Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | குரோமோசோம் தொகுப்பு வரைபடம்

குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரிக்கும் முறை, குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - குரோமோசோம் தொகுப்பு வரைபடம் | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation

   Posted On :  13.05.2022 05:14 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்

குரோமோசோம் தொகுப்பு வரைபடம்

ஒரு செல்லில் உள்ள குரோமோசோம் தொகுதியை முழுமையாகப் பிரித்தெடுத்து அவற்றை இணைகளாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பமே குரோமோசோம் தொகுப்பு வரைப்படம் ஆகும்.

குரோமோசோம் தொகுப்பு வரைபடம் (Karyotyping)

ஒரு செல்லில் உள்ள குரோமோசோம் தொகுதியை முழுமையாகப் பிரித்தெடுத்து அவற்றை இணைகளாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பமே குரோமோசோம் தொகுப்பு வரைப்படம் ஆகும். குரோமோசோம் வரைபடம் (Idiogram) என்ற சொல் குரோமோசோம்களை படமாக காட்சிப்படுத்துதலை குறிக்கும்.


குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரிக்கும் முறை

ஜியோ மற்றும் லிவான் (Tjio and Levan) (1960) ஆகிய இருவரும் மனித இரத்தத்தில் உள்ள லிம்போசைட்டுகளை எளிய முறையில் வளர்ப்பது குறித்து விளக்கினர். இச்செல்களின் மறைமுகப் பிரிவு தூண்டப்பட்டு மெட்டாபேஸ் நிலையை அடையும்பொழுது அதில் கோல்சிஸின் (Colchicine) சேர்த்த உடன், அச்செல்கள் செல் பிரிதல் நிகழ்வை அதே நிலையில் நிறுத்திவிட்டன. பின்னர், மெட்டாபேஸ் நிலையில் உள்ள செல்லின் அனைத்து குரோமோசோம்களும் படமெடுக்கப்பட்டது. படத்திலிருந்த ஒவ்வொரு குரோமோசோமும் தனித்தனியாயாக வெட்டியெடுத்து அவற்றின் ஒத்த இணைகளோடு (Homologus pair) வரிசையாக அமைத்தனர். இத்தகைய வரிசையமைப்பேயே குரோமோசோம் தொகுப்பு வரைபடம் (Karyotype) என்று அழைக்கப்படுகிறது. குரோமோசோம்களில் உள்ள பட்டை அமைப்பின் மூலம் குரோமோசோம்களின் அமைப்பு மற்றும் வேறுபாட்டை அறியமுடிகிறது 

குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள்

• பாலினங்களை (ஆண் மற்றும் பெண்) அடையாளம் காண உதவுகின்றது.

• நீக்கம், இரட்டித்தல், இடம்பெயர்தல் மற்றும் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகின்றது.

• குரோமோசோம் குறைபாடுகளான ஒழுங்கற்ற பன்மயம் (Aneuplidy) போன்றவற்றை கண்டறிய பயன்படுகின்றது.

• சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம் உறவுகளை கணிக்க உதவுகின்றது.

• இத்தொழில்நுட்பத்தின் மூலம் மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம் 

மனிதனின் குரோமோசோம் தொகுப்பு வரைபடம்

சென்ட்ரோமியரின் இடம் மற்றும் இரு கரங்களின் ஒப்பீட்டு நீளம் இவற்றின் அடிப்படையில் மனித குரோமோசோம்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவையாவன: மெட்டா சென்ட்ரிக், துணைமெட்டாசென்ட்ரிக் மற்றும் அக்ரோசென்ட்ரிக் ஆகும். குரோமோசோம்களின் புகைப்படத்தை அவற்றின் நீளத்தை அடிப்படையாக கொண்டு இறங்குவரிசையில் A முதல் G வரை குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன (படம் 4.5).


Tags : Preparation of Karyotype, Applications of Karyotyping - Principles of Inheritance and Variation குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரிக்கும் முறை, குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்.
12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation : Karyotyping Preparation of Karyotype, Applications of Karyotyping - Principles of Inheritance and Variation in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : குரோமோசோம் தொகுப்பு வரைபடம் - குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரிக்கும் முறை, குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்