Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பாடச்சுருக்கம்: இயற் மற்றும் வேதிச்சமநிலை
   Posted On :  28.12.2023 07:44 am

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

பாடச்சுருக்கம்: இயற் மற்றும் வேதிச்சமநிலை

நம் அன்றாட வாழ்வில் பல இயற் மற்றும் வேதி மாற்றங்களை கண்டுணருகிறோம்.

பாடச்சுருக்கம்

நம் அன்றாட வாழ்வில் பல இயற் மற்றும் வேதி மாற்றங்களை கண்டுணருகிறோம்.

சில வேதிவினைகளில் ஒரு குறிப்பிட்ட நிலையில் பின்னோக்கு வினையின் வேகமும் முன்னோக்கு வினையின் வேகமும் சமமாக அமையும். இந்நிலையில் வினையாது சமநிலைத் தன்மையை பெற்றுள்ளது என அறியலாம்.

சமநிலையில் வெவ்வேறு வகைகள் உள்ளன

இயற்சமநிலை.

வேதிச்சமநிலை.

மீளும் தன்மையுடைய வேதிவினைகளில் சமநிலையை அடைந்த பின்னர் வினைகள் நிகழாமல் நின்று விடுவதில்லை. சமநிலையில் முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கியவினை ஆகிய இரண்டும் சமமான வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே வேதிச்சமநிலை இயங்குச் சமநிலை என அழைக்கப்படுகிறது.

நிறை தாக்க விதிப்படி, எந்த ஒரு நேரத்திலும், கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வேதிவினையின் வேகம் என்பது அந்நேரத்தில், உள்ள வினைபடுபொருள்களின் மோலார் செறிவுகளின் பெருக்கற் பலனுக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.

வினை எந்த அளவிற்கு நிகழும் என்பதை சமநிலை மாறிலி Kc யின் மதிப்பை பயன்படுத்தி நாம் அறியலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், வினையானது எந்த அளவிற்கு வினைவிளை பொருள் உருவாகும் திசையில் நிகழ்கிறது என்பதனை கண்டறிய உதவுகிறது.

சமநிலையற்ற நிலையில், கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ளவாறு வினைவிளைப் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும், வினைப்படு பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதமடிகளின் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் வினை குணகம் எனப்படுகிறது.

லீ - சாட்லியர் தத்துவப்படி, சமநிலையில் உள்ள அமைப்பின் மீது ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும் போது, அப்பாதிப்பினால் ஏற்படும் விளைவினை ஈடு செய்யும் திசையில் சமநிலை தன்னைத் தானே நகர்த்தி அவ்விளைவினை சரி செய்து கொள்ளும்

வெப்பநிலை, அழுத்தம் மற்றும் செறிவு ஆகியவற்றை மாற்றியமைப்பதால் சமநிலையில் உள்ள அமைப்பின்போது ஏற்படும் விளைவினை லீ-சாட்லியர் பிரான் தத்துவத்தினைப் பயன்படுத்தி தீர்மானிக்க இயலும்.

வெப்பநிலையினைப் பொறுத்து சமநிலை மாறிலியின் மதிப்பு எவ்வாறு அமைகிறது என்பதற்கான அளவியல் அடிப்படையிலான தொடர்பினை வாண்ட் ஹாப் சமன்பாடு தருகிறது.


கருத்து வரைபடம்




இணையச் செயல்பாடு

ஒரு சமநிலைச் செயல்முறையில் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் விளைவு

இச்செயல்முறையை பயன்படுத்தி, அம்மோனியா தொகுத்தலில் (ஹேபர் முறை) உள்ள உட்கூறுகளின் செறிவுகளின் மீதான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் விளைவுகளை நாம் தீர்மானிக்க முடியும்.

http://www.freezeray.com/ flashFiles/a mmoniaConditions.htm 

உரலிக்குச் செல்க அல்லது வலது புறத்தில் உள்ள விரைவுத் துலக்கக் குறியீட்டினை (QR code) ஸ்கேன் செய்க.

நிலைகள்:

இணையப் பக்கத்தினை திறந்து கொடுக்கப்பட்ட உரலியை(URL) தட்டச்சு செய்க (அல்லது) விரைவுத் துலக்கக் குறியீட்டினை (QR code) ஸ்கேன் செய்க.

அம்மோனியா தொகுத்தலில் நிகழும் சமநிலை வினை மற்றும் உட்கூறுகளின் ஒப்புமைச் செறிவுகளை வலைப்பக்கம் காட்டும். காட்சி உருவமைப்பு மற்றும் உண்மையான செறிவு மதிப்புகள் பெட்டி 1 ல் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது, பெட்டி 2 ல் காட்டப்பட்டுள்ள நழுவியைப் பயன்படுத்தி அழுத்தம் அல்லது வெப்பநிலையை மாற்றுக.

நீங்கள் நழுவியை நகர்த்தும் போது, வினைப்பொருட்கள் மற்றும் வினைவிளைப் பொருட்களின் சமநிலைச் செறிவுகளில் நிகழும் மாற்றத்தை நீங்கள் காணமுடியும்.

சமநிலையில் உள்ள அமைப்பின்மீது பாதிப்பை ஏற்படுத்தினால், அமைப்பானது பாதிப்பினால் உண்டான விளைவை தனக்குத் தானே சரிசெய்துகொள்ளும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.


11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Summary - Chemistry: Physical and Chemical Equilibrium in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : பாடச்சுருக்கம்: இயற் மற்றும் வேதிச்சமநிலை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை