Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | கோட்டுத்துண்டு

வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கோட்டுத்துண்டு | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

   Posted On :  21.11.2023 02:56 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

கோட்டுத்துண்டு

குறுகியதும், இருபுறமும் முடிவுறு நீளம் கொண்ட கோட்டினை நாம் எவ்வாறு அழைப்போம்?

1. கோட்டுத்துண்டு


குறுகியதும், இருபுறமும் முடிவுறு நீளம் கொண்ட கோட்டினை நாம் எவ்வாறு அழைப்போம்? அதை நாம் "கோட்டுத்துண்டு" என்று அழைப்போம் மற்றும் அதன் இரண்டு முனைகளையும் படத்தில் (படம் 4.6) காட்டியுள்ளவாறு ஆங்கில எழுத்துகளால் பெயரிடுவோம்.


பொதுவாக நாம் ஆங்கில எழுத்துகளில் பெரிய எழுத்துகளைக் கோட்டுத்துண்டின் முனைகளைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம்ஒரு கோட்டுத்துண்டினை எனக் குறிக்கலாம். கோட்டுத்துண்டினை வைத்து என்ன செய்ய முடியும்? நாம் அதன் நீளத்தை அளக்க முடியும். இரண்டு கோட்டுத்துண்டுகள் கொடுக்கப்பட்டால் எது குறுகியது ? எது நீளமுடையது ? என ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

நீளத்தைப் பொருத்து நமக்கு நிறைய கோட்டுத்துண்டுகள் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளமுடையதாக இருக்கும். அளவுகோலைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத்துண்டுகளை வரையலாம்.


17 செ.மீ. அல்லது 20 செ.மீ அல்லது 30 செ.மீ அல்லது 378 செ.மீ அளவுகள் கொண்டக் கோட்டுத் துண்டை வரைய இயலுமா? எண்களைப் போன்று கோட்டுத்துண்டுகளின் நீளம் நீண்டு கொண்டே இருக்கும்.

இவற்றை முயல்க

படத்தில் உள்ள கோட்டுத் துண்டுகளின் பெயர்களை எழுதுக


விடை: EC, AE, DE, BE, AB, CD



2. கோட்டுத்துண்டுகளை வரைதல்


அளவுகோலைப் பயன்படுத்திக் கோட்டுத்துண்டுகளை அளத்தல்.

அளவுகோலைப் பார்க்கும் சரியான முறை


கோட்டுத்துண்டுகளை அளப்பதற்கான எடுத்துக்காட்டுகள்


இவற்றை முயல்க

AB = 5 செ.மீ. எனில் கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை சரியெனக் கூறுக.


விடை: (i), (ii)

உங்களுக்குத் தெரியுமா?

'Geo' என்பது புவி மற்றும் 'metron' என்பது அளவீடு. இந்த இரு கிரேக்கச் சொற்களிலிருந்து Geometry என்ற சொல் பெறப்பட்டது. வடிவியல் என்பது புவியின் அளவீடு ஆகும். கி.மு.(பொ..மு.) 600 இல் கிரேக்க நகரம் மிலட்டஸ்ஐச் சார்ந்த தேல்ஸ் என்பர் முதலில் வடிவியல் கருத்துகளைப் பயன்படுத்தினார். கிரேக்கக் கணிதவியலறிஞர் பிதாகரஸ் வடிவியலின் முறையான வளர்ச்சிக்கு உதவினார்.


எடுத்துக்காட்டு 4.1

அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி  = 5.5 செ.மீ. நீளமுடைய கோட்டுத்துண்டு வரைக.

தீர்வு

● 'l' என்ற கோடு வரைக மற்றும் அதில் P என்ற புள்ளியைக் குறிக்க: (படம் 4.10.)


படம் 4.11 இல் காட்டியுள்ளவாறு கவராயத்தைப் பயன்படுத்தி 5.5 செ.மீ நீளத்தை அளக்க, கவராயத்தின் உலோக முனையை 0 விலும் மற்றும் எழுதுகோல் முனையை 5.5 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.


கவராயத்தின் உலோக முனையை P யில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஒரு புள்ளியில் வெட்டும்இப்புள்ளியை Q எனக் குறிக்க. (படம் 4.12)


இங்கு, = 5.5 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும். (படம் 4.13)



செயல்பாடு

இந்த விளையாட்டைச் சிறு குழுக்களாக விளையாடலாம். சம அளவுள்ள 10 குச்சிகளை எடுத்துக் கொள்ளலாம். அவற்றை கட்டுகளாகக் கட்டித் தரையில் அவை ஒன்றன் மீது ஒன்றாக விழுமாறு போடவும். குச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கவேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குச்சிகளை எடுக்கும்போது மற்றொரு குச்சியினை அசைக்காமல் எடுக்க வேண்டும்.


செயல்பாடு


கோட்டுத்துண்டுகளைப் பயன்படுத்திக் கோலங்களை வரைந்து மகிழ்க!


Tags : Geometry | Term 1 Chapter 4 | 6th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 4 : Geometry : Line segment Geometry | Term 1 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : கோட்டுத்துண்டு - வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்