Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | புள்ளிகள் மற்றும் கோடுகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - புள்ளிகள் மற்றும் கோடுகள் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

   Posted On :  21.11.2023 05:17 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

புள்ளிகள் மற்றும் கோடுகள்

கொடுக்கப்பட்ட ஒரு புள்ளியானது, ஒரு கோட்டின் மீது இருக்கும் அல்லது இருக்காது.

புள்ளிகள் மற்றும் கோடுகள்

கொடுக்கப்பட்ட ஒரு புள்ளியானது, ஒரு கோட்டின் மீது இருக்கும் அல்லது இருக்காது.


'A' ஆனது கோடு 'll' இன் மீது உள்ளது. 'B' ஆனது 'll' இன் மீது இல்லை 'l2' 'மீதும் இல்லை. அப்புள்ளி 'B' கோட்டிற்கு அருகிலோ அல்லது தொலைவிலோ இருக்கலாம். ஆனால் கோடுகள் 'll' மற்றும் 'l2மீது இல்லை. இரண்டு புள்ளிகள் கொடுக்கப்பட்டால் அப்புள்ளிகள் வழியே சரியாக ஒரு கோடு மட்டுமே இருக்கும். பல சோடி புள்ளிகளை எடுத்துக்கொண்டு மேலே கூறிய கூற்றைச் சரிபார்க்க.

மூன்று புள்ளிகள் மற்றும் ஒரு கோடு என்னவாகும்?  'll' , 'l2', 'l3' மற்றும் ''l4' ஆகியவை கோடுகள் மற்றும் A, B, C என்பன மூன்று புள்ளிகள் என்க.


மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டின் மீது அமைந்தால், அவை 'ஒரு கோடமைப் புள்ளிகள்' எனச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படும்.

இரண்டு கோடுகள் ஒன்றையொன்று 90° கோண அளவில் வெட்டிக்கொண்டால் அக்கோடுகள் 'செங்குத்துக் கோடுகள்' எனப்படும்.


செயல்பாடு

நூலில் உள்ள இணைக்கோடுகள், செங்குத்துக் கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் காண்க.


இணைகோடுகள், செங்குத்துக் கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளுக்குக் குறைந்தது இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருக.

இரண்டு வெட்டும் கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்கின்றன. மூன்று கோடுகள் ஒரே புள்ளியில் வெட்டிக் கொள்ளுமா? இந்தக் கேள்விக்கான விடை கீழே கொடுக்கப்பட்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.


பல கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளும்போது, அவை ஒரு சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படும். அந்தப் புள்ளி P "ஒருங்கமைப் புள்ளி" எனவும், அக்கோடுகளை "ஒரு புள்ளி வழிக் கோடுகள்" என்றும் அழைக்கலாம்.

Tags : Geometry | Term 1 Chapter 4 | 6th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 4 : Geometry : Points and lines Geometry | Term 1 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : புள்ளிகள் மற்றும் கோடுகள் - வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்