Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கணக்குகளுக்கான தீர்வுகள்: வெப்ப வேதிச்சமன்பாடுகள் (Thermochemical equations)
   Posted On :  26.12.2023 06:06 am

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

கணக்குகளுக்கான தீர்வுகள்: வெப்ப வேதிச்சமன்பாடுகள் (Thermochemical equations)

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : வெப்ப வேதிச்சமன்பாடுகள் (Thermochemical equations)

கணக்கு 7.2

C2H5OH (l) + 3O2 (g) 2CO2 (g) + 3 H2O (l)

என்ற வினைக்கு திட்ட என்தால்பி மாற்ற மதிப்பை கணக்கிடுக. C2H5OH (l), CO2 (g) மற்றும் H2O (l) ஆகியவற்றின் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே 277, -393.5 மற்றும் -285.5 kJ mol-1 வரையறையின் படி O2(g) ன் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்பு பூஜ்ஜியமாகும்.

தீர்வு


= [-787 - 856.5] - [-277]

= -1643.5 + 277

ΔHr0 = -1366.5 kJ



கணக்கு 7.3

128.0 கிராம் ஆக்ஸிஜனை 0°C லிருந்து 100°C க்கு வெப்பப்படுத்தும் போது ΔU மற்றும் ΔH மதிப்புகளை கணக்கிடுக. தோராயமாக CV மற்றும் CP மதிப்புகள் முறையே 21 J mol-1 K-1 மற்றும் 29 J mol-1 K-1 (வேறுபாடானது 8 J mo-1 K-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்)

தீர்வு

இங்கு

ΔU = n CV (T2 – T1)

ΔH =  n CP (T2 – T1)

மேலும்

n = 128 / 32 = 4 மோல்கள்

T2 = 100°C = 373K ; T1 = 0°C = 273K

ΔU = n CV (T2 – T1)

ΔU = 4 × 21 × (373 - 273)

ΔU = 8400 J

ΔU = 8.4 kJ

ΔH = n CP (T2 – T1)

ΔH =  4 × 29 × (373 - 273)

ΔH = 11600 J

ΔH = 11.6 kJ


11th Chemistry : UNIT 7 : Thermodynamics : Solved Example Problem: Thermochemical Equations in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : கணக்குகளுக்கான தீர்வுகள்: வெப்ப வேதிச்சமன்பாடுகள் (Thermochemical equations) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்