Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கரிம உலோகச் சேர்மங்கள்
   Posted On :  04.01.2024 08:55 am

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

கரிம உலோகச் சேர்மங்கள்

கார்பன் அணுவுடன் உலோகங்கள், நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள கரிமச் சேர்மங்கள் கரிம உலோகச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

கரிம உலோகச் சேர்மங்கள்

கார்பன் அணுவுடன் உலோகங்கள், நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள கரிமச் சேர்மங்கள் கரிம உலோகச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன

எடுத்துக்காட்டு

CH3MgI- மெத்தில் மெக்னீசியம் அயோடைடு 

CH3CH2MgBr-எத்தில் மெக்னீசியம்புரோமைடு 

கிரிக்னார்டு வினைபொருளில் காணப்படும் கார்பன்-மெக்னீசிய பிணைப்பு சகப்பிணைப்பாகும். ஆனால் அதிக முனைவுற்றது. கார்பன் அணுவானது மெக்னீசியத்தைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது. எனவே கார்பன் அணு மீது பகுதி எதிர்மின்சுமையும், மெக்னீசியத்தின் மீது பகுதி நேர்மின்சுமையும் உள்ளன

R δ- ---- Mg δ+X


1. தயாரித்தல்

ஈதர் ஊடகத்தில், கணக்கிடப்பட்ட அளவு ஆல்கைல் ஹைலைடுடன் சிறிதளவு மெக்னீசியம் சேர்த்து வினைப்படுத்தப்படும் போது, மெக்னீசியம் மெதுவாக கரைந்து ஆல்கைல் மெக்னீசியம் ஹேலைடு (கிரிக்னார்டு காரணி) உருவாகிறது.

இவ்வினையில் பயன்படுத்தப்படும் அனைத்து வினைப்பொருள்களும் உலர்ந்த நிலையிலும் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு



தன் மதிப்பீடு

5) நீரற்ற நிலையில் கிரிக்னார்டு வினைபொருள் தயாரிக்கப்படுகிறது. ஏன்?

தீர்வு:

கிரினார்டு வினைபொருள் அதிக வினைபுரியும் தன்மை.

அது வினைபடுபொருள் அல்லது கலனில் உள்ள ஈரத்துடன் சிதைவுற்று ஆல்கேனை தருகிறது.


எனவே கிரிக்னார்டு வினைபொருள் நீரற்ற நிலையில் தயாரிக்கப்படுகிறது.


2. கிரிக்னார்டு வினைபொருளின் பயன்கள்

தொகுப்புமுறை வேதிவினைகளுக்கு இவ்வினைபொருள் மிகவும் பயனுள்ளதாகும். இவ்வினைப்பொருளை ஆல்கஹால்கள், கார்பாக்ஸிலிக் அமிலங்கள், ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்கள் போன்ற பல்வேறு கரிமச் சேர்மங்களாக மாற்ற இயலும். ஆல்கைல் தொகுதியானது அதிக எலக்ட்ரான் செறிவினைப் பெற்றுள்ளதால் கார்பன் எதிர் அயனி அல்லது கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளது. இவைகள் முனைவுற்ற மூலக்கூறுகளை,அவற்றின் எலக்ட்ரான் அடர்வு குறைவான பகுதிகளில் தாக்குகிறது. பின்வரும் வினைகள் கிரிக்னார்டு காரணியின் தொகுப்பு பயன்களை விளக்குகிறது.

(i) ஓரிணைய ஆல்கஹால்கள் தயாரித்தல் :

பார்மால்டிஹைடு கிரிக்னார்டு காரணியுடன் வினைபுரிந்து சேர்க்கை விளைபொருளைத் தருகின்றது. இச்சேர்க்கை விளை பொருளை நீராற்பகுக்க ஓரிணைய ஆல்கஹால் உருவாகிறது.


2) ஈரிணைய ஆல்கஹால் தயாரித்தல்

பார்மால்டிஹைடை தவிர்த்த பிற ஆல்டிஹைடுகள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைபட்டுத் தரும் சேர்க்கை விளைபொருளை நீராற் பகுக்கும்போது ஈரிணைய ஆல்கஹால்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டு


3) மூவிணைய ஆல்கஹால் தயாரித்தல்

கீட்டோன்கள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைபட்டுத் தரும்  சேர்க்கை விளைபொருளை நீராற்பகுக்கும்போது மூவிணைய ஆல்கஹால்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டு


(4) ஆல்டிஹைடுகளைத் தயாரித்தல்

ஈத்தைல் பார்மேட்டை கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைப்படுத்தும் போது ஆல்டிஹைடு உருவாகிறது. எனினும் கிரிக்னார்டு வினைபொருள் கூடுதலாக இருப்பின் ஈரிணைய ஆல்கஹால் உருவாகிறது.

எடுத்துக்காட்டு


(5) கீட்டோன்களைத் தயாரித்தல்

அமில குளோரைடுகள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைப்பட்டு கீட்டோன்களைத் தருகின்றன. எனினும் கிரிக்னார்டு வினைபொருள் கூடுதலாக இருப்பின் மூவிணைய ஆல்கஹால் உருவாகிறது.

எடுத்துக்காட்டு


6) கார்பாக்சிலிக் அமிலங்களைத் தயாரித்தல்

திட கார்பன்-டை-ஆக்ஸைடு கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைபுரிந்து பெறப்படும் சேர்க்கை விளைபொருளை நீராற்பகுக்க கார்பாக்சிலிக் அமிலங்கள் உருவாகின்றன.

எடுத்துக் காட்டு


7) எஸ்டர்களைத் தயாரித்தல்

எத்தில் குளோரோ பார்மேட்டை கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைபடுத்தும்போது எஸ்டர்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டு


8) உயர் ஈதர்களைத் தயாரித்தல்

குறைவான கார்பன் எண்ணிக்கையுடைய ஹேலஜனேற்றமடைந்த ஈதர்களை, கிரிக்னார்டு காரணியுடன் வினைபடுத்தும்போது அதிக கார்பன் எண்ணிக்கை உடைய ஈதர்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டு


9) ஆல்கைல் சயனைடுகளை தயாரித்தல்

கிரிக்னார்டு காரணியை சயனோஜன் குளோரைடுடன் வினைப்படுத்தி ஆல்கைல் சயனைடு பெறப்படுகிறது.

எடுத்துக்காட்டு


10) ஆல்கேன்களைத் தயாரித்தல்

நீர், ஆல்கஹால் மற்றும் அமீன்கள் போன்ற வினைத்திறன் மிக்க ஹைட்ரஜன் அணுக்களை கொண்டுள்ள சேர்மங்கள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைப்பட்டு ஆல்கேன்களைத் தருகின்றன.

எடுத்துக்காட்டு 

CH3MgI + HO - H→ CH4 + MgI (OH)


11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Organo metallic Compounds in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : கரிம உலோகச் சேர்மங்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்