Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | வாண்ட் ஹாப் சமன்பாடு
   Posted On :  28.12.2023 01:56 am

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

வாண்ட் ஹாப் சமன்பாடு

சமநிலை மாறிலியின் மதிப்பானது. வெப்பநிலையினைப் பொறுத்து அமைகிறது. இதற்கான அளவியல் ரீதியான தொடர்பினை இச்சமன்பாடு தருகிறது. திட்டக்கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கும் சமநிலைமாறிலிக்கும் இடையேயானத் தொடர்பு.

வாண்ட் ஹாப் சமன்பாடு

சமநிலை மாறிலியின் மதிப்பானது. வெப்பநிலையினைப் பொறுத்து அமைகிறது. இதற்கான அளவியல் ரீதியான தொடர்பினை இச்சமன்பாடு தருகிறது. திட்டக்கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கும் சமநிலைமாறிலிக்கும் இடையேயானத் தொடர்பு.

ΔGo = -RTln K ----- (1)

ΔGo = ΔHo - TΔSo ------ (2)

என நாம் அறிவோம்.

(2) (1) ல் பிரதியிட

-RTln K = ΔHo - TΔSo 

மாற்றியமைக்க


சமன்பாடு (3) வெப்ப நிலையினைப் பொறுத்து வகையீடு செய்ய


சமன்பாடு (4) ஆனது வாண்ட்ஹாஃப் சமன்பாட்டின் வகையீட்டு வடிவம் எனப்படுகிறது.

சமன்பாடு (4) T1 மற்றும்T2 வெப்பநிலைகளில் முறையே K1 மற்றும் K2 ஆகிய சமநிலை மாறிலிகள் எல்லைகளுக்கிடையே தொகையீடு செய்க.

சமன்பாடு (5) ஆனது வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின் தொகையீட்டு வடிவமாகும்.

கணக்கு:

25° C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp = 0.0260 மற்றும் ΔH = 32.4KJmol-1 37o C வெப்பநிலையில் Kpன் மதிப்பினைக் கண்டறிக.

தீர்வு:

T1 = 25 + 273 = 298 K

T2 = 37 + 273 = 310 K

ΔH = 32.4 KJmol-1 = 32400 Jmol-1

R = 8.314 JK-1 mol-1

KP1 = 0.0260

K P2 = ?



தன் மதிப்பீடு

5. 298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15

N2O4 (g) 2NO2 (g)

வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 100° C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.

தீர்வு:

N2O4 (g) 2NO2 (g)

T1 = 298 K     KP1 = 0.15

T2 = 100oC = 100 + 273 = 373K;

KP2 = ?


KP2 = 104.7 × 0.15

KP2 = 15.705


உங்களுக்குத் தெரியுமா?

கருவுற்றிருக்கும் பெண்களில் தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் இரத்தத்திற்கிடையே ஆக்சிஜன் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்படுகிறது?


கருவுற்றிருக்கும் பெண்களில், கருக்குழந்தை மற்றும் தாயின் இரத்த நாளங்கள் மிக அருகாமையில் அமைந்திருக்கும் நஞ்சுக் கொடியின் வழியே கருக்குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. கருக்குழந்தை மற்றும் தாயின் ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் மீள்முறையில் பின்வருமாறு பிணைகிறது,

Hb(தாய்) + O2   HbO2 (தாய்)

Hb(கருக்குழந்தை) + O2   HbO2 (கருக்குழந்தை)

மேற்கண்டுள்ள இரு சமநிலைகளில், கருக்குழந்தையின் ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் இணைதலுக்கான சமநிலை மாறிலி அதிகமாக உள்ளது. பெரியவர்களின் ஹீமோகுளோபினுடன் ஒப்பிடும்போது கருக்குழந்தையின் ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் அதிக நாட்டத்தினைக் கொண்டிருப்பதால், தாயின் இரத்தத்திலிருந்து கருக்குழந்தையின் ஹீமோகுளோபினிற்கு ஆக்சிஜன் எளிதாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Van't Hoff Equation in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : வாண்ட் ஹாப் சமன்பாடு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை