அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 1 : Measurement
செயல்பாடு 1
ஓர் அளவுகோலைக் கொண்டு, உங்களது அறிவியல் பாட நூலின் நீளம் மற்றும் அகலத்தினை அளந்தறிக. மேலும், அறிவியல் உங்களுக்குக் கிடைத்த மதிப்புகளை, உங்கள் நண்பர்களின் மதிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
செயல்பாடு 2
உங்களது
வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் ஒரு வாரத்தில் நிலவிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச
வெப்பநிலைகளை செய்தித்தாள் அல்லது மூலமாகவோ தொலைக்காட்சிச் செய்திகள் மூலமாகவோ சேகரித்து,
அவற்றை அட்டவணைப்படுத்துக. இம்மதிப்புகள் ஆண்டு முழுவதும் மாறாமல் இருக்குமா?
செயல்பாடு 3
மின்கல
அடுக்கு, அம்மீட்டர் மற்றும் மின்விளக்கு ஆகியவற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு தொடராக
இணைக்கவும். தற்போது அம்மீட்டர் காட்டும் அளவைக் குறிக்கவும். இதுவே, மின்சுற்றில்
பாயும் மின்னோட்டத்தின் அளவு ஆகும்.
தகவல் துளிகள்
ஒளிப்பாயம்
அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI அலகு 'லுமென்'
(lumen) எனப்படும்.
ஒரு
ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில், ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால்
அந்த ஒளிமூலத்தின் திறன் ஒரு லுமன் என வரையறுக்கப்படுகிறது.
செயல்பாடு
4
அட்டையைப்
பயன்படுத்தி ஒப்புமை வகைக் கடிகாரத்தின் மாதிரியை உருவாக்கவும்
செயல்பாடு 5
தீக்குச்சிகளை
ஒரு அட்டையின் மேல் வைத்து நாள் மற்றும் நேரத்தைக் காட்டும் எண்ணிலக்க வகைக் கடிகாரத்தை
உருவாக்கவும்.
செயல்பாடு 6
நீங்கள்
சூரியக் கடிகாரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு சூரியகடிகாரத்தை உருவாக்கி,
காலை முதல் மாலை வரை நேரத்தைக் குறித்துவைக்கவும். இந்த மதிப்புகளை நவீனகடிகாரங்களின்
மதிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும்.
கிரீன்விச் சராசரி நேரம் (GMT)
இது இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல் வானியல் ஆய்வுமையத்தின் (Royal Astronomical Observatory) நேரமாகும். இது 0° தீர்க்கக் கோட்டில் கணக்கிடப்படுகிறது. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்டையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேரமண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி 1 மணி நேரம் ஆகும்.
இந்திய திட்ட நேரம் (IST)
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இக்கோடானது 82.5° (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.
IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி
செயல்பாடு 7
ஒரு
நாளில் மனிதனின் இதயத் துடிப்புகளின் எண்ணிக்கையை தோராயமாகக் கணக்கிடுக (இதயம் தோராயமாக
ஒரு நிமிடத்தில் 75 முறை துடிப்பதாகக் கொள்க).