வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக | 9th Social Science : Geography : Atmosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

காரணம் கூறுக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : காரணம் கூறுக

IV. காரணம் கூறுக


1. நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.

விடை:

நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது. இதனால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகிறது.

இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.

 

2. மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.

விடை:

மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது. ஏனெனில்,

மேகம் என்பது வளிமண்டலத்தில் கண்களுக்குப் புலப்படும் படியாக மிதந்து கொண்டிருக்கும் நீர்த்திவலைகளே மேகங்களாகும். நீர்த்திவலைகள் அதிகம் உள்ள நாளில் மேகமூட்டம் இருப்பதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகம் தெரிவதில்லை .

 

3. மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.

விடை:

மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது. ஏனெனில்,

மூடுபனி வழியே வெளிச்சம் ஊடுருவிச் செல்லாது. இதனால் வாகனங்கள் தெளிவாக தெரிவதில்லை.

 

4. வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

விடை:

வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளையில் 4 மணி அளவில் வெப்பச்சலன மழை அடிக்கடி நிகழ்கிறது.

 

5. துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.

விடை:

துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன. ஏனெனில், துருவ கீழைக் காற்றுகள் துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகிறது.

Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : Give Reason Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : காரணம் கூறுக - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்