Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | நினைவில் கொள்க

வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

   Posted On :  21.11.2023 06:18 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

கோடு என்பது இருபுறங்களிலும் முடிவின்றி நீண்டுகொண்டே செல்லும்.

கோட்டுத்துண்டிற்கு இரு முனைகள் உண்டு. இதன் இருபுறங்களும் முடிவு பெற்று இருக்கும்.

இணைகோடுகள் ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கும்.

இரண்டு கோடுகள் இணையாக இல்லையெனில், அவை ஏதோ ஓர் இடத்தில் சந்தித்துக் கொள்ளும். அவற்றை வெட்டும் கோடுகள் என்று அழைக்கின்றோம்.

இரண்டு கதிர்கள் ஒன்றையொன்று ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்ளும்போது, அப்புள்ளியில் அக்கதிர்கள் கோணத்தை உருவாக்குகின்றன.

கோணமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அளக்கின்றோம்.

● 90° இக்கும் குறைவான கோண அளவு குறுங்கோணம் எனப்படும்.

● 90° கோண அளவை கொண்டக் கோணம் செங்கோணம் எனப்படும்.

● 90° விட அதிகமாகவும், 180° விட குறைவாகவும் உள்ள கோண அளவு விரிகோணம் எனப்படும்.

இரண்டு கதிர்கள் அல்லது கோடுகள் சரியாக ஒன்றோடொன்று பொருந்தும் போது அவை பூச்சியக் கோணத்தை உருவாக்குகின்றன. அதுகோணமாகும்.

ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும்போது, மற்றொரு கோணம் அக்கோணத்தைச் செங்கோணமாக அல்லது 90° ஆக அடைய வைத்தால் அக்கோணம் நிரப்பு கோணம் எனப்படும்

ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும்போது, மற்றொரு கோணம் அக்கோணத்தை 180° அல்லது நேர் கோணமாக அமைந்தால் அக்கோணம் மிகை நிரப்பு கோணம் எனப்படும்.

● A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகளுக்கு, அவற்றின் வழியே செல்லும் தனித்த ஒரு கோடு இருக்கும்.

மூன்று புள்ளிகள் ஒரு கோட்டின் மீது அமைந்தால், அப்புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகள் எனப்படும்.

இரண்டு கோடுகள் ஒன்றையொன்று 90° கோணத்தில் வெட்டிக் கொண்டால் அவை செங்குத்துக் கோடுகள் எனப்படும்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் ஒரு புள்ளி வழிச் சென்றால் அக்கோடுகள் ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனப்படும். அப்புள்ளி, ஒருங்கமைப் புள்ளி எனப்படும்.



இணையச் செயல்பாடு

வடிவியல்

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி– 1 : இணைய உலாவியை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை copy செய்து paste செய்யவும். (அல்லது) கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும். (அல்லது) கொடுக்கப்பட்டுள்ள துரித துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

படி– 2 : GeoGebra பயிற்சி புத்தகத்தில் "Measuring Angles Using Protractor" என்ற பகுதி தோன்றும். ஒரு கோணமும் அதன் அருகில் ஒரு கோணமானியும் தோன்றும்

படி –3 : கோணமானியை சுட்டியின் மூலம் இழுத்து அந்த கோணத்தின் மீது வைத்து அந்தக் கோணத்தைக் கணக்கிடு. இப்பொழுது நீங்கள் அளவிட்டது சரியா என அறிய "Answer" என்ற பெட்டியை சொடுக்கவும். "Random" என்ற பொத்தானை சொடுக்கி புதிய பல்வேறு கோணங்களை அளந்து பார்த்து கோணங்களை அளவிடும் முறையை புரிந்து கொள்ளவும்.


செயல்பாட்டிற்கான உரலி

வடிவியல் : – https://www.geogebra.org/m/fMnsdbzv


Tags : Geometry | Term 1 Chapter 4 | 6th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 4 : Geometry : Summary Geometry | Term 1 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : நினைவில் கொள்க - வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்