Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | விசையும் அழுத்தமும்

அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விசையும் அழுத்தமும் | 8th Science : Chapter 2 : Force and Pressure

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

விசையும் அழுத்தமும்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖விசை மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளல். ❖ உந்து விசையையும் அழுத்தத்தையும் வேறுபடுத்துதல். ❖ வளிமண்டல மற்றும் திரவ அழுத்தத்தின் பண்புகளைப் புரிந்துகொள்ளல். ❖ அன்றாட வாழ்வில் பாஸ்கல் விதியைப் பயன்படுத்துதல். ❖ பரப்பு இழுவிசை மற்றும் பாகுநிலை ஆகியவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளல். ❖ ஓய்வு நிலை மற்றும் இயக்க நிலையில் உராய்வின் விளைவைப் பகுத்தாய்தல். ❖ உராய்வை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் வழிகளை அறிந்துகொள்ளல். ❖ விசை மற்றும் அழுத்தம் தொடர்பான கணக்குகளைத் தீர்த்தல்

அலகு 2

விசையும் அழுத்தமும்


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

விசை மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளல்.

உந்து விசையையும் அழுத்தத்தையும் வேறுபடுத்துதல்.

வளிமண்டல மற்றும் திரவ அழுத்தத்தின் பண்புகளைப் புரிந்துகொள்ளல்.

அன்றாட வாழ்வில் பாஸ்கல் விதியைப் பயன்படுத்துதல்.

பரப்பு இழுவிசை மற்றும் பாகுநிலை ஆகியவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளல்.

ஓய்வு நிலை மற்றும் இயக்க நிலையில் உராய்வின் விளைவைப் பகுத்தாய்தல்.

உராய்வை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் வழிகளை அறிந்துகொள்ளல்.

விசை மற்றும் அழுத்தம் தொடர்பான கணக்குகளைத் தீர்த்தல்.




அறிமுகம்

நாம் நமது வாழ்க்கையில் பல்வேறு பொருள்களைக் காண்கிறோம். அவற்றுள் சில பொருள்கள் இயங்குகின்றன. சில பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளன. ஓய்வு நிலையிலுள்ள பந்து ஒன்றை உதைக்கும்போது அது நகர்கிறது. அதைப்போலவே, ஓய்வு நிலையிலுள்ள ஒரு பொருளை இழுக்கும்போதும் அல்லது தள்ளும்போதும் அது நகர்கிறது. இழுக்கும் அல்லது தள்ளும் இந்தச் செயலே விசை எனப்படும். ஒரு குறிப்பிட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தத்தை உண்டாக்குகிறது. உதாரணமாக, நாம் ஒரு ஆணியை சுவற்றின்மீது அடிக்கும்போது, அது அழுத்தந்தை உண்டாக்குகிறது. திடப்பொருள்கள் மட்டுமன்றி, திரவங்கள் மற்றும் வாயுக்களும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன. திரவங்கள் மற்றும் வாயுக்களால் செலுத்தப்படும் அழுத்தம் பல வகைகளில் பயன்படுகிறது. நீரியல் தூக்கி மற்றும் நீரியல் வேகத்தடை ஆகியவை திரவங்களின் அழுக்கத்தினால் செயல்படுகின்றன. இந்தப் பாடத்தில் விசை மற்றும் அழுத்தம் பற்றி கற்க இருக்கிறீர்கள். மேலும், பரப்பு இழுவிசை மற்றும் பாகுவிசை பற்றியும் கற்க இருக்கிறீர்கள்.

Tags : Chapter 2 | 8th Science அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 2 : Force and Pressure : Force and Pressure Chapter 2 | 8th Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : விசையும் அழுத்தமும் - அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்