நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary

   Posted On :  26.08.2023 09:09 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ---------------

அ) குடியரசுத் தலைவர்

ஆ) நாடாளுமன்றம்

இ) உச்ச நீதிமன்றம்

ஈ) பிரதம அமைச்சர்

[விடை: இ) உச்ச நீதிமன்றம்]

 

2. ------------------ க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.

அ) குடிமக்கள்

ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்

இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

[விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்]

 

3. கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?

அ) முதன்மை அதிகார வரம்பு

ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு

இ) ஆலோசனை அதிகார வரம்பு

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: அ) முதன்மை அதிகார வரம்பு

 

4. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?

அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்

ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்

இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்

ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்

[விடை: இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்]

 

5. பொதுநல வழக்கு முறை இந்தியாவில் --------------- ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அ) உச்சநீதிமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) அரசியல் கட்சிகள்

ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்

[விடை: அ) உச்சநீதிமன்றம்]

 

6. இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு

[விடை: அ) ஒன்று]

 

7. உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்

அ) சண்டிகர்

ஆ) பம்பாய்

இ) கல்கத்தா

ஈ) புதுதில்லி

[விடை: ஈ) புதுதில்லி]

 

8. FIR என்ப து

அ) முதல் தகவல் அறிக்கை

ஆ) முதல் தகவல் முடிவு

இ) முதல் நிகழ்வு அறிக்கை

ஈ) மேற்கூறிய எவையுமில்லை

[விடை: அ) முதல் தகவல் அறிக்கை]

 

9. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ------------------------------ என அழைக்கப்படுகின்றன.

 அ) மாவட்ட நீதிமன்றங்கள்

ஆ) அமர்வு நீதிமன்றம்

இ) குடும்ப நீதிமன்றங்கள்

ஈ) வருவாய் நீதிமன்றங்கள்

[விடை: ஆ) அமர்வு நீதிமன்றம்]

 

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1 கல்கத்தா நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.

2. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரம், மற்றும் நடுநிலைத்தன்மை உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.

3. புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான மாண்டெஸ்கியூ "ஒரு சுதந்திரமான நீதித்துறை" என்ற கருத்தை முன்மொழிந்தார்.

4. உரிமையியல்  சட்டங்கள் பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.

5. பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் தர்மத்தின் ன்படி நீதியை வழங்கின.

 

III பொருத்துக

 

1 உச்ச நீதிமன்றம் - சமூக கடமைகள்

2 உயர் நீதிமன்றம் - விரைவான நீதி

3 லோக் அதாலத்- இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்

4 சர் எலிஜா இம்ஃபே - மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்

5 ஸ்மிருதி - முதல் தலைமை நீதிபதி

 

விடைகள்

1 உச்ச நீதிமன்றம் - இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்

2 உயர் நீதிமன்றம் - மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்

3 லோக் அதாலத் - விரைவான நீதி

4 சர் எலிஜா இம்ஃபே - முதல் தலைமை நீதிபதி

5 ஸ்மிருதி - சமூக கடமைகள்

 

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக


1. 1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டது. விடை: தவறு

2. துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன. விடை: சரி

3. 1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது. விடை: சரி

4. சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும். விடை: தவறு

5. இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும். விடை: சரி

6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கிறது. விடை: சரி

 

V சரியான கூற்றைத் தேர்ந்தெடு


1. பின்வரும் கூற்றை ஆராய்க.

i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.

ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது. மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/ கூற்றுகள் சரியானவை

அ) i மட்டும்

ஆ) ii மட்டும்

இ) i மற்றும் ii

ஈ) இரண்டும் இல்லை

விடை: இ) i மற்றும் ii

 

2. பின்வரும் கூற்றை ஆராய்க

i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.

ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862 இல் நிறுவப்பட்டது.

iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை

அ) i மட்டும்

ஆ) ii மற்றும் iii மட்டும்

இ) i, ili மட்டும்

ஈ) அனைத்தும்

விடை: ஈ) அனைத்தும்

 

3. இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.

i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IVவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.

iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது.

iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

அ) i

ஆ) ii

இ) iii

ஈ) iv

விடை: இ) iii

 

4. கூற்று: உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.

காரணம்: இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

விடை: இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

5. ஆம் / இல்லை எனக் கூறுக.

அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம். விடை: ஆம்

ஆ) பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர். விடை: இல்லை

இ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர். விடை: ஆம்

ஈ) அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது. விடை: ஆம்

 

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

 

1. நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?

> நீதித்துறை அரசின் மூன்றாவது அங்கமாகும்.

> இது மக்களின் உரிமைகளையும். சுதந்தரத்தையும் பாதுகாக்கிறது.

> இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. எனவே நமக்கு நீதித்துறை தேவைப்படுகிறது.  

 

2. இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?

> உச்ச நீதிமன்றம்

> உயர் நீதிமன்றம்

> மாவட்ட நீதிமன்றம்

> துணை நீதிமன்றம்

 

3. சட்டம், நீதித்துறை - வேறுபடுத்துக.

சட்டம்: இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

நீதித்துறை: சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.  

 

4. மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக.

> விரைவான நீதியை வழங்க லோக் அதாலக் என்ற மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

> இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.

> ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. ஒரு சமூக பணியாளர். ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும்.

> வழக்குரைஞர் இல்லாமல் வழக்குகள் முன் வைக்கப்படுகின்றன.

> இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன

 

5. நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?

> நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களின் இடர்களைத் தீர்க்கும் ஒன்றாக இருக்கும்.

> இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வழி செய்கிறது.

 

VII விரிவான விடையளி


1. நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக.



2. உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் - வேறுபடுத்துக.



3. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி.

அ. முதன்மை அதிகார வரம்பு:

உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்பெற்றுள்ளது. மத்திய அரசிற்கும் ஒருமாநிலம் அல்லது அதற்குமேற்பட்டமாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.

ஆ. மேல் முறையீட்டு அதிகார வரம்பு:

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இ. ஆலோசனை அதிகார வரம்பு:

குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

ஈ. நீதிப் பேராணை அதிகார வரம்பு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்ச நீதிமன்றமும் சட்டப்பிரிவு 226ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.

உ. ஆவண நீதிமன்றம் :

இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது. மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

ஊ. சிறப்பு அதிகாரங்கள்:

இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது.

 

VIII செயல்திட்டம் மற்றும் செயல்பாடு


1. விவாதி: ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது அவசியமா? இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

2. மாதிரி நீதிமன்ற அறை அமர்வுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்கமைக்கவும் (ஆசிரியரின் உதவியுடன் ஒரு வழக்கை எடுத்து விவாதிக்கலாம்).
Tags : The Judiciary | Chapter 7 | Civics | 8th Social Science நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary : Questions with Answers The Judiciary | Chapter 7 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை : வினா விடை - நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை