Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹேலோ ஆல்கேனின் தயாரித்தல் முறைகள்
   Posted On :  04.01.2024 07:11 am

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

ஹேலோ ஆல்கேனின் தயாரித்தல் முறைகள்

ஹேலோ ஆல்கேன்களை பின்வரும் முறைகளில் தயாரிக்கலாம்.

தயாரித்தல் முறைகள்

ஹேலோ ஆல்கேன்களை பின்வரும் முறைகளில் தயாரிக்கலாம்.

1) ஆல்கஹால்களிலிருந்து

பின்வரும் ஏதேனும் ஒரு வினைக் காரணிகளுடன் ஆல்கஹாலை வினைப்படுத்துவதன் மூலம் அதனை ஆல்கைல் ஹேலைடுகளாக மாற்றலாம்.

ஹைட்ரஜன் ஹேலைடு 

பாஸ்பரஸ் ஹேலைடுகள் 

தயோனைல் குளோரைடு 

. ஹைட்ரஜன் ஹேலைடுடன் வினை


அடர் HCl மற்றும் நீரற்ற ZnCl2 ஆகியவற்றின் கலவை லூகாஸ் வினைப்பொருள் எனப்படுகிறது.


ஹேலோ அமிலங்கள், ஆல்கஹாலுடன் புரியும் வினையின் வேகம் பின்வரும் வரிசையில் அமையும் HI > HBr > HCl ஆல்கஹால்கள் ஹேலோ அமிலங்களுடன் வினைபுரியும் வினைத் திறனின் வரிசை: மூவிணைய ஆல்கஹால் > ஈரிணைய ஆல்கஹால் >  ஓரிணைய ஆல்கஹால்.

. பாஸ்பரஸ் ஹாலைடுகளுடன் வினை

ஆல்கஹால்கள் PX5 அல்லது PX3 உடன் வினைபுரிந்து ஹேலோ ஆல்கேன்களைத் தருகின்றன. PBr3 மற்றும் PI3 ஆகியன வழக்கமாக சிவப்பு பாஸ்பரஸை புரோமின் மற்றும் அயோடினுடன் முறையே வினைப்படுத்தி, வினைநிகழும் வினைக் கலவையிலேயே உருவாக்கப்படுகின்றன

எடுத்துக்காட்டு


) தயோனைல் குளோரைடுடன் வினை

எடுத்துக்காட்டு


இவ்வினை டார்சனின் ஹேலஜனேற்ற வினை எனப்படுகிறது.

2) ஆல்கீன்களிலிருந்து பெறுதல்

ஆல்கீன்கள் ஹேலஜன் அமிலங்கள் (HCl,HBr,HI) உடன் வினைபட்டு ஹேலோ ஆல்கேன்களைத் தருகின்றன. சேர்க்கை வினையானது மார்கோனிகாப் விதியினைப் பின்பற்றி நிகழ்கிறது.

3) ஆல்கேன்களிலிருந்து பெறுதல்

ஆல்கேன்கள் ஹேலஜனுடன் (Cl2 அல்லது Br2) UV ஒளி முன்னிலையில் வினைபட்டு ஹேலோ ஆல்கேன்களைத் தருகிறது. இவ்வினை தனிஉறுப்பு பதிலீட்டு வினையாகும். மேலும் வினையில் மோனோ, டை அல்லது பல பதிலிடப்பட்ட ஹேலோ ஆல்கேன்கள் உருவாகின்றன

எடுத்துக்காட்டு

மீத்தேனை குளோரினேற்றம் செய்யும் போது வெவ்வேறு கொதிநிலை உடைய விளைப் பொருள்கள் உருவாகின்றன. எனவே இவைகளை பின்னவாலை வடித்தல் முறையில் பிரிக்க இயலும்.


4) ஹாலஜன் பரிமாற்ற வினைகள்

) ஃபின்கெல்ஸ்டீன் வினை

குளோரோ அல்லது புரோமோ ஆல்கேன்களை உலர் அசிட்டோனில் உள்ள செறிவு மிகுந்த சோடியம் அயோடைடுடன் வெப்பப்படுத்தும் போது அயோடோ ஆல்கேன்கள் உருவாகின்றன. இவ்வினை ஃபின்கெல்ஸ்டீன் வினை என்றழைக்கப்படுகிறது. (SN2வினை).


. ஸ்வார்ட்ஸ் வினை

குளோரோ அல்லது புரோமோ ஆல்கேன்களை, AgF, SbF3 அல்லது Hg2F2 ஆகிய உலோக புளூரைடுகளுடன் வெப்பப்படுத்தும் போது புளூரோ ஆல்கேன்கள் உருவாகின்றன. இவ்வினை ஸ்வார்ட்ஸ் வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு


5) கொழுப்பு அமிலங்களின் வெள்ளி உப்புகளிலிருந்து பெறுதல் (ஹன்ஸ்டைக்கர் வினை)

கொழுப்பு அமிலங்களின் சில்வர் உப்புகளை CCl4 ல் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த புரோமோ ஆல்கேன் உருவாகிறது.

11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Methods of preparation of Haloalkanes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : ஹேலோ ஆல்கேனின் தயாரித்தல் முறைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்