Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மனித உரிமைகள் என்றால் என்ன?
   Posted On :  10.09.2023 11:04 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

மனித உரிமைகள் என்றால் என்ன?

ஐ.நா. சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது. "இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.

மனித உரிமைகள் என்றால் என்ன?

.நா. சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது. "இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும். எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பரபட்சம் காட்டக் கூடாது.

மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது

மனித உரிமையின் வரலாற்று வேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும், அக்டோபர் 24 1945இல் .நா. சபை தொடங்கப்பட்டது.

.நா. சபை நாள் அக்டோபர் 24

மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (The Universal Declaration of Human Rights) வகிக்கின்றது.

 இறுதிக்கு வந்த இன ஒதுக்கல் கொள்கை


சிறையில் 27 வருடங்கள் கழித்த மண்டேலா விடுதலையின் போது கைகளை உயர்த்தும் காட்சி

இன ஒதுக்கல் (Apartheid) தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு ஆகும். வசிப்பிடங்களும் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான வெள்ளை இனத்தவர் அதிக எண்ணிக்கையிலான கறுப்பினத்தவரின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்த இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினர்.

நெல்சன் மண்டேலா இன ஒதுக்கல் எனப்படும் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய போது சிறையில் தள்ளப்பட்டார்.

உள்நாட்டிலும், உலக நாடுகளிடமிருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகியபோது இனரீதியான உள்நாட்டு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தினால், தென்னாப்பிரிக்க தலைவர் F.W.டி கிளார்க் 1990-ல் அவரை விடுதலை செய்தார்.

மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது. 1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுது. மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று அந்நாட்டின் தலைவரானார்.

9th Social Science : Civics: Human Rights : What are Human Rights? in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : மனித உரிமைகள் என்றால் என்ன? - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்