அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நீதித்துறை | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary
அலகு -7
நீதித்துறை
கற்றலின்
நோக்கங்கள்
>நீதித்துறையின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிதல்
>இந்திய நீதித்துறையின் படிநிலை அமைப்பினைப் புரிந்து கொள்ளுதல்
>உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் சார்நீதிமன்றங்கள் ஆகியவற்றின்
அதிகார வரம்பை விளக்குதல்
>சுதந்திரமான நீதித்துறையின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல்
>உரிமையியல் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் இடையிலான
வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்
"நீதித்துறையின்
உயர்வே அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவீடாகும்"
அறிமுகம்
ஒரு நாட்டின்
நீதி அமைப்பு அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய திறனுடன் இருக்க வேண்டியது
அவசியமாகிறது. இந்தியா ஒன்றிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் ஓர் அங்கமாக நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நீதியை நிர்வகித்தல்,
தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்
மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.
சட்டம்: இது
மக்களை ஆள்வதற்கு] ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு
ஆகும்.
நீதித்துறை: சட்டப்படி,
ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.