Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | இலைகளின் மாற்றுருக்கள்

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இலைகளின் மாற்றுருக்கள் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

இலைகளின் மாற்றுருக்கள்

தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தாவரங்கள் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன. அதில் ஒன்று இலைகளின் மாற்றுருக்கள் ஆகும். பல தாவரங்களின் இலைகள் தாங்கள் வாழும் சூழல் மற்றும் தங்களது தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்கின்றன.

இலைகளின் மாற்றுருக்கள்

தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தாவரங்கள் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன. அதில் ஒன்று இலைகளின் மாற்றுருக்கள் ஆகும். பல தாவரங்களின் இலைகள் தாங்கள் வாழும் சூழல் மற்றும் தங்களது தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்கின்றன.

1. முட்கள்

இலைகள் முட்களாக மாறியுள்ளன. தண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதியாக மாறியுள்ளது. எ.கா.: கள்ளி வகைகள்.



2. பற்றுக் கம்பிகள்

ஏறு கொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன. இவை ஏறுகொடிகள் தாங்கிகளில் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன.

குளோரியோசா சூப்பர்பா (செங்காந்தள்) : இலையின் நுனி பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

பைசம் சட்டைவம் (பட்டாணி): தாவரத்தின் நுனிச் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.


3. இலைத் தொழில், இலைக் காம்பு (அல்லது) பில்லோடு

அகேஷியா ஆரிகுலிபார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று, இலை போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது, இலை செய்ய வேண்டிய ஒளிச்சேர்க்கைப் பணியை மேற்கொள்கிறது.



4. கொல்லிகள்

நைட்ரஜன் ஊட்டச்சத்து இல்லாத இடத்தில் வாழும் தாவரங்கள் அவற்றைப் பெறுவதற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கின்றன.

நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறி, பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் கவர்ந்து இழுக்கின்றன. இலையின் உட்பகுதி செரிமான நொதிகளைச் சுரக்கின்றது. இந்த நொதிகளைப் பயன்படுத்தி இவை பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.






Tags : Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants : Modifications of Leaf Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் : இலைகளின் மாற்றுருக்கள் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்