மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - மரபுக்கால் வழித்தொடர் பகுப்பாய்வு | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation
மரபுக்கால் வழித்தொடர் பகுப்பாய்வு (Pedigree Analysis)
மரபுக்கால் வழித்தொடர் என்பது பொருத்தமான மரபுக் குறியீடுகளைக் கொண்டு வரையப்பட்ட ஒரு குடும்ப மரமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட புறப் பண்புகளின் மரபுக்கடத்தல் வழிகளை கண்டறியலாம். ஒரு குடும்பத்தொடரில் பண்புகள் எவ்வாறு கடந்த பல தலைமுறைகளாக தோன்றுகின்றன என்பதைப் பற்றிய படிப்பே மரபுக் கால்வழித்தொடர் பகுப்பாய்வு எனப்படும் (படம் 4.6).
மரபியல் குறைபாடுகள்
மரபியல் குறைபாடுகள் என்பவை ஒரு நோய் அல்லது சின்ட்ரோம் ஆகும். இவை ஒரு உயிரியின் தனிப்பட்ட டி.என்.எ வின் இயல்பற்ற பிறழ்நிலை தன்மையால் அல்லது கோளாறுகளால் உருவாகின்றன. ஒருமரபணுவில் ஏற்படும் சிறு திடீர்மாற்றம் முதல் ஒரு குரோமோசோம் தொகுதி அல்லது ஒரு முழுமையான குரோமோசோமுடன் சேர்த்தல் அல்லது இழத்தல் வரையிலான பரந்த வீச்சை மரபியல் குறைபாடுகள் என்கிறோம். மரபியல் குறைபாடுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன மென்டலியன் குறைபாடுகள் மற்றும் குரோமோசோம் குறைபாடுகள்.