Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹேலோ ஆல்கேனின் C – X பிணைப்பின் தன்மை
   Posted On :  04.01.2024 07:08 am

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

ஹேலோ ஆல்கேனின் C – X பிணைப்பின் தன்மை

ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது.

ஹேலோ ஆல்கேனின் C – X பிணைப்பின் தன்மை

ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது. ஆதலால் கார்பன் - ஹாலஜன் பிணைப்பானது முனைவுத் தன்மையைக் கொண்டுள்ளது. கார்பன் அணுவானது பகுதி நேர்மின் தன்மையினையும் (δ+) ஹாலஜன் அணுவானது பகுதி எதிர்மின் தன்மையினையும் (δ-)பெற்றுள்ளது


கார்பனின் sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலுடன், ஹேலஜன் அணுவின் சரிபாதி நிரப்பப்பட்ட p-ஆர்பிட்டால் மேற்பொருந்துவதால் C-X பிணைப்பு உருவாகிறது. புளூரினிலிருந்து அயோடினை நோக்கிச் செல்லும்போது ஹேலஜன் அணுவின் உருவளவு அதிகரிக்கின்றது. இதனால் C-X பிணைப்பு நீளமும் அதிகரிக்கின்றது. உருவளவு அதிகமாக இருப்பின், பிணைப்பு நீளமும் அதிகமாக இருக்கும், மேலும் உருவாகும் பிணைப்பின் வலிமை குறைவாக இருக்கும். CH2-Xல் C-X பிணைப்பின் வலிமை C-F லிருந்து C-I நோக்கிச் செல்ல குறையும். C-F லிருந்து C-I நோக்கிச் செல்லும் போது, பிணைப்பு நீளம், பிணைப்பு ஆற்றல் மற்றும் பிணைப்பின் முனைவு ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

கார்பன் - ஹாலஜன் பிணைப்பு நீளம், பிணைப்பு ஆற்றல் மற்றும் பிணைப்பின் முனைவினைக் காட்டும் அட்டவணை:



11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Nature of C – X bond in haloalkane in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : ஹேலோ ஆல்கேனின் C – X பிணைப்பின் தன்மை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்