கு மற்றும் நெடிய சட்டங்கள் (3) கத்தரியின் இரு முனைகள்


9. எந்தக் கோணம் அதன் நிரப்புக் கோணத்தின் இருமடங்கிற்குச் சமமாக இருக்கும்?

விடை:

அந்தக் கோணம் = X என்க 

கணக்கின் படி,

x = 2 × (90 – x) 

x = 180 – 2

x  + 2 x  = 180 

3 x = 180

x = 180/3

x = 60 

அந்தக் கோணம் = 60°


10. எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?

விடை:

அந்தக் கோணம்= x என்க 

கணக்கின் படி

x = 2 /3 × (180° – x ) 

3x = 2 (180° – x) 

3 x = 360° – 2 x 

3 x + 2x = 360° 

5x = 360°

x = 360° / 5

x = 72°

அந்தக் கோணம் = 72°


11. இரண்டு கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு கோணத்தை விட 20° அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.

விடை

அந்தக் கோணங்களை x, x + 20° என்க 

கணக்கின் படி 

x  + x  + 20° = 180° 

2x + 20° = 180° 

2x =180° – 20° 

2 x = 160°

x = 160° / 2

x = 80°

x  + 20° = 80° + 20°

= 100° 

அந்தக் கோணங்கள் = 80°, 100°


12. இரண்டு நிரப்புக் கோணங்கள் 7:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களைக் காண்க

விடை

அந்தக் கோணங்களை 7x, 2x என்க

கணக்கின் படி

7x + 2x = 90°

9x = 90°

x = 90°/9

x = 10°

7x = 7×10° =70° 

2x = 2 × 10° = 20° 

இரண்டு கோணங்கள் = 70° மற்றும் 20°


13. இரண்டு மிகை நிரப்புக் கோணங்கள் 5:4 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அக்கோணங்களைக் காண்க.

விடை

அந்தக் கோணங்களை 5x, 4 x என்க

கணக்கின் படி

5x + 4 x = 180° 

9x = 180°

x  = 180° /9

x = 20° 

இரண்டு கோணங்கள் 

(i) 5x = 5 × 20° = 100° 

(ii) 4x = 4 × 20° = 80°

Tags : Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 4 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 4 : Geometry : Exercise 4.4 Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.4 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்