Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : வினா விடை | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்

மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : வினா விடை

விலங்கியல்: மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறு நெடு வினா விடை

மதிப்பீடு


பகுதி – I - புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு


1. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

அ) Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால் 

ஆ) Y - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால் 

இ) X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால் 

ஈ) X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

விடை : ஈ) X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால் 



2. மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது 

அ) பல்கூட்டு அல்லீல்கள்

ஆ) கொல்லி மரபணுக்கள் 

இ) பால் சார்ந்த மரபணுக்கள்

ஈ) Y- சார்ந்த மரபணுக்கள்

விடை : அ) பல்கூட்டு அல்லீல்கள் 



3.  ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A,AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள்? 

அ) IA IB  மற்றும் I° I°

ஆ) IA I° மற்றும் IB  I° 

இ) IB IB மற்றும் IA IA

ஈ) IA  IA  மற்றும் I° I° .

விடை : ஆ) IA I° மற்றும் IB  I° 



4. கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது? 

அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன. 

ஆ) இயல்பான மரபணுக்கள் திடீர்மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன. 

இ) பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன. 

ஈ) பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன.

விடை : இ) பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன. 



5. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் A x B களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு? 

அ) A மற்றும் B மட்டும்

ஆ) A, B மற்றும் AB மட்டும் 

இ) AB மட்டும்

ஈ) A, B, AB மற்றும் O

விடை : ஈ) A,B,AB மற்றும் O 



6. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IA I° X IA IB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை? 

அ) AB 

ஆ) O 

இ) A

ஈ) B

விடை : ஆ) O



7. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை? 

அ) அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்

ஆ) இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள் 

இ) நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள் 

ஈ) நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்.

விடை : ஈ) நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள் .



8. இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்? 

அ) AB மட்டும்

ஆ) A, B, மற்றும் AB

இ) A, B, AB மற்றும் O

ஈ) A மற்றும் B மட்டும்

விடை : ஆ) A,B, மற்றும் AB 


9. குழந்தையின் இரத்தவகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார் 

அ) IA IA மற்றும் IB I0

ஆ) IA I° மற்றும் IB I0 

இ) IA I°  மற்றும் I° I0

ஈ) I°  I°  மற்றும் IB I° 

விடை : ஆ) IA I° மற்றும் IB I° 



10. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம் 

அ) வேறுபட்ட இனச்செல் ஆண்

ஆ) வேறுபட்ட இனச்செல் பெண் 

இ) ஒத்த இனச்செல் ஆண்

ஈ) ஆ மற்றும் இ

விடை : அ) வேறுபட்ட இனச்செல் ஆண் 



11. ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்? 

அ) O மற்றும் Rh-

ஆ) O மற்றும் Rh

இ) B மற்றும் Rh- 

ஈ) AB மற்றும் Rh+

விடை : அ) O மற்றும் Rh -



12. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு? 

அ) 25% 

ஆ) 50% 

இ) 100%

ஈ) 75% 

விடை : ஆ) 50% 



13. ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும். 

அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும் மற்றும் மகன்கள் இயல்பாகவும் இருப்பார்கள் 

ஆ) 50% மகள்கள் கடத்திகளாகவும் மற்றும் 50% இயல்பான பெண்களாக இருப்பார்கள் 

இ) 50% நிறக்குருடு ஆண்களாகவும் மற்றும் 50% இயல்பான ஆண்களாக இருப்பார்கள் 

ஈ) அனைத்து சந்ததிகளும் கடத்திகளாக இருப்பார்கள்

விடை : அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும் மற்றும் மகன்கள் இயல்பாகவும் இருப்பார்கள் 



14. டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது? 

அ) 20 

ஆ) 21

இ) 4

ஈ) 23 

விடை : ஆ) 21 



15. கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? 

அ) XYY 

ஆ) XO

இ) XXX 

ஈ) XXY 

விடை : ஈ) XXY



16. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது 

அ) சிறிய கருப்பை

ஆ) வளர்ச்சியடையாத அண்டகங்கள் 

இ) வளர்ச்சியடையாத மார்பகம்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும் 



17. பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

அ) 13 - டிரைசோமி 

ஆ) 18 - டிரைசோமி 

இ) 21 - டிரைசோமி 

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

விடை : அ) 13 - டிரைசோமி 



18. பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே ...... மற்றும் .......... ஆகும் 

அ) AB, O 

ஆ) O, AB 

இ) A, B

ஈ) B,A 

விடை : ஆ) O, AB 



19. ZW - ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது 

அ) மீன்கள் 

ஆ) ஊர்வன

இ) பறவைகள் 

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும் 



20. இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது 

அ) A 

ஆ) AB

இ) B

ஈ) O 

விடை : ஆ) AB 



21. ZW - ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.

அ) பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது. 

ஆ) பெண்கள் ஒத்தயினச்செல்லை மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர். 

இ) ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர். 

ஈ) இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன. 

விடை : ஆ) பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர். 



22. ஒற்றைமய - இரட்டைமய நிலை என்றால் என்ன?

ஒற்றைமய - இரட்டைமய நிலை (எ.கா) தேனீ, எறும்பு மற்றும் குளவி 

* சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

* கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக உருவாகின்றது ராணி, வேலைக்காரத் தேனீ 

* கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்கமுறையிலம் வளர்ச்சியடைகின்றன.

* எனவே ஆண் தேனீக்கள் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. 

* பெண் தேனீக்கள் இரட்டைமய குரோமோசோம்களைக் கொண்டுள்ளன. இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது. 



23. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

ஒத்தயினச்செல் பால் நிர்ணயம்

1. ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன.

2. (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும்

வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் 

1. வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. 

2. மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன. 

X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் 



24. லையோனைசேஷன் என்றால் என்ன? 

லியோன் கொள்கை - ஒரு X குரோமோசோம் செயல்படாமல் இருப்பது 

* XY குரோமோசோம் வகை பால் நிர்ணயித்தலில் ஆண் உயிரிகள் ஒரு X குரோமோசோம் கொண்டுள்ளது. 

* பெண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்கள் கொண்டுள்ளன. 

* பாலினத்திற்கு இடையேயான இந்த அளவீட்டு வேறுபாடு ஈடு செய்யப்படுகிறது. 

* ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலின உயிரிகளிலும் ஒரு செல்லுக்கு ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது. 

* மேரி லியோன் கருதுகோளின்படி பார் உறுப்புகள் செயல்படாமல் உள்ளது. 

* பெண் உயிரிகளில் இவை மிக நெருக்கமாக சுருண்டு குரோமேட்டினின் காணத்தக்க வடிவமான ஹெட்டிரோ குரோமேட்டின் ஆக மாறுகிறது. 

* ஹெட்டிரோ குரோமேட்டின் என்பது எங்கு புரத உற்பத்தியில் பிரித்தெடுத்தல் நடக்கவில்லையோ அப்பகுதி ஆகும். 



25. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

* குறுக்கு மறுக்கு மரபு கடத்தல் பண்பானது தந்தையிடம் இருந்து கடத்திகளாக உள்ள மகள் வழிபேரனுக்கு கடத்தப்படுவது. 

* கடத்தி ஒரு நோய்க்கான ஜீன் கொண்டவர்கள் அந்நோயினால் பாதிக்கப்படாதவர்கள் 

* நிறக்குருடு பாரம்பரியம் ஒரு உதாரணம் ஆகும் ஹீமோபிலியாவும் ஓர் உதாரணம்.






26. பால்சார்ந்த ஒருங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது? 

* ஆண்கள் ஹெமிசைகஸ் நிலையினர் 

* ஒரு திடீர்மாற்ற அல்லீல் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் பொழுது அதற்கான பண்பை வெளிப் படுத்துகின்றது. 

* எனவே பால்சார்ந்த ஒடுங்கு பண்பு ஆண்களில் அதிகமாகக் காணப்படுகிறது. 



27. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை? 

* Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலன்டிரிக் ஜீன்கள் எனப்படும். 

*  'Y' சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீல்கள் X குரோமோசோமில் இல்லை. 

*  'Y' சார்ந்த மரபணுக்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்தே கடத்தப்படுகிறது. 

* ஆண் பாலினத்தில் மட்டுமே அல்லீல்கள் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றன. 



28. பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக? 

* அதி தீவிர மூளை குறைபாட்டு நோய்

* தோல் மற்றும் முடிகளில் குறைவான நிறமிகள் உண்டாகின்றன.

* பைருவிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றது. 



29. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக? 

* தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு 

* மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்

* இரு கண்களுக்கிடையே அதிக தூரம் காணப்படுதல்

* தட்டையான மூக்கு 

* செவி குறைபாடு

* வாய் எப்போதும் திறந்திருத்தல் 

* நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல் 



30. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

இடைபால் உயிரி 

1. குரோமோசோம் ஜூனோடைப் மற்றும் பாலின புறத்தோற்ற சேர்ந்த XY ஆண் மற்றும் XX பெண் அல்லாத அமைப்பு

2. பால் பண்புகளில் மாற்றத்தை முக்கியமாக குரே ராமோசோம் இனச்செல்கள் பால் ஹார்மோன்கள் அல்லது பிறப்புறுப்புகள் உண்டு ஆண் அல்லது பெண் என்று கருத முடியாது.

3. அதிகப்படியான X மற்றும் Y குரோமோசோம் உள்ளது.

4. இருபால் உயிரினம் அல்லது ஹெர்மாப்ரடைட் ஆகும்.

5. அண்டக மற்றும் விந்தக திசுக்கள் காணப்படும்

6. வெளிப்புற பிறப்புறுப்பு துளைகள் குறைபாடுடையவை.

மிகைபெண்

1. மிகைபெண் அதிக எண்ணிக்கையில் X குரோமோசோம் உடையவர் அவர்களில் 44 உடல் குரோமோசோம் மற்றும் 3X குரோமோசோம் உள்ளது. மும்மய X நோய் குறியிடு என்று பெயர். 

2. மூளை வளர்ச்சி குறைவு, மலட்டுத்தனமை மிகை ஆண் (XYY ஆண்) 

3. XYY குறியீடு என அழைக்கப்படுகிறது. 

4. அதிகப்படியான Y குரோமோசோம் உண்டு  

5. மூளை குறைபாடு மற்றும் குற்றச் செயலில் ஈடுபடும் தன்மை 



31. மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி. 


* இரத்த வகையை நிர்ணயிப்பது குரோமோசோம் 9ல் உள்ள மூன்று அல்லீல்கள் ஆகும். 

* இந்த அல்லீல்கள் இரத்த வகுப்பை நிர்ணயிக்கின்றன.

* இரத்தவகையை கட்டுப்படுத்தும் மரபணு L (L கண்டுபிடித்தவர் லேண்ட்ஸ்டெய்னர் பெயரால்) I (ஐஸோ அக்ளுட்டினேசன்) 

* மரபணு I ஆனது IAIBIO என்ற மூன்று அல்லீல் வடிவங்களைக் கொண்டுள்ளது. 

* IA அல்லில் எதிர்பொருள் தூண்டி A 

* IB அல்லில் எதிர்பொருள் தூண்டி B யையும் குறிக்கிறது. 

* IO அல்லில் எந்த ஒரு எதிர்ப்பொருள் தூண்டியையும் குறிக்கவில்லை.

* ஒவ்வொரு IA மற்றும் IB அல்லீலும் டிரான்ஸ்பெரேஸ் எனும் நொதியை உற்பத்தி செய்கிறது. 

* IA அல்லீல் N அசிட்டைல் கேலக்டோசனைச் சேர்க்கிறது. 

* IB அல்லீல் கேலக்டோஸ் டிரான்பெரேஸ் நொதியை சுரந்து கேலக்டோஸை H' பொருள் எனப்படும் மூலப்பொருளோடு சேர்க்கிறது. 

* IO அல்லீல் டிரான்ஸ்பெரேஸ் நொதி எதையும் சுரப்பதில்லை எனவே வெற்று அல்லீல் என்று அழைக்கப்படுகிறது.

NAG அல்லது கேலக்டோஸை மூலப்பொருளுடன் சேர்ப்பதில்லை. 



32. மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? 


* பால் நிர்ணயம் செய்யும் ஜீன்கள் பால் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.

* ஆண் பெண் பால் நிர்ணயம் குரோமோசோம்களின் வேறுபாடுகளில் நடைபெறுகிறது.

* பெண் உயிரிகள் XX குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களை உடையவர்.

*  பெண்கள் ஒத்த இனச்செல்களை கொண்டு ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றனர். 

* ஆண்கள் வேறுபட்ட இனச்செல்களைக் கொண்டு இரண்டு வகை விந்து செல்களை உற்பத்தி செய்கின்றனர். 

* XY - XX வகை பால் நிர்ணயம் பழப் பூச்சியில் நடைபெறுகிறது. 

* கருவுறச் செய்யக்கூடிய விந்து செல்லின் வகையே கருக்களின் பாலினத்தை நிர்ணயம் செய்கின்றன. 

* X குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை பெண் உயிரியாகிறது. 

*  Y குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை ஆண் உயிரியாகவும் மாறுகின்றன. 



33. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹேடிரோஹோமிடிக்) உடையவர் 

XX-XO வகை 

* உ.ம். பூச்சிகள், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி 

* ஆண்கள் ஹெடிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர். 

* இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன. 

* ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை. 

* சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து 

XX-XY வகை (லைகேயஸ் வகை) 


* உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி

* ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.

* அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் சில 'Y' குரோமோசோம் கொண்டும் உள்ளன.

* கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொருத்தது. 

* 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும்'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும். 



34. வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி விரிவாக விவரி. 

வேறுபட்ட இனச்செல் பெண்கள்

மீன்கள் ஊர்வன பறவைகளில் பெண் உயரிகள் வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன. 

ZO - ZZ வகை 

* இவ்வகை பால் நிர்ணயம் அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி வீட்டுக் கோழிகளில் காணப்படுகிறது.

* இவைகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் வகை ZO சார்ந்தன.

* இவைகள் இரண்டு வகையான முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. 

* சில முட்டைகள் Z குரோமோசோம் அற்றும் O காணப்படுகின்றன.

* ஆண் அமைப்புகள் ஒத்த இனச்செல் வகை ஆகும். 

ZW - ZZ வகை 

* இவ்வகை பால் நிர்ணயம் ஜிப்சி அந்திப்பூச்சி முதுகுநாண் உயிரிகளான மீன்கள் ஊர்வன மற்றும் பறவைகளில் காணப்படுகின்றன. 

* பெண் உயிரிகள் இருவகையான அண்டத்தை வெளியிடுகின்றன. 

* ஒரு Z குரோமோசோமையும் ஒரு W குரோமோசோமையும் பெற்றுள்ளன. 

* ஆண் உயிரிகள் ஒரே வகையான விந்து செல்களை ஒத்த இனச்செல் ZZ முறையில் உற்பத்தியாகின்றன. 



35. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு.

ஃபீஷர் மற்றும் ரேஸ் கருதுகோள் : 

* Rh காரணியின் மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் குரோமோசோம் இணைகளின் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. (Cc, Dd Ee) 

* இது பொதுவாக cde என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. 

* ஒவ்வொரு குரோமோசோம் C அல்லது C ஒரு D அல்லது d, ஒரு E அல்லது e வாய்ப்புக்கான மரபு வகையைப் பெற்றிருக்கும்.

* எ.கா. CDE / cde 

CdE / cDe

cde / cde 

CDe / CdE


* அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன. 

* இரண்டு ஓங்கிய பண்பு கொண்ட மரபு வகையில் dd அல்லீல்கள் Rh+ புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன. 

வெய்னரின் கருதுகோள் :

* ஒரு Rh னுடைய இருப்பிடத்தில் எட்டு அல்லீல்கள் (R1 R2 RO RZ rr1 r11 r1) இருக்கின்றன. 

* ஒங்கிய அல்லீல்களைக் கொண்ட அனைத்து மரபு வகைகளும் (R1 R2 RO RZ ) Rh (+)  புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன. 

* ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் (rr IT2 rr11 ry ) Rh- புறத்தோற்றத்தையும் உற்பத்தி செய்கின்றன.



36. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி.

ஒற்றை மய - இரட்டை மய நிலை (உ.ம்) தேனீ, எறும்பு, குளவி 

* இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. 

* கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன. 

* கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.

* ஆண் தேனீக்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன (ஒற்றைமயம்) 

* பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டைமயம்) இதனால் இம்முறை ஒற்றைமய - இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது. 



37. பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி? 

மரபணு சமநிலை கொள்கை : 

* C.B பிரிட்ஜஸ் என்பவர் முதன் முதலில் பழப்பூச்சிகளில் மரபணு சமநிலை மூலம் பால் நிர்ணயிக்கப் படுவதைக் கண்டறிந்தார். 

* பெண் தன்மைக்கான மரபணுக்களும் உடல் குரோமோசோம்களுக்கும் இடையேயான மரபுச் சமநிலையே இப்பூச்சிகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது. 

* ஒவ்வொரு X குரோமோசோமிலும் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5 

* ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உடல் குரோமோசோம்களில் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.0 

* இயற்பான ஆண் AAxy ஆகும். எனவே ஆண் பெண் விகிதம் 2 :1: 5 (A - ஒற்றை மய உடல் குரோமோசோம்)

* இங்கே மரபணு சமநிலை ஆணிற்கு சாதகமாக உள்ளன. 

* இயல்பான பெண்ணிற்கான நிர்ணயித்ததில் ஆண் பெண் நிர்ணய விகிதம் 2 : 3 (AAxx = 2:3) என்ற விகிதத்தில் உள்ளது. இங்கே மரபணு சமநிலை பெண் உயிரிக்கு சாதகமாக அமைகிறது. 



38. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக? 

* பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.

* நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது. 

* ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது. 

* சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது. 

* மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.




Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல்.
12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation : Principles of Inheritance and Variation: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்