நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

VII. விரிவான விடையளி.

1. புவி அமைப்பை விவரி.

விடை:


புவியின் அமைப்பு புவியின் உள்ளமைப்பு

மேலோடு

கவசம்

கருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலோடு: (5 கி.மீ. முதல் 30 கி.மீ. தடிமன்)

புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. இதில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (Ai) அதிகம் காணப்படுவதால் சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.

புவி மேலோடு, கண்டமேலோடு, கடலடி மேலோடு என இருவகைப்படும். (கடலடியை விட கண்டமேலோடு அதிக தடிமன் கொண்டது)

கவசம்: (2900 கி.மீ. தடிமன்)

புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதில் சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg) அதிகம் காணப்படுவதால், ‘சிமா' (SIMA) என அழைக்கப்படுகிறது.

மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. (உருகிய நிலை பாறைக்குழம்புமாக்மா). கருவம்: (3480 கி.மீ. தடிமன்)

கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். மிகவும் வெப்பமானது. இதில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.

உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது. புவியீர்ப்பு விசை, காந்தப்புலம் உருவாகிறது.

 

2. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.

விடை:

புவி அகச்செயல் முறைகள்:

புவியின் உட் பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகள் அகச் செயல் முறைகள் எனப்படும். இவ்விசைகள் புவி நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.

புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவி மேலோட்டின் கீழ் காணப்படும் பொருட்கள் வெளித்தள்ளப்படுகின்றன.

புவித்தட்டுகள் நகர்வு, புவி அதிர்வு (நிலநடுக்கம்), எரிமலை வெடிப்பு ஆகியவை அகச்செயல் முறைகள் ஆகும்.

புவிபுறச்செயல் முறைகள்:

புவியில் உள்ள பொருட்களின் மீது ஆழத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருட்கள் மீது மாற்றத்தை உண்டாக்கும் செயல்முறைகள்புவி புறச் செயல்முறைகள்' எனப்படும்.

ஆறுகள், பனியாறுகள், காற்று, கடலலைகள் போன்ற விசைகள் புவிபுறச் செயல் காரணிகளாகும். புறச் செயல் காரணிகள் அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய செயல்களைச் செய்கின்றன.

 

3. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி.

விடை:

எரிமலைகள்:

புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே 'எரிமலை வெடிப்பு' எனப்படும். செயல்படும் காலத்தின் அடிப்படையில்

i. செயல்படும் எரிமலை

ii. உறங்கும் எரிமலை

iii. தணிந்த எரிமலை என மூவகைப்படும்.

i செயல்படும் எரிமலை:

நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள்செயல்படும் எரிமலைகள்' எனப்படுகின்றன.

.கா. செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

ii. உறங்கும் எரிமலை

நீண்டகாலமாக எரிமலைச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள்உறங்கும் எரிமலை' எனப்படும். (திடீரென்று வெடிக்கும், உயிர்ச்சேதம், பெருட்சேதம் ஏற்படலாம்)

.கா. ஃபியூஜி எரிமலை - ஜப்பான்

iii. தணிந்த எரிமலை:

எந்த வித எரிமலைச் செயல்பாடுகளும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள்தணிந்த எரிமலைகள்' ஆகும்.

.கா. கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா

 

4. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

விடை:

எரிமலையின் விளைவுகள்:

நன்மைகள்:

எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது. மண்ணை வளமுள்ளதாக்கி வேளாண் தொழிலை மேம்படுகிறது.

எரிமலைப் பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.

உறங்கும் மற்றும் செயல்படும் எரிமலைகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

தீமைகள்:

எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன. பாறைக் குழம்பு பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதம் உண்டாக்குகிறது.

வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் உண்டாக்குகிறது.

சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து இடையூறையும் உண்டாக்குகிறது.

Tags : Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes : Write answers in a paragraph Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : விரிவான விடையளி - நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்