இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - நகரமயமாதல் | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:54 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

நகரமயமாதல்

இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு அளவுகளில் நகரங்களும் சிறுநகரங்களும் சந்தை நகரங்களும் இந்தியாமுழுவதும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இந்தியா அடிப்படையில், கிராமியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தொகை குறைவாகவே இருந்தது.

நகரமயமாதல்

இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு அளவுகளில் நகரங்களும் சிறுநகரங்களும் சந்தை நகரங்களும் இந்தியாமுழுவதும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இந்தியா அடிப்படையில், கிராமியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தொகை குறைவாகவே இருந்தது. இருந்தாலும் அதனுடைய பொருளாதார, பண்பாட்டு முக்கியத்துவம் அதனுடைய வடிவத்தைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.

நகரமயமாக்கலை இயக்கிய காரணிகள் யாவை? நகரங்களும் சிறுநகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினைப் பூர்த்தி செய்தன.பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன. அவைகள் விரிவான அளவில் வலைப்பின்னலைப்போல் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்துச் சாலைகள் சந்திக்கின்ற இடங்களில் அமைந்திருந்தன.

தென்னிந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் நகரமயமாதலும் கோவில்களும் கைகோர்த்து நடந்தன. கோவில்கள் பெரிய அளவிலான பொருளாதார மையங்களாகின. பல்வகைப்பட்ட பொருட்களும் சேவைகளும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவைப்பட்டன. தங்களுடைய மதம் சார்ந்த சேவை நடவடிக்கைகள், மடப்பள்ளி மற்றும் ஏனைய பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் மக்களை வேலையில் அமர்த்திக் கொண்டன. கோவில்களுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு பல பொருட்களும் சேவைகளும் தேவைப்பட்டதால் கோவில் நகரங்கள் சந்தை மையங்களாகின.

 

முடிவுரை

இந்திய வரலாற்றில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கிய இடைக்காலம் அரசியல் பரப்பில் மாபெரும் மாற்றங்கள் நடந்த காலப்பகுதியாகும். அம்மாற்றங்கள் நாட்டின் சமூகப் பொருளாதாரத்தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

 

இதே காலத்தில் ஐரோப்பாவில்......

புனித ரோமானியப் பேரரசும் பேரரசர் சார்லெமக்னே


 ஐரோப்பிய கண்டத்தில் கி.பி. (பொ..) 9-வது நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் புனித ரோமானியப் பேரரசு தோன்றியது. கி.பி. (பொ..) 476 ஆம் ஆண்டுக்கு பிறகு பழைய ரோமானியப் பேரரசு புதிய ரோமானியப் பேரரசுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததால் முடிவுக்கு வந்தது. புதிதாக தோன்றிய ரோமானியப் பேரரசு கிறித்துவத்தையும், கிறித்துவ உலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்ததால் புனித என்ற அடைமொழி பெற்றது. இப்பேரரசர் போப்பாண்டவரைப் போலவே பூமியில் வாழும் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டார். இப்பேரரசர் அரசியல் நடைமுறையிலும், போப்பாண்டவர் என்பவர் சமயம் சார்ந்த பொறுப்பாளராகவும் விளங்க எல்லை வகுக்கப்பட்டிருந்தது. பேரரசர் உலகில் மிக உயர்ந்தவராக கருதப்பட்டாலும் போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

 பிராங்க் நாட்டின் சார்லெமக்னே அரசர், புனித ரோமானிய பேரரசர் என்ற பட்டத்தை (கி.பி. பொ.. 800) பெற்ற முதல் பேரரசர் ஆவார். இப்பேரரசர் சார்லெமக்னேனும் பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் பிரதிகாரா அரசர் முதலாம் நாகபட்டரும் சமக்காலத்தவர் ஆவர்.

அரசர் ஜான் மற்றும் மகாசாசனமும்


கி.பி. (பொ..) 1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த பிரபுக்கள் அரசர் இரண்டாம் ஜான் என்பவரை சுதந்திர தனியுரிமை பட்டயத்தில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தினார். இங்கிலாந்தின் பிரபுக்கள் மற்றும் மக்களின் சில சுதந்திரங்களை மதிக்க வேண்டும் என்ற கருத்தை அப்பட்டயம் உறுதிபடுத்தியிருந்தது. புனித ரோமானியப் பேரரசில் நிலவிய ஆட்சியாளரின் மேலாதிக்கக் கோட்பாட்டை இங்கிலாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து அரசர் ஜான் மற்றும் இந்தியாவை ஆண்ட சுல்தான் இல்டுமிஷ், இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். எனவேதான் ஆரம்பக்காலத்திலேயே மன்னரின் அதிகாரம் சோதிக்கப்பட்டதாக அறிகிறோம்.


மீள்பார்வை

டெல்லியில் முஸ்லீம் அரசு நிறுவப்பட்டதிலிருந்து ஏற்பட்ட முக்கிய அரசியல் மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.

தன்னெழுச்சிமிக்க சோழர்களின் காலமும், தெற்கே விஜயநகரப் பேரரசின் முக்கியத்துவமும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி சுல்தானிய, மொகலாயர் கால பொருளாதார சமூக நிலைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

கலை, இலக்கியம், இசை ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை , வணிகம், வர்த்தகம், நகரமயமாதல் ஆகியவற்றின் நிலைகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.

Tags : State and Society in Medieval India | History இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு.
9th Social Science : History: State and Society in Medieval India : Urbanization State and Society in Medieval India | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : நகரமயமாதல் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்