தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
நினைவில் கொள்க
❖ உயிரினங்களின் மிக முக்கியமான பண்பு இனப்பெருக்கம். தாவரங்களில் இரண்டு வகையான இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. அவை: பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம்.
❖ பூக்கும் தாவரங்களில் மலர்களே தாவரத்தின் இனப்பெருக்க உறுப்புகளாகும். இவை, மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் மூலம் கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
❖ ஒரு மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு மகரந்தத்தாள் வட்டமாகும். பெண் இனப்பெருக்க உறுப்பு சூலக வட்டமாகும்.
❖ மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். மகரந்தச் சேர்க்கை இரண்டு வகைப்படும். அவை தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை .
❖ காற்று, நீர், பூச்சிகள் மற்றும் விலங்குகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படுகின்றன.
❖ மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, ஆண் கேமீட்டும், பெண் கேமீட்டும் இணைகின்றன. இது கறுவுறுதல் எனப்படும். கறுவுறுதலுக்குப் பின், சூலகம் கனியாகவும், சூல் விதையாகவும் மாறுகின்றன.
❖ வழக்கமாகச் செய்யும் பணிகளைத் தவிர, ஒருசில சிறப்பான பணிகளைச் செய்வதற்காக, வேர், தண்டு மற்றும் இலைகள் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. எனவே அவைதங்களது அளவு, வடிவம் மற்றும் நிறத்தை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இவை, வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்கள் எனப்படுகின்றன.இணையச்செயல்பாடு
பூக்களின் இனப்பெருக்கம்
பூக்களின் பாகங்களை பட்டியலிடுக
படிநிலைகள்:
படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.
படி 2: பின்பு OK என்னும் பொத்தானை சொடுக்கவும்.
படி 3: பெயரிடப்பட்ட பெட்டியில் ஒரு மகரந்தக் கேசரம் இழுக்கவும். பின்பு OK என்னும் பொத்தானை சொடுக்கவும்.
படி 4: திரையின் மேலே உள்ள கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை செயல்படுத்துக.
படி 5: 'Reset all' என்பதை சொடுக்கி புதுப்பிக்கவும்.
பூக்களின் இனப்பெருக்கம் உரலி:
http://www.sciencekids.co.nz/gamesactivities/lifecycles.html
** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.