இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - சமூகம்(சாதி, மதம்) | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:39 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

சமூகம்(சாதி, மதம்)

சாதி என்பது இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சமாகும். முதலாவதாக ‘சாதி’ என்ற வார்த்தை தொடர்பான இரண்டு பரிமாணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகம்

 

() சாதி

சாதி என்பது இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சமாகும். முதலாவதாக சாதிஎன்ற வார்த்தை      தொடர்பான இரண்டு பரிமாணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக சமய நூல்களில் குறிப்பிடப்ப ட்டுள்ள நான்கு சமூகப் பிரிவுகள், ‘வர்ணம்என குறிப்பிடப்படுவது.

தங்கள் சாதியின் தகுதியை மேம்ப டுத்திக் கொள்வதே பெரும்பாலான சாதிக் குழுக்களின் முக்கியப் பணியாக இருந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் இப்போக்கு தெளிவாகத் தெரிந்தது. இக்காலப் பகுதியில் உள்ளூர் வளங்களையும் சமூக உறவுகளையும் கட்டுப்படுத்திய மரபுசார்ந்த உள்ளூர் அமைப்புகள் வலுவிழந்தன. மரபு சார்ந்த சமூகத்தில் பல சாதிகளுக்கு பல்வேறு விதமான சமூக உரிமைகள் மற்றும் சலுகைகள் மறுக்கப்பட்டன

சாதியின் தோற்றத்தை மெய்ப்பிக்கப் புராணங்கள்சார்ந்த கற்பனை கலந்த வம்சாவளியை உருவாக்கினர். சமூகப்படி நிலைகளில் உயர்ந்த மதிப்புடைய இடம் வழங்கப்பட வே ண்டுமென்ற தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தினர். காலின் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில் இப்படியான வம்சாவளிகளைக் காணலாம்.

 

() மதம்

 இடைக்காலத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் காரணமாக பல்வேறு சிந்தாந்தாங்கள் உருவாயின. வித்யாராண்யர் போன்ற குருக்களின் அல்லது சமயத் தலைவர்களின் பெயரில் மடங்கள் நிறுவப்பட்டன. தமிழகத்தில் சைவ சித்தாந்தம், கர்நாடகத்தில் வீர சைவம் போன்ற சைவ இயக்கங்களும் உருவாயின. மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட வர்க்கரி சம்பிரதயாஎன்னும் இயக்கம் 14ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றது.

இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு மங்கியது. சங்கரர் மற்றும் இராமானுஜர் மேற்கொண்ட வலுவான பக்தி இயக்க புத்துயிர்ப்பின் விளைவாக சமணமதம் இந்தியாவின் பலபகுதிகளில் தனது பிடிப்பை இழந்தது. இருந்தப்போதிலும் குஜராத் மற்றும் மார்வார் பகுதிகளில் குறிப்பாக வணிகச் சமூகங்களிடையே சமணம் செழித்தோங்கியது. கிறித்தவ மதத்தைப் பொறுத்தமட்டிலும் எண்ணிக்கையில் குறைவான சில கிறித்தவக் குழுக்கள் தாங்கள் ஏசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் என்பவரால் கேரளாவில் கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டதா உரிமைகொண்டாடினர்.


ஆனால் போர்ச்சுகீசியர்கள் கேரளாவிற்கு வந்து பின்னர் கோவாவில் நிலை கொண்டபோது கிறித்தவ மதம் வேர் கொண்டது. கோவாவிலேயே உள்ளூர் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மதம்மாற அதுவும் காரணமானது மேலும் சமய நீதிமன்றங்களின் அடக்குமுறையின் கீழ் வற்புறுத்தப்பட்டனர். மற்றொருபுறத்தில் ஏசுசபையைச் சார்ந்த சமயப் பரப்பாளர்கள் வேறுபகுதிகளில் குறிப்பாக பாண்டிய நாட்டின் கடற்கரை பகுதிகளில் பரதவ சமூக மக்களிடையே சமயப் பரப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களில் நன்கறியப்பட்டவர் புனித பிரான்சிஸ் சேவியர் ஆவார். இவர் தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக (மீன் பிடிக்கும் சமூகம்) மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்தவராவார். மற்றொருவர் மதுரையில் செயல்பட்ட ராபர்ட் டி நொபிலி ஆவார்.

சீக்கிய மதம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் வாழ்ந்த குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பேரரசர் ஒளரங்கசீப் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறையையும் மீறி சீக்கிய மதம் வலுவாக வளர்ச்சியடைந்தது. ஆகவே பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் பல மதங்கள் ஒரே நேரத்தில் இருந்துள்ளன. யூதர்களும், ஜொராஸ்டிரியர்களும் (பார்சிகள்) இந்தியாவிற்கு குடிபெயர்ந்தபோது அந்நிய மதங்களும் இந்தியாவிற்குள் வந்தன. பார்சிகள் குஜராத்திலும் யூதர்கள் கேரளத்திலும் குடியேறினர். சூரத் துறைமுகத்திலும், ஆங்கிலேயர் காலத்தில் பம்பாயிலும்பார்சி இனவணிகர்களே பணம்படைத்த முக்கியத்துவம் வாய்ந்த வணிகர்களாய் இருந்தனர்.

Tags : State and Society in Medieval India | History இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு.
9th Social Science : History: State and Society in Medieval India : Society (Caste, Religion) State and Society in Medieval India | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : சமூகம்(சாதி, மதம்) - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்