Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | விகிதம் மற்றும் விகித சமம்

பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - விகிதம் மற்றும் விகித சமம் | 6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion

   Posted On :  20.11.2023 11:40 pm

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்

விகிதம் மற்றும் விகித சமம்

கற்றல் நோக்கங்கள் ● விகிதங்களின் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளுதல். ● விகிதத்தின் குறியீட்டைப் பயன்படுத்துதல், விகிதங்களைச் சுருக்குதல். ● கொடுக்கப்பட்ட விகிதத்திற்கு ஏற்ப ஓர் அளவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தல். ● விகிதத்திற்கும் விகித சமத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை அறிதல். ● அலகு முறையைப் பயன்படுத்தி, விகிதக் கணக்குகளைத் தீர்த்தல்.

இயல் 3

விகிதம் மற்றும் விகித சமம்



கற்றல் நோக்கங்கள்

விகிதங்களின் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்.

விகிதத்தின் குறியீட்டைப் பயன்படுத்துதல், விகிதங்களைச் சுருக்குதல்.

கொடுக்கப்பட்ட விகிதத்திற்கு ஏற்ப ஓர் அளவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தல்.

விகிதத்திற்கும் விகித சமத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை அறிதல்.

அலகு முறையைப் பயன்படுத்தி, விகிதக் கணக்குகளைத் தீர்த்தல்.


மீள்பார்வை

1. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?


விடை: () 10/5 

2.  இன் சமான பின்னம்__________.


விடை: ) 7/49

3. கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக.


(i) 5/8 > 1/10

(ii) 9/12 < 3/4

4. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணங்களில் பங்கு நீல வண்ணம் உடையது என அன்பன் சொல்கிறான். இது சரியா?


நீல வண்ணம் : 4/6

விடை: தவறு

5. ஜோசப் வீட்டில் ஒரு பூந்தோட்டம் இருக்கிறது. இதில் பங்கு பூக்கள் சிவப்பாகவும் மற்றவை மஞ்சளாகவும் உள்ளவாறு ஒரு படம் வரைக.

6. மலர்க்கொடியிடம் 10 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. அவள் 4 ஆரஞ்சுப் பழங்களை உண்டுவிட்டால், உண்ணாத பழங்களின் பின்னம் என்ன

விடை: 6/10

7. விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி அங்குலமும், மற்றொன்று அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?

1/4 = 2/8 

2/8 < 3/8

விடை: 3/8 அங்குலம் செடி



அறிமுகம்

இரண்டு அளவுகளை ஒப்பிடும் சூழ்நிலை பல இடங்களில் நாள்தோறும் நமக்கு ஏற்படுகிறது. நமது உயரங்கள், எடைகள், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வண்டிகளின் வேகம், கடந்த தொலைவு, வங்கிக் கணக்கிலுள்ள தொகை போன்ற பலவற்றை நாம் ஒப்பிடவேண்டிவருகிறது. பெரும்பாலும், ஒப்பீடானது ஒரே வகையான அளவுகளின் மீது மேற்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு அளவுகளை ஒப்பிடுவது இல்லை. ஒரு மனிதனின் உயரத்தை மற்றொரு மனிதனின் வயதோடு ஒப்பிடுவது பொருளுள்ளதாக இருக்காது. எனவே, ஒப்பிடுவதற்கான திட்ட அளவீடு தேவைப்படுகிறது

ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவதை விகிதம் என்கிறோம்.


எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் விகிதம்


ஒரு சதுர கி.மீ இக்கு 555 நபர்கள்


உயரங்கள், எடைகள் ஒப்பிட விகிதம் பயன்படுகிறது

Tags : Term 1 Chapter 3 | 6th Maths பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion : Ratio and Proportion Term 1 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம் : விகிதம் மற்றும் விகித சமம் - பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்