Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அடிப்படைக் கடமைகள்

இந்தியா - அடிப்படைக் கடமைகள் | 9th Social Science : Civics: Human Rights

   Posted On :  10.09.2023 11:11 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

அடிப்படைக் கடமைகள்

அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெற்றிருக்கவில்லை.

அடிப்படைக் கடமைகள்

அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெற்றிருக்கவில்லை.

1976ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசியலமைப்பு கீழ்கண்ட 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.

1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்ரையும் மதிக்க வேண்டும்.

2 விடுதலைப் போராட்டத்தின்போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.

3. இந்தியாவின் இறையாண்மை , ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

4. தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு நாட்டுப்பணியாற்ற வேண்டும்.

5. சமய, மொழி, மண்டல அல்லது பிரிவு  வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்பட பாடுபடவேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.

6. நமது கூட்டுப் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

7. காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.

8. அறிவியல் உணர்வு மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.

9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வன்முறையை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

10. தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்.

11. 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் ட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.


Tags : India இந்தியா.
9th Social Science : Civics: Human Rights : Fundamental Duties and Responsibilities of Citizens India in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : அடிப்படைக் கடமைகள் - இந்தியா : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்