Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவரங்களின் வாழ்க்கைச்சுழற்சி வகைகள்

தாவரவியல் - தாவரங்களின் வாழ்க்கைச்சுழற்சி வகைகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

தாவரங்களின் வாழ்க்கைச்சுழற்சி வகைகள்

அனைத்து தாவரங்களிலும் பொதுவாக சந்ததி மாற்றம் காணப்படுகிறது. ஒற்றைமடிய (n) கேமீட்டகத்தாவர (Gametophyte) நிலையும், இரட்டைமடிய (2n) வித்தகத்தாவர (Sporophyte) நிலையும் மாறிமாறி வாழ்க்கைச் சுழற்சியில் காணப்படுவதே சந்ததி மாற்றம் (Alternation & of generation) எனப்படும்.

தாவரங்களின் வாழ்க்கைச்சுழற்சி வகைகள்


சந்ததி மாற்றம் (Alternation of Generation)

அனைத்து தாவரங்களிலும் பொதுவாக சந்ததி மாற்றம் காணப்படுகிறது. ஒற்றைமடிய (n) கேமீட்டகத்தாவர (Gametophyte) நிலையும், இரட்டைமடிய (2n) வித்தகத்தாவர (Sporophyte) நிலையும் மாறிமாறி வாழ்க்கைச் சுழற்சியில் காணப்படுவதே சந்ததி மாற்றம் (Alternation & of generation) எனப்படும். தாவரங்களில் கீழ்க்காணும் வாழ்க்கைச் சுழற்சிகள் காணப்படுகின்றன (படம் 2.2).


ஒற்றைமடிய கேமீட் உயிரி (Haplontic life cycle) வாழ்க்கைச் சுழல்

கேமீட்டகத்தாவரநிலை (n) ஓங்கி காணப்பட்டு, ஒளிச்சேர்க்கைத் திறனுடன் சார்பின்றி காணப்படுகிறது. வித்தகத் தாவரநிலை ஒரு செல்லால் ஆன கருமுட்டையை (zygote) மட்டும் குறிப்பிடுகிறது. கருமுட்டை குன்றல் பகுப்படைந்து ஒற்றைமடிய நிலையை தக்கவைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டு : வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா.


இரட்டைமடிய கேமீட் உயிரி(Diplontic life cycle) வாழ்க்கைச் சுழல்

வித்தகத்தாவர நிலை (2n) ஓங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன் பெற்று சார்பின்றி வாழ்கின்றன. கேமீட்டகத்தாவர நிலை ஒரு செல்லிலிருந்து சில செல்களைக் கொண்ட கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது. கேமீட்கள் இணைந்து கருமுட்டை உருவாகி வித்தகத்தாவரமாக வளர்கிறது. எடுத்துக்காட்டு : ஃபியுகஸ் சிற்றினம், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.

 

 

ஒற்றை இரட்டைமடிய உயிரி (Haplodiplontic life cycle) வாழ்க்கைச் சுழல்

இவ்வகை வாழ்க்கை சுழல் பிரையோஃபைட்கள், டெரிடோஃபைட்களில் காணப்படுகிறது. இது ஒற்றைமடிய கேமீட் உயிரி, இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழல்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது. கேமீட்டக, வித்தகத் தாவரநிலைகள் பல செல்களால் ஆனவை. இருப்பினும் ஓங்கு நிலையில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது. பிரையோஃபைட்களில் கேமீட்டகத்தாவரம் ஓங்கு நிலையில் காணப்படுகிறது. குறுகிய காலம் வாழும் வித்தகத்தாவரம் பல செல்களை பெற்று கேமீட்டகத் தாவரத்தினை முழுமையாகவோ, ஓரளவிற்கோ சார்ந்துள்ளது. டெரிடோஃபைட்களில் வித்தகத் தாவரம் சார்பின்றி காணப்படுகிறது. இது பல செல்களுடைய சாற்றுண்ணி (Saprophyte) அல்லது தற்சார்பு (Autotrophic) ஊட்டமுறையில் உள்ள தனித்து குறுகிய காலம் வாழும் கேமீட்டகத்தாவர (n) சந்ததிக்கு மாற்றாக உள்ளது.


Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Life Cycle Patterns in Plants in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : தாவரங்களின் வாழ்க்கைச்சுழற்சி வகைகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்