இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
நினைவில் கொள்க
● மாறி என்பது வெவ்வேறு எண் மதிப்புகளை ஏற்கும் அளவீடாகும். இதை a, b, c, d, ... x, y, z என்ற சிறிய ஆங்கில எழுத்துகளால் குறிக்கலாம்.
● மாறிலி என்பது ஒரு நிலையான மதிப்பை ஏற்கும் எண்ணுரு / எழுத்துரு ஆகும்.
● நடைமுறைச் சூழல்களில் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்த மாறிகளைப் பயன்படுத்துகிறோம்.
● எண்ணியல் மற்றும் வடிவியலில் உள்ள பல்வேறு விதிகளைப் பொதுமைப்படுத்தி வெளிப்படுத்த மாறிகளைப் பயன்படுத்தலாம்.
இணையச் செயல்பாடு
இயற்கணிதம்
இறுதியில் கிடைக்கப்பெறும் படம்
படி– 1 : இணைய உலாவியை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை copy செய்து paste செய்யவும். (அல்லது) கீழே கொடுக்கப்பட்டுள்ள உறலியை தட்டச்சு செய்யவும். (அல்லது) கொடுக்கப்பட்டுள்ள துரித துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
படி– 2 : கணித பயிற்சி புத்தகத்தில் "ஆறாம் வகுப்பு இயற்கணிதம் தோன்றும். இங்கே பற்பல பயிற்சி தாள்கள் இருப்பதைக் காணலாம். அங்கு உள்ள "Linear Equation Generator" என்ற பகுதியை திறக்கவும்.
படி –3 : இந்த பக்கத்தில் "difficulty level"–ஐ தேர்ந்தெடுக்கவும். "Linear equation" என்ற பகுதி மேலே தோன்றும் அங்கே உங்கள் விடையை “x” என்ற பெட்டியில் டைப் செய்து enter பொத்தானை சொடுக்கவும்.
படி –4 : உங்கள் விடை சரியானதாக இருந்தால் "Correct!!!" எனத் திரையில் தோன்றும். புதிய கணக்குகளை செய்ய “New Problem” என்ற பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
செயல்பாட்டிற்கான உரலி
இயற்கணிதம்: – https://ggbm.at/GUafZjxr