Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

தாவரவியல் - ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  22.05.2022 11:00 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

ஸ்போர்ன் (1965) ஜிம்னோஸ்பெர்ம்களை 3 வகுப்புகளின் கீழ் 9 துறைகளாகவும் 31 குடும்பங்களாகவும் வகைப்படுத்தியுள்ளார். அவை: (1) சைக்கடாப்சிடா (2) கோனிஃபெராப்சிடா (3) நீட்டாப்சிடா.

ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

ஸ்போர்ன் (1965) ஜிம்னோஸ்பெர்ம்களை 3 வகுப்புகளின் கீழ் 9 துறைகளாகவும் 31 குடும்பங்களாகவும் வகைப்படுத்தியுள்ளார்.

அவை: (1) சைக்கடாப்சிடா (2) கோனிஃபெராப்சிடா (3) நீட்டாப்சிடா.


முக்கிய வகுப்புகளின் பொதுப்பண்புகள்

வகுப்பு I - சைக்கடாப்சிடா

• பனை போன்ற அல்லது பெரணி போன்ற அமைப்புடைய தாவரங்கள்

• பெரிய அளவுடைய சிறகுக் கூட்டிலைகள் உள்ளன

• மானோசைலிக் கட்டை

• நகரும் ஆண் கேமீட்கள் உள்ளன

• மலர் போன்ற அமைப்புகள் காணப்படுவதில்லை.

எளிய ஸ்ட்ரோபிலஸ்கள் உள்ளன

எடுத்துக்காட்டு: சைகஸ், ஜாமியா

வகுப்பு II – கோனிபெராப்சிடா

• பல வடிவுடைய எளிய இலைகளைக் கொண்ட உயர்ந்த மரங்கள்

• பிக்னோசைலிக் வகைக் கட்டை

• கூம்பு போன்ற ஸ்ட்ரோபிலஸ்கள் உள்ளன

• நகரும் ஆண் கேமீட்கள் காணப்படுவதில்லை

(ஜிங்கோ பைலோபா தவிர)

எடுத்துக்காட்டு: பைனஸ்

வகுப்பு III – நீட்டாப்சிடா

• புதர் தாவரங்கள், செடிகள், வன்கொடிகள்

• இலைகள் நீள்வட்ட வடிவம் அல்லது சிறுநா வடிவதில் உள்ளன. எளிய, எதிர் அல்லது வட்ட இலையடுக்கம்

• நகரும் ஆண்கேமீட்கள் காணப்படுவதில்லை

• கட்டைகளில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன

• ஸ்ட்ரோபிலஸ்கள் மஞ்சரி என அறிப்படுகின்றன

• பூவிதழ்களைக் கொண்ட மலர் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: நீட்டம், எஃபிட்ரா

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Classification of Gymnosperms in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்