Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு ஒன்று

நிலக்கோளம் - 1  புவி அகச்செயல்பாடுகள்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை ............... என்று அழைக்கின்றோம்.

அ) கருவம்

ஆ) கவசம்

இ புவி மேலோடு

ஈ) உட்கரு

விடை:

இ) புவி மேலோடு


2. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை ............... என்று அழைக்கின்றோம்.

அ) கருவம்

ஆ) வெளிக்கரு

இ) கவசம்

ஈ) மேலோடு

விடை:  

ஆ) வெளிக்கரு


3. பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு ...

அ) புவிமேலோடு

ஆ) கவசம்

இ கருவம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை:  

ஆ) கவசம்


4. புவித்தட்டுகளின் நகர்வு ………………….. ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

அ) நீர் ஆற்றல்

ஆ) வெப்ப ஆற்றல்

இ அலையாற்றல்

ஈ) ஓத ஆற்றல்

விடை:  

ஆ) வெப்ப ஆற்றல்


5. ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி ................. நோக்கி நகர்ந்தது.

அ) வடக்கு

ஆ) தெற்கு

இ) கிழக்கு

F) மேற்கு

விடை:  

அ) வடக்கு


6. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ...................கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

அ) கோண்டுவானா

ஆ) லொரேசியா

இ) பாந்தலாசா

ஈ) பாஞ்சியா

விடை:  

அ) கோண்டுவானா


7. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல்............ எனப்படும்.

அ) மடிப்பு

ஆ) பிளவு

இ மலை

ஈ) புவி அதிர்வு

விடை:  

ஆ) பிளவு


8. எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை ............. என்று அழைக்கின்றோம்.

அ) எரிமலை வாய்

ஆ) துவாரம்

இ) பாறைக்குழம்புத் தேக்கம்

ஈ) எரிமலைக் கூம்பு

விடை:  

அ) எரிமலைவாய்


9. புவி அதிர்வு உருவாகும் புள்ளி ........................ என்று அழைக்கப்படுகிறது.

அ) மேல்மையம்

ஆ) கீழ்மையம்

இ) புவி அதிர்வு அலைகள்

ஈ) புவி அதிர்வின் தீவிரம்

விடை:  

ஆ) கீழ்மையம்

 

II. பொருத்துக.

1. உட்புறச்செயல்கள் - நில அதிர்வு அளவைப்படம்

2. கவசம் - புவித்தட்டு அமிழ்தல்

3. இணையும் எல்லை - எரிமலை வெடிப்பு

4 புவி அதிர்ச்சி - பசிபிக் பெருங்கடல்

5 கூட்டு எரிமலை – சிமா

 

விடை:  

1. உட்புறச்செயல்கள் - எரிமலை வெடிப்பு

2. கவசம் - சிமா

3. இணையும் எல்லை - புவித்தட்டு அமிழ்தல்

4 புவி அதிர்ச்சி - நில அதிர்வு அளவைப்படம்

5 கூட்டு எரிமலை – பசிபிக் பெருங்கடல்

 

 

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

1. i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்

ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.

iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்

அ) (i) உண்மையானது

ஆ) (ii) உண்மையானது

இ (iii) உண்மையானது

ஈ) (i), (ii) மற்றும் (iii) உண்மையானது

விடை:  

அ) (1) உண்மையானது


2. கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.

காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

ஆ) கூற்று சரி, காரணம் தவறு.

இ) கூற்று தவறு, காரணம் சரி.

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை:  

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி


3. கூற்று 1 :புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.

கூற்று II :கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.

அ) கூற்று | தவறு II சரி.

ஆ) கூற்று 1 மற்றும் II தவறு.

இ) கூற்று 1 சரி II தவறு.

F) கூற்று 1 மற்றும் II சரி.

விடை:  

ஈ) கூற்று 1 மற்றும் II சரி

Tags : Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes : One Mark Questions Answers Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்