Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கலோரி மீட்டர் முறையினை பயன்படுத்தி ΔH மதிப்புகளை அளவிடல்
   Posted On :  26.12.2023 06:29 am

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

கலோரி மீட்டர் முறையினை பயன்படுத்தி ΔH மதிப்புகளை அளவிடல்

மாறாத அழுத்தத்தில் நடைபெறும் (பொதுவாக வளிமண்டல அழுத்தத்தில்) வினைகளில் நிகழும் வெப்ப மாற்றங்களை காஃபி கப் கலோரி மீட்டர் கொண்டு அளவிடலாம்.

() ΔH அளவிடுதல்

மாறாத அழுத்தத்தில் நடைபெறும் (பொதுவாக வளிமண்டல அழுத்தத்தில்) வினைகளில் நிகழும் வெப்ப மாற்றங்களை காஃபி கப் கலோரி மீட்டர் கொண்டு அளவிடலாம். காஃபி கப் கலோரி மீட்டரின் அமைப்பை குறித்துக் காட்டும் படமானது, படம் (7.7) ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கலோரி மீட்டரில் உலோக கலனிற்கு (பாம்) பதிலாக ஸ்டைரோபோஃம் கப் பயன்படுத்தப்படுகிறது. இது சிறந்த வெப்பம் கடத்தாப் பொருள், வினையில் உருவாகும் வெப்பத்தை சூழலுக்கு கடத்த இப்பொருள் அனுமதிப்பதில்லை. எனவே இங்கு உருவான மொத்த வெப்பமும், கப்பில் உள்ள நீரால் மட்டுமே உறிஞ்சப்படுகிறது. நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமானது அளந்தறியப்படுகிறது, மேலும் இதனைப் பயன்படுத்தி உறிஞ்சப்பட்ட () வெளியிடப்பட்ட வெப்பத்தின் அளவை, பின்வரும் சமன்பாட்டினை பயன்படுத்தி கணக்கிடலாம்.

q = mw Cw ΔT

இங்கு mW என்பது நீரின் மோலார் நிறை,

CW நீரின் மோலார் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு 75.29 J K-1 mol-1


படம்: 7.7 காபி கப் கலோரிமீட்டர்

வினையின் போது குறிப்பிடத்தக்க அளவு கனஅளவில் மாற்றம் ஏற்படாத வினைகளுக்கு இம்முறையினைப் பயன்படுத்த முடியும்

கணக்கு 7.4

300 K வெப்ப நிலை மற்றும் மாறாத அழுத்தத்தில் எத்திலீன் வாயுவின் எரிதல் என்தால்பி மதிப்பை கணக்கிடுக. மாறாத கனஅளவில் எத்திலீன் வாயுவின் எரிதல் என்தால்பி (ΔU) மதிப்பு -1406 kJ.

தீர்வு:

எத்திலீன் எரிதல் வினையை பின்வருமாறு எழுதலாம்.

C2H4 (g) + 3O2 (g) 2CO2 (g) + 2H2O (l)

ΔU = -1406 kJ

Δn = np(g) - nr(g)

Δn = 2 – 4 = -2

ΔH = ΔU + RT Δng

ΔΗ = -1406 + [8.314 × 10-3 × 300 × (-2)]

ΔΗ = -1410.9 KJ.


11th Chemistry : UNIT 7 : Thermodynamics : Measurement of ΔH using coffee cup calorimeter in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : கலோரி மீட்டர் முறையினை பயன்படுத்தி ΔH மதிப்புகளை அளவிடல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்