Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : பொதுக்கருத்து மற்றும் கட்சி

அரசியல் அறிவியல் - கலைச்சொற்கள்(Glossary) : பொதுக்கருத்து மற்றும் கட்சி | 11th Political Science : Chapter 10 : Election and Representation

   Posted On :  04.10.2023 01:40 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி

கலைச்சொற்கள்(Glossary) : பொதுக்கருத்து மற்றும் கட்சி

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி : கலைச்சொற்கள்(Glossary)

கலைச்சொற்கள்: Glossary


தேர்தல் : ஓர் அரசாங்க பதவி அல்லது நிலைக்காக முறையாகவும், அமைப்பு ரீதியிலும் ஓர் நபரை வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுத்தல்.


பிரதிநிதித்துவம் : மற்றொருவரின் சார்பாக செயல்படுதல் அல்லது பேசுதல். வாக்குரிமை : பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை.


வாக்களித்தல் : வாக்களிக்கச் செல்வதுடன் வாக்குச்சீட்டில் ஒருவரைக் குறிப்பாக தேர்ந்தெடுக்க குறியிடுதல்.


தேர்தல் முறைமை: இது வாக்குகளை பிரிதிநிதிகளாக மாற்றும் முறையாகும்.


தேர்தலியல் : இது தேர்தல்கள் மற்றும் வாக்குப்பதிவின் போக்கினை பற்றி புள்ளி விபர அடிப்படையில் கற்பதாகும்


பன்மைத்துவம்: ஓர் வேட்பாளர் பிறரை விட வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்து அறுதிப் பெரும்பான்மையை பெறாததாகும்


பஞ்சாயத்து: இந்தியாவிலுள்ள ஊராட்சிக் குழுவாகும்


சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்: சிறுபான்மை சமுகங்களை சார்ந்த தேர்ந்தெடுப்பதன் முலம் அவர்களுக்கு பிரநிதித்துவம் தருதல்


பிரிவினைவாதம் : ஓர் பெரிய குழுவினுள் உள்ள இரண்டு அல்லது அதற்கும் மேலான சிறிய குழுக்களுக்கிடையே ஏற்படும் விவாதங்கள் மற்றும் சச்சரவுகள்


மக்களாட்சி: ஒட்டுமொத்த மக்களாலும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடைபெறும் அரசாங்க முறையாகும்


எல்லை வகுத்தல்: சட்டமியற்றும் அமைப்பினைக் கொண்ட ஓர் நாடு அல்லது மாகாணத்தில் உள்ள நில அடிப்படையான தொகுதிகளின் வரையறைகள் அல்லது நிர்ணயம் செய்யும் செயல் அல்லது நடைமுறை


வாக்காளர் பட்டியல் : தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் பட்டியல்.


நியமனம் : ஓர் பதவிக்கு யாரையேனும் அதிகாரப் பூர்வமாகப் பரிந்துரைத்தல்


தேர்தல் பரப்புரை : இக்காலகட்டத்தில் ஓர் அரசியல்வாதியோ அல்லது கட்சியோ மக்களைத் தங்களுக்கு வாக்களிக்குமாறு இணங்க வைத்தல்


கட்சித்தாவல் தடைச் சட்டம் : இச்சட்டம் 1985-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலமாக மற்றொரு கட்சிக்குத் தாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர்


தொகுதி: ஓர் குறிப்பிட்ட பகுதியிலுள்ள வாக்காளர்கள் சட்டமியற்றும் அமைப்பிற்கான தங்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தல்


வாக்குப்பதிவு : ஓர் தேர்தலில் வாக்களித்த தகுதிவாய்ந்த வாக்களர்களின் சதவீதம்.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 10 : Election and Representation : Glossary in Election and Representation Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி : கலைச்சொற்கள்(Glossary) : பொதுக்கருத்து மற்றும் கட்சி - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி