Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அரசியல் மீதான தாக்கங்கள்

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - அரசியல் மீதான தாக்கங்கள் | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:36 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

அரசியல் மீதான தாக்கங்கள்

சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும். இக்காலத்தில் வணிகமும் பொருளாதாரமும் விரிவடைந்தன. நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது. சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமானது மறுசீரமைக்கப்பட்டது.

அரசியல் மீதான தாக்கங்கள்

இந்தியத் துணைக் கண்டம் முழுதும் நிர்வாக அமைப்புகள், சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றின் மேல் பரந்துபட்ட தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின.

சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும். இக்காலத்தில் வணிகமும் பொருளாதாரமும் விரிவடைந்தன. நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது. சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமானது மறுசீரமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் (ஊர்) ஆகும். அதற்கு அடுத்தவை ஊர்களின் தொகுப்பான 'நாடு' மற்றும் கோட்டம் (மாவட்டம்) என்பனவாகும். பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் பிரம்மதேயம்' என்றறியப்பட்டன. சந்தை கூடுமிடங்களும் சிறுநகரங்களும் 'நகரம்' என்றழைக்கப்பட்டன. ஊர், நாடு, பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் (சபை) கொண்டிருந்தது. நிலங்களையும் நீர்நிலைகளையும் கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது. உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை, இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.

சோழர்களின் குறிப்பிடத்தகுந்த அம்சம், முதலாவதாக அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டதாகும். இது இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஒன்று புதிய கோவில்கள் கட்டப்பட்டன. இரண்டாவது ஏற்கனவே உள்ள கோவில்கள் பலமுனைச் செயல்பாடுகளைக் கொண்ட சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறியதாகும். கோவில்கள் கட்டப்படுவதானது அரசின் வளர்ந்துவரும் பொருளாதாரச் செழிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஏனெனில் கோவில் கட்டுமானமென்பது மிகப்பெரும் செலவினங்களை உள்ளடக்கிய நடவடிக்கையாகும். கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாக மட்டுமல்லாமல் முக்கிய பொருளாதாரப் பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாகவும் மாறின. அவை பொருட்களைக் கொள்முதல் செய்பனவாகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் நில உடமையாளராகவும் மாறின.

டெல்லியில் இஸ்லாமியராட்சி நிறுவப்பட்டது இந்தியச் சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இஸ்லாம் சமூகப் பதட்டங்களை ஏற்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக கேரளக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறிய அராபிய முஸ்லிம் வணிகர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டனர். இஸ்லாம் ஒரு அரசு மதமாக மாறிய போதுதான் சூழ்நிலைகள் மாறின. எதிரிகளின் வழிபாட்டு இடங்களை அழிப்பது என்பது தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இடைக்கால அரசர்கள் பின்பற்றிய ஒரு வழிமுறையாகும். மற்றபடி ஒரு கடவுள்' தத்துவத்தை முன்வைக்கும் இஸ்லாம் இந்தியச் சமுகத்தின் மீது பல நேரிடைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலப்புப் பண்பாடு உருவாவதில் இஸ்லாம் அளப்பரிய பங்காற்றியுள்ளது.

டெல்லி மற்றும் தக்காணத்திலிருந்த முஸ்லிம் அரசுகள் அராபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் குடிபெயர்பவர்களை இந்தியாவில் குடியேறக் கவர்ந்திழுத்தன. இவ்வாறு குடியேறியவர்கள் இந்நாடுகளில் பல்வேறு பணிகளில் அமர்ந்தனர். அவர்களில் பலர் முக்கியமானவர்களாகவும் நன்கறியப்பட்ட அரசியல் மேதைகளாகவும் விளங்கினர். இச்சூழல் இந்தியச் சமூகத்திற்கு மேற்காசியாவோடு நிலையான உறவுகளை மேற்கொள்ள கதவுகளைத் திறந்து வைத்தது. இதன் விளைவாகப் பண்பாட்டு தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் அரங்கேறின. படையெடுப்புகளின் போது முஸ்லிம் வணிகர்களும் கைவினைஞர்களும் இந்தியாவில் வடக்கேயிருந்து தெற்கே குடிபெயர்ந்தனர். இதனால் சமூகமானது பல இன மக்களைக் கொண்டதாகவும் கலப்புப் பண்பாட்டுத் தன்மை கொண்டதாகவும் மாறியது. இவ்வாறு ஒரு புதிய கலப்புப் பண்பாடு உருவானதைத் தக்காண சுல்தானியங்களான பீஜப்பூரிலும் கோல்கொண்டாவிலும் மிகத் தெளிவாகவே பார்க்கமுடியும். இவ்விரு அரசுகளின் சுல்தான்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் சமயச்சார்பற்ற பார்வை உடையவர்களாகவும் இருந்தனர்.

இக்காலப்பகுதியில் நிகழ்ந்த மற்றுமொரு குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி முஸ்லிம் சுல்தானியங்களைப் பற்றிய அராபிய பாராசீக வரலாற்று அறிஞர்கள் எழுதிய பெருமளவிலான சமகால வரலாற்றுக் குறிப்புகளாகும். இபின் பதூதா, அல்பரூனி, பெரிஷ்டா ஆகியோர் நன்கறியப்பட்ட சிறந்த வரலாற்று அறிஞர்கள் ஆவர். இவ்வரலாற்று அறிஞர்கள் இடைக்கால இந்தியாவின் அரசர்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிய முக்கியச் செய்திகளை குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி குறித்து ஒரு மாற்று வரலாற்றுக் கருத்தை அதுவும் சமகால முஸ்லிம் வரலாற்று அறிஞர்களின் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் உருவான கருத்தை அவை முன் வைப்பதால் அவை மதிப்புமிக்க வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன.

விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டதால் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் நிர்வாக, சமூக நிறுவனக்கட்டமைப்புகளில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது. அடிப்படையிலேயே விஜயநகர அரசு ஒரு ராணுவத்தன்மை கொண்ட அரசாகவே உருவானது. ஒருவேளை தொடக்கத்திலிருந்தே வடக்கே பாமினி சுல்தான்களோடு கொண்டிருந்த பகைமையே அதற்கு காரணமாக இருக்கலாம். பேரரசின் ராணுவத்திற்கு இரண்டு வகையான மூலவளங்கள் தேவைப்பட்டன. அவை நிதி ஆதாரமும் படைகளில் பணியாற்றத் தேவையான மனித வளமுமாகும். கைப்பற்றப்பட்ட பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் நிர்வாகத்தை மறுசீரமைப்பதின் மூலமே இத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் நாயக் என்றழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப் பெற்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் பாளையக்காரர்கள் இருந்தனர். இவர்கள் படைகளுக்குத் தேவையான வீரர்களை வழங்கினர். பல கோட்டைகள் கட்டப்பட்டன. அவைகள் பிராமண படைத்தளபதிகளின் கீழிருந்தன.

விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகள் கி.பி. (பொ..) 1500 க்கும் - கி.பி. (பொ..) 1550 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாயின. விஜயநகர அரசசபை சம்பிரதாய முறைகளில் இவர்களுக்குப் பங்கிருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இது ஒரு புதிய அரசியல் ஒழுங்கானது. இம்மூன்று நாயக்க அரசர்களும் ஏனைய நாயக்கத் தளபதிகளும் வலுவான சமயம் சார்ந்த கோவில்களின் ஆதரவாளர்களாய் இருந்தனர். இவ்வரசர்களின் ஆதரவில் மூன்று தலைநகரங்களும் சிறந்த பண்பாட்டு மையங்களாய் உருக்கொண்டன. நாயக்க அரசர்கள் இலக்கியங்களுக்கும் நிகழ்த்து கலைகளுக்கும் ஆதரவளித்து மேம்படுத்தினர்.

நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயை இந்நாயக்க அரசுகள் வரிப்பணம் என்ற வடிவத்தில் இல்லாமல் கப்பத் தொகையாகப் பேரரசிற்கு அனுப்பி வைத்தனர். இப்படியாக மையப் பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் மூல வளங்கள் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இப்படியான நிர்வாக முறை, சோழர்கள் காலத்து பரவலாக்கப்பட்ட உள்ளூர் நிர்வாகத்தையும் கோவில்களையும் உள்ளூர் பரிமாணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வளங்களையும் மேலாண்மை செய்துவந்த முதலாவதாக சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி நிறுவனங்களை அழித்துவிட்டன. நான்கு சமூகப் பிரிவுகள், 'வர்ணம்' என தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் குறிப்பிடப்படுவது. விளைவாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் தங்கள் சாதியின் தகுதியை மேம்படுத்திக் வடக்கேயிருந்து தமிழகத்தில் குடியேறினர். கொள்வதே பெரும்பாலான சாதிக் குழுக்களின் அவர்களுள் படைவீரர்கள், விவசாயிகள், முக்கியப் பணியாக இருந்தது. பதினான்காம் கைவினைஞர்கள், பிராமணர்கள் அடங்குவர்

மொகலாயப் பேரரசு வட இந்தியாவின் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்தது. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மொகலாயரின் ஆட்சி என்னும் குடையின் கீழ் ராஜபுத்திர அரசுகளோடு இணைந்து செயல்படும் கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் அக்பர் மொகலாய அரசை ஒருங்கிணைத்து வலுவுள்ளதாக்கினார். தனது அதிகாரத்தின் உச்சத்தில் மொகலாயப் பேரரசானது உலகிலேயே மிகப் பெரிய, செல்வச் செழிப்பைக் கொண்ட அதிகாரமிக்க பேரரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது அவர் மீண்டும் பழமைவாத இஸ்லாமிய நிர்வாக நெறிமுறைகளைப் பின்பற்றியதால் ராஜபுத்திர அரசர்களும் இந்துக்களும் அந்நியப்படுத்தப்பட்டனர். மேலும் பேரரசு ஓர் அளவைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் தனது ஆட்சியை கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடத் துவங்கியது. இத்தகைய காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசு சரியத் தொடங்கியது

இந்தியாவுக்கு ஐரோப்பியரின் வருகையானது இறுதியாக இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கம் உருவாவதில் முடிந்தது. ஐரோப்பியரின் வருகையின் தாக்கம் குறித்த விவாதத்தில் இது முதன்மையாகக் கருதப்படுகின்றது. இதே சமயத்தில் ஐரோப்பியச் சந்தையில் இந்தியத் துணிகளுக்கு எதிர்பாராத மிகப் பெருந் தேவை ஏற்பட்டது. இம்மனோநிலை அடிக்கடி இந்தியத் துணி மீது மயக்கம்எனக் குறிக்கப்பட்டது. இச்சூழல் இந்தியாவில் பெருமளவிலான துணி உற்பத்தியின் விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதோடு இணைந்து வணிகப் பயிர்களான பருத்தி, அவுரி மற்றும் ஏனைய சாயப் பொருட்களின் உற்பத்தியும் பெருகியது. இவற்றின் விளைவாக வணிக நடவடிக்கைகள் பெருகின.

Tags : State and Society in Medieval India | History இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு.
9th Social Science : History: State and Society in Medieval India : Impact on Polity State and Society in Medieval India | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : அரசியல் மீதான தாக்கங்கள் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்