இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : History: State and Society in Medieval India
V. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி
1.
மாலிக்காபூரின்
இராணுவப்
படையெடுப்புகளைப்
பற்றி
எழுதுக.
விடை:
மாலிக்காபூரின் படையெடுப்புகள்:
• கி.பி. 1296 - 1316ல் நடைபெற்ற அலாவுதீன் கில்ஜி ஆட்சியின்போது முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் உணரப்பட்டது. கி.பி. 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும் படைத்தளபதியுமான மாலிக்காபூர் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்றுவட்டத்துக்குள் வர நேர்ந்தது.
• செல்வங்களைக் கவரும் நோக்கில் பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. 'தௌலதாபாத்' என மறுபெயர் சூட்டப் பெற்ற தேவகிரி கைப்பற்றப்பட்டது. நாட்டின் இரண்டாவது வலிமைமிகு தளமாயிற்று.
2.
விஜயநகர
அரசை
உருவாக்கியது
யார்?
அவ்வரசை
ஆண்ட
வம்சாவளிகளின்
பெயர்களைக்
குறிப்பிடுக.
விடை:
• சங்கம் வம்சத்தின் ஹரிகரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு உருவாக்கப்பட்டது.
• சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ, ஆர வீடு வம்சாவளிகள்.
3.
பருத்தி
நெசவில்
இந்தியர்
பெற்றிருந்த
இயற்கையான
சாதகங்கள்
இரண்டினைக்
குறிப்பிடுக.
விடை:
• பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூலப் பொருள் எளிதாகக் கிடைத்தது.
• தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின்மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.
4.
நகரமயமாக்கலுக்கு
உதவிய
காரணிகள்
யாவை?
விடை:
• பெரிய நகரங்களும், சிறிய நகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினை பூர்த்தி செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன. விரிவான வலைப்பின்னல் போன்ற சாலைகள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
• சிறு நகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயுள்ள கிராம உட்பகுதிகளை இணைத்தன.
• பக்தர்களின் தொடர் வருகையால் புனித தலங்கள் நகரங்களாக வளர்ச்சியடைந்தன. சந்தை உருவாகி உற்பத்தியையும் வணிகத்தையும் ஊக்குவித்தது. பொருளாதார மையங்களாயின.
5.
பட்டு
வளர்ப்பு
என்றால்
என்ன?
விடை:
• பட்டு வளர்ப்பு என்பது மல்பெரி பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறையாகும். 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
• ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது.